thirupathy-dharisana-muraiyil-mattram

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சனிக்கிழமை அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 5 நாட்களுக்கு யாக பூஜைகளுடன் 16-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *