noynodigalaith-theerkum-garuda-kizhangu

கருடக்கிழங்கு என்பது ஒரு மூலிகையாகும். இது பார்ப்பதற்கு கருடன் சிறகை விரித்துப் பறப்பைதைப் போல் இருக்கும். இந்தக் கிழங்கை வீட்டு வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் எதுவும் வராது. திருஷ்டி தோஷம் இருந்தால் நீங்கிவிடும். கருடக் கிழங்குக்கு அந்த அளவுக்கு சக்தி உள்ளது. 

நாட்டு மருந்து கடைகளில் கருடக்கிழங்கு விற்பனை செய்யப்படும். ஆனால் அதிலும் போலியான கருட கிழங்குகள் வந்துவிட்டன. எனவே பார்த்து வாங்க வேண்டும். திருமுல்லை வாயலில் பச்சையம்மன் கோவில் அருகே ஒரு கடையில் சதுரகிரியில் இருந்து வரும் கருடக்கிழங்கு விற்பனை செய்யப்படுகிறது. கருடக்கிழங்கு கையில் வந்தாலே புது சக்தி வந்துவிட்டதாக அர்த்தம். குடும்பத்தில் நல்ல காரியங்களை நடத்தி வைக்கும் ஆற்றல் கருடக்கிழங்குக்கு உண்டு. கருடன் ஆசீர்வாதத்தால் வரும் இந்த கிழங்கை கிடைத்தால் தவற விடாதீர்கள். வீட்டில் உரிய பூஜைகள் நடத்தி அதற்கு தகுந்த மரியாதை செய்யுங்கள். கருட கிழங்கு நல்லதை உங்களுக்கு கொடுக்கும். கருடக்கொடி மிகவும் விசித்திரமானது. கருடக் கொடியைக் கையில் வைத்திருப்பவர்கள் நோய், நொடி, செய்வினை, பில்லி, சூனியங்கள் முதலியவைகளுக்கு உட்படமாட்டார்கள்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *