adhisaya-vazhipadu

திருச்சி-கல்லணை ரோடு சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.

கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் சென்று கொண்டிருக்கும் போது சர்க்கார்பாளையத்தில் சற்று நேரம் இளைப்பாறியதாகவும், அப்போது அவரது கனவில் இறைவன் தோன்றி தமக்கு கோயில் அமைக்க கூறியதாகவும், அதனை தொடர்ந்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு கோயில் கட்டியதாகவும், பின்னர் கல்லணை கட்டப்பட்டதாகவும் வரலாறு.

இத்தகைய சிறப்பு வாய்ந்ததும், திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி கோயிலின் சார்பு கோயிலான, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை சிறப்பு வாய்ந்தது.

வருடத்தில் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ம்தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாகபடும்.

இச்சமயத்தில் இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.

3 நாட்கள் சூரியோதயத்தின் போது வழிபாடு நடைபெறுவதால் ஆலயத்தில் தங்கி வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *