aadikrithigaiyai-munittu-swamimalaiku-sirappu-perundhu-yerpaadu

கும்பகோணத்தில் அமைந்துள்ளது ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தந்தைக்கு உபதேசம் செய்த மூர்த்திதலம் என சிறப்பு பெற்ற திருத்தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வருகிற 5-ம் தேதி காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும் இரவு 8 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.

விழாவினை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் சாமி தரிசனம் செய்யசிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் கும்பகோணம், திருவையாறு, ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் அரியலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் சுவாமிமலைக்கு இயக்கப்பட உள்ளது..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *