2016-09-07-11-59-47

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களுக்கு செல்ல நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என நெல்லை மண்டல போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளான அதாவது செப்டம்பர் 17, 24–ந் தேதிகளிலும், அக்டோபர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு இரவில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பஸ் கட்டணத்தை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *