alangudi-guru-koilil-dhosha-parigaram-seiya

அக்டோபர் 4 ஆம் தேதி குருபெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி ஆலங்குடியில் உள்ள குரு பரிகார தலமான அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை விழா செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த லட்சார்ச்சனை விழாவில் பங்கேற்று மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

தோஷ பரிகாரம் செய்ய நேரில் வர முடியாதவர்கள், தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் அதற்கான கட்டணம் ரூ.400-ஐ பணவிடை அல்லது வரைவோலை எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைத்து, பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. டிமாண்ட் டிராப்ட் எடுப்போர் உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கியில் (திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கிளை) மாற்றத்தக்க வகையிலோ எடுத்து உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேசுவர சுவாமி திருக்கோயில், (குரு பரிகார ஸ்தலம்) ஆலங்குடி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் -612801 என்ற முகவரிக்கு எடுத்து அனுப்பலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *