poopallakil-irupidam-thirumbinar-murugan

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மேளதாளம் முழங்க பூப்பல்லக்கில் தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்துக்கு திரும்பினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. இந்த விழாவில் பாண்டிய மன்னராக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்க மதுரைக்கு சென்றார். அங்கு நேற்று மாலை 5 மணி வரை சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு திரும்பினார். அப்போது மழைபெய்தது. மழையை பொருட்படுத்தாமல் சாமிக்கு நெடுகிலும் திருக்கண் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர். மழையோடு முருகப்பெருமான் இருப்பிடம் சேர்ந்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *