2

அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் குறித்த பாடல் பாடிய கிரிக்கெட் வீரர் தோனியின் 2 வயது மகளை திருவிழாவின் போது சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில். கேரளாவில் புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த ‘அத்வைதம்’ என்ற திரைப்படத்தில், ‘ அம்பலப்புழா உண்ணிக் கண்ணனோடு நீ…’ என தொடங்கும் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியின் 2 வயது மகள் சிபா, இந்த பாடலை பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. தோனியே இதை படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயிலும் உலகளவில் பிரபலமாகி விட்டது. இதையடுத்து, கோயில் திருவிழாவின் போது தோனி மகள் சிபாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 14ம் தேதி கோயிலில் நடக்கும் 12 களபம் திருவிழாவின் போது தோனி மகளை அழைத்து கவுரவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *