சென்னை வண்டலூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரன் கோவில் பிரசித்தி பெற்றதாகும், இங்கு புன்னகை தவழும் முகத்துடனும், துணைவியார் துணைவியார் சித்தரிணியுடன் காட்சி தருகிறார் குபேரன். மேலும் குபேர லிங்கம், லட்சுமி கணபதி, முத்துக்குமரன், ஆஞ்சநேயர், தனித்தனி சன்னதியில் நவகிரகங்கள் உள்ளன.
மகாலட்சுமி அம்சமண கோமாதாவிற்கு பராமரிப்பு கோ சாலையும் அமையப் பெற்றுள்ளது. பசுவிற்கு உணவளித்து குபேரனை வழிபட்டால் வீட்டில் லட்சுமி தாண்டவம் ஆடுவாள் என்பது ஐதீகம், செல்வத்திற்கு அதிபதி ஆகிய லட்சுமியும், அதனைக் காக்கும் குபேரணையும் தீப ஒளி திருநாளன்று வழிபடுவது சிறப்பாகும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முன் வண்டலூர் ரத்தினமங்கலத்தில் உள்ள' லட்சுமி குபேரனை வழிபட்டால் ஏழுமலையான் இடம் வைக்கப்படும் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை, அட்சய திருதி அன்று இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது அன்றைய தினம் குபேரனை தரிசித்து விட்டு தங்க ஆபரணங்கள் வாங்கினால் மேலும் மேலும் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்