2016-08-27-15-39-01

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 2.70 கோடி ரூபாய் வசூலானது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து திரும்பும்போது, உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 2.70 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 67,261 பக்தர்கள் தரிசித்தனர். 38,578 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

தர்ம தரிசன பக்தர்கள் சுமார் 8 மணி நேர காத்திருப்புக்குப் பின் ஏழுமலையானை தரிசித்தனர். நடைபாதை பக்தர்களுக்கு 6 மணி நேரம் ஆனது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *