aadi-krithigai-kandhanai-vazhipada-kavalaigal-vilagum

கிருத்திகை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்தது என்றாலும், ஆடி மாத கிருத்திகை மேலும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது. மேலும் அறுபடை வீடுகளில் திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாக வணங்கப்படுவதால். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள் போன்றவைகளெல்லாம் விலகி நன்மையளிக்கும் நாளாக கருதப்படுகிறது. மேலும் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் பெற்று வளம் பெறுவர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *