விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது..
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 18/09/2023 முதல் 01/10/2023 முடிய சிறப்பாக நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் பிரம்மாண்டமான கொழுக்கட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ, உச்சி விநாயகர் சன்னதியில் 75 கிலோ 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது..
மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும். இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் ,மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவிஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது.