thirupathy-bramorsavam-starts

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை அங்குரார்ப்பணம் தொடங்குகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. 13ந் தேதி முதல் 21-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கு உண்டான அங்குரார்ப்பணம் நாளை இரவு நடைபெற உள்ளது.

வருடாந்திர பிரம்மோத்சவத்தின் முக்கியமாக வாகன சேவைகளான 17 தேதி கருட சேவை, 18 தேதி மாலை தங்கரதம், 20ஆம் தேதி தேரில் பக்தர்களுக்கு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 21ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவத்தையொட்டி 13ம் தேதி மாலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. பின்னர் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் பங்கேற்று பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு சமர்ப்பிக்கவுள்ளார். திருப்பதியில் அடுத்த மாதம் அக்டோபர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *