2017-04-04-13-23-48

பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ராமானுஜருக்கு திங்கள்கிழமை விசேஷ திருமஞ்சனம் விழா நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மாதம்தோறும் திருவாதிரை திருநட்சத்திர தினத்தன்று ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை உற்சவர் ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *