தனது திரு ஓட்டை தானே மறைத்துவிட்டு தனது பக்தன் மீது பொய் புகார் கொடுத்து வழக்காடு மன்றத்திற்கு அளக்க அழிக்க விட்ட திருநீலகண்டம் தில்லையில் ஆடிய தாண்டவ திருவிளையாடல் என்ன தெரியுமா ?
சிவ பக்தரான தில்லையைச் சேர்ந்த நீலகண்டம் எப்பொழுதும் நடராஜப் பெருமானை நினைத்தபடி திருநீலகண்டா "திருநீலகண்டா" என கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோன்று'அடியார்கள் இடமும் அன்பு மிகுதியுடன் நடந்து கொள்வார். நடராஜ பெருமானை எந்த நேரமும், துதித்து வந்தமையால், இவரை திருநீலகண்டர் என காரண பெயரிட்டு அழைத்தனர். தனது குல மரபின்படி திரு ஓடுகளை செய்து, அடியார்களுக்கு வழங்கும் அரும்ப பணியினை செய்து வந்தார். நீலகண்டத்தின் மனைவியும் கணவனின் சொல்படி வாழ்ந்து வந்தாள். அப்போது ஊழ்வினையின் பலனாக அவரது தூய உள்ளம், சிற்றின்பத்தை தேடி தாசியிடம் சென்றது. இதை அறிந்து, அவரது மனைவி வேதனையுடன் தன் கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல் இன்பத்திற்காகவே" மனைவி இவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணி' நீலகண்டர். ஒருநாள் இரவு மனைவியின்.
அங்கத்தை நீக்கி கூடச் சென்றார். பொறுமை இழந்த மனைவி .ஐயனே" இனி எம்மை தொடுவீரின் திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே சத்தியம் இட்டு, தம்மை இனி தீண்டக் கூடாது என்று கூறி விட்டாள். சிவபெருமானையே"தன் உயிராக உணர்வாக நினைத்த நீலகண்டம், மனைவி, இவ்வாறு ஆணையிட்டதை கேட்டு மனம் வருந்தினார். மனைவியின் கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து. எம்மை என்றதனால் மற்ற மங்கையரையும் இனி மனதாலும் தீண்டேன்" என சிவன் மீது சத்தியம் செய்து. நீலகண்டர். அன்று முதல் தனது சிற்றின்பத்தை விட்டு, முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலன்களையும் தன்னுள் அடக்கி வாழ தொடங்கினார். ஒரே வீட்டில் வசித்த போதும், கணவன்-மனைவி இருவரும் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு'கட்டுப்பாடுடன் வாழ்ந்தனர். பின் ஆண்டுகள் பல கடந்து நீலகண்டரும், அவரது துணைவியாரும் முதுமை அடைந்தனர்.
அப்போது சிவபெருமான், நீலகண்டனின் பெருமையை உலகுக்கு பறைசாற்ற எண்ணி' தனது திருவிளையாடலை தொடங்கினார். சிவ அடியார் போல் வேடமிட்டு, திருவோடு ஏந்தி தெருவில் நடந்து நீலகண்டனின் வீட்டை வந்து அடைந்தார்.நீலகண்டரும் அவரது துணைவியாரும் அடியார் கோலத்தில் வந்த பெருமானை வணங்கி வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். அப்போது நீலகண்டம் சிவ அடியாரிடம், ஐயனே" இத் தொண்டன் என்ன பணி செய்தல் வேண்டும் ? என
பணிவுடன் கேட்டார். அதற்கு சிவ அடியார் தன்னிடமிருந்த திருவோட்டைக் காண்பித்து நீலகண்டா ! இத் திருஓட்டின் மதிப்பை நிர்ணிக்க முடியாது. விலை மதிப்பிட முடியா" கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடாகாது. இத்தகைய திருவோடடை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து நான் கேட்கும்போது தருவாயாக என்று கூறி திருவோட்டினை நீலகண்டன் இடம் கொடுத்தார்.
அதை பணிவோடு நீலகண்டம் பெற்று ஐயனே" உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். சிவ அடியாரும், தில்லை சென்று அங்கு சில காலம் தங்கி' பின் ஒரு நாள் நீலகண்டத்தைக் காண வந்த. சிவ அடியாரை வரவேற்று, பாத பூஜை செய்து, இருக்கையில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டத்திடம் தான் வந்த வேலை முடிந்து விட்டமையால், திருவோட்டைத் தருமாறு கேட்டார். நீலகண்டம் வேகமாக சென்று திருஓட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்த்தபோது. அங்கு அதனைக் காணாது அதிர்ச்சியுடன் மனைவி யிடம் ஓட்டை காணவில்லையே என்றார். தான் அறியேன்" எப்படி காணாமல் போகும் என்று இருவரும் தவித்தனர். நிலை தடுமாறினர். பின் வாடிய முகத்துடன் இருவரும் சிவனடியார் பக்கம் வந்து சுவாமி என அழைத்து. தயங்கி நின்றார் நீலகண்டன் அவரின். தயக்கத்தை கண்ட சிவனடியார் சற்று கோபமாகவே ஏனடா" இத்தனை தாமதம் ? திரு ஓட்டை கேட்டால் கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயா? நான் உடனே போகவேண்டும் , காலம் தாழ்த்தாமல் அதை கொடு என்றார். அவரது சினத்தை கண்டு நடுங்கிய நீலகண்டம், உண்மையிலே யே அத்திருஓடு காணாமல் போய் விட்டது சுவாமி என கண்ணீர் மல்க வணங்கினார். அடியாரோ கோபத்தில் நிதானம் இழந்து தாண்டவம் ஆடினார். நீலகண்டம் அய்யனே சினங்கொள்ளாதீர் அறியாது நடந்த தவறு பொறுத்துக் கொள்ள வேண்டும், திருஓடு மறைந்த தந்திரத்தை நான் அறியேன். மன்னித்து விடுங்கள்" உங்கள் மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு வேண்டும் என்றாலும் , தருகிறேன் என்று பணிவோடு கூறினார்.
சிவனடியாருக்கு மீண்டும் கோபம் வந்தது . என்ன ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ? நீலகண்டா ! ஓட்டின் அருமைபெருமை பற்றி நான் கூறியதனால்' நீ அந்த ஓட்டைத் திருடியிருக்கிறாய் என குற்றம் சாட்டியதைக் கேட்டு, தவறு சுவாமி"தவறு உண்மையாகவே சொல்கிறேன் அடியேன் தங்களது த திரு ஓட்டை திருடவில்லை என்று நீலகண்டன் கூறினார் . நீ திருட வில்லை என்பது உண்மையானால், நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றி கோவில் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி அம்பலத்தான் மீது சத்தியம் செய்யும் என்றார் எனக்கு மகன் இல்லையே சுவாமி ! என மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கி உண்மையை நிலை நாட்டினால் அது போதும்" என்றார். சிவ அடியாரின் ஆணை, நீலகண்டத்தின் மனத்தை மேலும் வேதனை ப்படுத்தியது. அவர் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார். தமக்கும் – மனைவிக்கும் உள்ள இல்லற பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், சுவாமி மன்னிக்க வேண்டும், நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே என் மனைவி கரம் பற்றி சத்தியம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார் நீலகண்டன். இனியும் உன்னோடு பேசிப் பயனில்லை வா வழக்குமன்றம் செல்வோம் என முடிவாகச் சொன்னார் சிவ அடியார்.
நீலகண்டன் அதற்கு சம்மதிக்க இருவரும், தில்லைவாழ் அந்தணர்களின் அரிய அவைக்கு சென்று' அவர்களிடம் வழக்கை எடுத்துரைத்தார் அப்போது. நீலகண்டனோ" ஓட்டைத் திருடவில்லை என முடிவாக தெரிவித்தார். இதனால் அவை முன்னவர் சிவ அடியார் விருப்பத்தின் படி குளத்து நீரில் மூழ்கி சத்தியம் செய்யுமாறு கூறினர். நீலகண்டன் மனைவியின் கரம்பற்றி , நிபந்தனையை நிறைவேற்ற முன்வரவில்லை மாறாக'; இல்லம் சென்று, தன் மனைவியை அழைத்து கொண்டு கோவில் குளம் நோக்கி வந்த நீலகண்டன். மூங்கில் கட்டை ஒன்றினை கொண்டு வந்து அதன் ஒரு பக்கத்தைத் தாமும், மறுபக்கத்தை அவர் மனைவியும் பிடித்தவாறு நீரில் மூழ்குவதை ஏற்க மறுத்த அவைனர். கரம் பற்றியே குளத்து நீரில் மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும் என ஆணையிட்டனர்.
வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக் கூறி மூங்கில் கட்டையை கணவன் மனைவி இருவரும் பற்றிக் கொண்டு, அவையின் அனுமதியின்றி குளத்து நீரில் மூழ்கி எழுந்தபோது. சிவபெருமானின் அருளால், முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். அப்போது அங்கிருந்த சிவனடியார் திடீரென்று மறைந்து விட்டார். ஆகாயத்தில் இருந்து பூ மழை பொழிந்தது. தில்லை நடராஜர் கோவில் மணிகள் ஒலித்தன" சங்கு நாதம் முழங்கியது' கைலாய எங்கும் வாக்கியங்கள் இசைத்தென" ஜோதி வடிவான ஈசன் பார்வதி தேவியுடன் எழுந்தருளி பக்த தம்பதியருக்கு காட்சி அளித்தார்.
திருநீலகண்டரும் அவரது துணைவியாரும் பக்தி பெருக்கில் நிலத்தில் வீழ்ந்து அம்மை அப்பரை வணங்கினர். சிற்றின்ப சேற்றில் சிக்காமல் ஐம்புலன்களையும் வென்ற அடியவர்களே" தில்லை அம்பலத்துல் அகப்பட்டு திருநீறு நீலகண்டத்தை பற்றியதால்" நீலகண்டா இனி நீ திருநீலகண்டர் என அழைக்கப்படுவாய்" எக்காலமும், குன்றா இளமையுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்வீர்கள் ஆக" என எம்பெருமான் வரம் அளித்தார். அதன் பின் திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை குன்றாமல், இன்பத்துடன் திருப்பணிபுரிந்து நெடுநாள் வாழ்ந்து தில்லை நடராஜனின் பொற்பாத கமலங்களில் பணிந்து பிறவா நிலை அடைந்து திரு நீலகண்டர் 63 நாயன்மார்களில் ஒருவராக இறைப் புகழுடன் அடியார்களின் உள்ளங்களில் குடி கொண்டுள்ளார்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்