2018-04-01-09-53-28

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வசந்த உற்சவம் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் இரண்டு நாட்களுக்கு முன் தினம் துவங்கியது.
வசந்த உற்சவத்தையொட்டி, உற்சவர்கள், கோவிலில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
உற்சவத்தின் நிறைவு நாளான இன்று திரேதா யுகக் கடவுளான சீதா தேவி சமேத ராமர், துவாபர யுகக் கடவுளான ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர், கலியுக தெய்வமான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி ஆகிய உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
இரவு மூன்று யுக தெய்வங்களின் திருவீதி உலா திருமலை கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *