naalai-thirupathi-sannithaanam-12-mani-neram-moodapadavullathu

நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதி  12 மணி நேரம் மூடப்படவுள்ளது. நாளை இரவு 11.54 மணி முதல் சனிக்கிழமை காலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. பொதுவாக கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 4.15 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி நாளை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *