thingatkizhamaigalil-ucharikka-ugandha-slogam

 சந்திர தோஷங்கள் நிவர்த்தியடைய இந்த ஸ்லோகத்தை பௌர்ணமி திதியன்றும், திங்கட் கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும்  உச்சரித்து சுவாமியை வணங்கினால் தோஷம் விலகி நன்மை பெருகும்.

 

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.
சந்திர பகவான் துதி

வெண்ணிறமான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட  சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும்,  ஸ்ரீவத்ஸம் என்கிற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை வணங்குகிறேன்.  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *