ஒரு ராசியை கூறி பூஜை செய்தால் 12 ராசிகளுக்கும் பலன் கிடைக்கும் அதிசயம்! 

Written by

in

உயிரினங்கள் இயங்குவது கிரகங்களின் செயல்பட்டின் ஆதிக்கத்தால் தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி நட்சத்திரங்கள் அமையப்பட்டு, அதன்படி அவர்களின் வாழ்வியல் அமையும் என்பது ஜோதிட வல்லுநர்களின் கணிப்பு ஆனால்"குறிப்பிட்ட ஒரு ராசிக்கு உரியவர் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அதன் பலன் 12 ராசிகளுக்கும் கிடைக்கும் அதிசய கோவிலை தரிசிக்கலாம் வாருங்கள்.

மன்னார்குடி அடுத்த  கழுவத்தூரில் சோழ மன்னர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ராமாயண காலத்தில்' பறவைகளின் அரசனான ஜடாயு சிவபெருமானை வேண்டி இங்கு தவம் தவம் புரிந்து கொண்டிருந்தான். அப்போது இலங்கையின் மன்னனான ராவணன் சீத்தையை கடத்திச் சென்றான் சீதையின் அவையே குரலைக் கேட்டு, தனது தவத்தை கலைத்த பறவைகளின் அரசனான ஜடாயு சீதையைக் காப்பாற்ற ராவணனை தடுக்க முற்பட்டபோது. அறிவிழந்த ராவணன்  வாள் கொண்டு ஜடாயு இறகுகளை வெட்டி வீசினான்' காயத்துடன் ரத்தம் வலிய ராமனை தேடிச்சென்று சீதையை ராவணன் கடத்திச் சென்ற செய்தியை கூறிவிட்டு ராமனின் திருவடியிலேயே ஜடாயு தனது உயிரை விட்டான்.

அவருக்கு ராமன் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தான். பறவைகளின் அரசன் ஜடாயு இங்கு  தவம் புரிந்த போது  பூஜை செய்த சுயம்புலிங்கம் அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் சிவனின் வடிவமாகவும், ஆதிபராசக்தி அன்னை பார்வதி தேவியின் வடிவமாக' அருள்மிகு ஸ்ரீ சவுந்திர நாயகி தாயாரும் அருள் பாவிக்கிறாள். கழுகத்தூர் அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவிலில்' பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட யோக ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை,

பொன்.கோ.முத்து திருவள்ளூர்