உலகிலேயே முதலில் தோன்றிய சிவாலயம் எங்கு உள்ளது தெரியுமா ? இலங்கை மன்னனின் திருமணத்தடை நீக்கி பிள்ளை பெறு வரம் அளித்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவபெருமான் அருள் பாவிக்கும் திருக்கோவில்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவ ஆலயம் என கூறப்படுகிறது. ஸ்ரீ ராமபிரான் தோன்றிய காலத்தூள் சிறந்து விளங்கிய இதன் தொன்மை வாய்ந்த வரலாறை நாம் அறிவோம்"
இலங்கையை ஆண்ட ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே போனது, இதற்கான காரணம் குறித்து அவர் வேத விற்பனர்களிடம் கேட்டபோது. உலகம் தோன்றிய போது முதலில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டால் தடை நீங்கி திருமணம் கைகூடும் என"கூறியதை ஏற்று ராவணன். திரு உத்தர கோச மங்கை சுயம்பு லிங்கத்தை பக்தியுடன் வழிபட்டு, ஈசனை வேண்டியது பலனாக' மாண்டோதரியை தனது. துணையாக தேர்வு செய்து மனம் முடித்துக் கொண்டான் ராவணன். பின் நீண்ட காலம் புத்திர பாக்கியம் ஏற்படாததால், ராவணனின் வாக்குப்படி, மண்டோதரி சுயம்பு லிங்கத்தை வழிபட்டு புத்திரப் பாக்கியம் அடைந்தாள்'
உத்திர கோச மங்கை என தற்போது அழைக்கப்பட்டாலும், இதன் பண்டைய கால முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும்.
‘ இறைவன்" ராவணனுக்கு மங்கள நாள் அருளியதால், இங்குள்ள ஈசன் ‘மங்களநாதர்’ ஆனார். மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இறைவனை நோக்கி தவம் இருந்தாள். கருணை கொண்டு சிவபெருமான், அவளுக்கு பிள்ளைப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கை எழுந்தருளி வரம் அளித்தார். அதற்கு முன்பாக தன் அடியார்களிடம், ‘தனது திரு மேனியை ராவணன் தழுவும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் தோன்றிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு பாலகனாக உருமாறி வரம் அளித்தார்.
அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் தெய்வீக முகத்தைப் பார்த்து, தன் கரங்களால் தூக்கி கொஞ்சி மகிழ்வடைந்தான். ராவணன் கைகள் தழுவியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் அக்னி தோன்றியதாக புராணம் கூறுகிறது. இத்திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் இறைவன் அருள்மிகு ஸ்ரீ ‘மங்களநாதர்’ என்றும், அம்பிகை அருள்மிகு ஸ்ரீ ‘மங்கள நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.
மற்ற இடங்களில் சக்தியும்-சிவனும் சமேதராக விற்று இருப்பார்கள். இங்கு அம்மையும்' அப்பரும்" தனித்தனியே சன்னதி கொண்டிருப்பதும், தனித்தனி கருவறை விமானமும், ராஜகோபுரம் என' இவ்விடம் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட பல ஐந்து கோபுரங்கள் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரை சிவபெருமான் தனக்குத்தானே சூட்டிக்கொண்டதாகும், மங்களநாயகி தாயாரையும்" மங்கள நாதரையும்' தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும், பிள்ளை பெறு பாக்கியம் கைகூடும், சொந்த வீடு மனை செல்வங்கள் உழைப்பின் வழியாக நம்மை தேடி வரும் என்பது திண்ணம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்