இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கடம் தீர்க்கும் சங்கடஹர கணபதி ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
வினை தீர்க்கும் விநாயகர், பிணி தீர்க்கும் தன்வந்திரி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரே கல்லின் 4அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் விநாயக தன்வந்திரிக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மேற்கண்ட ஹோமம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நாம் நம் வாழ்க்கையில் படும் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம், சோதனைகளை தாண்டி வெற்றி நடை போடலாம், நிறைந்த இறை அருள் பெறலாம்.
’சங்கட’ என்றால் கஷ்டம் மற்றும் ‘ஹர’ என்றால் போக்குதல். சங்கடங்களை போக்கும் விக்ன விநாயகரின் பாதம் பணிந்து விரதமிருந்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்பதே இந்த விரத பலன். நாம் எண்ணிய எண்ணம் நிறைவேறும்.
"சங்கடஹர சதுர்த்தி" விரதம் :
சங்கடங்கள் நீக்கிடும் "சங்கடஹர சதுர்த்தி" விரதம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடஹர சதுர்த்தி விரதமாகும்.
அத்தகைய நாளில் விரதமிருந்து சங்கடஹர சதுர்த்தி ஹோமத்திலும், பூஜையிலும் கலந்து கொண்டால் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து அளவு கடந்த ஆனந்தத்தை அடைந்து, சகல சௌபாக்கியங்களை பெறலாம்.
மேலும் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றியை பெறலாம். நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடையவும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளையும் பெறலாம்.
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறைந்து நன்மை ஏற்படும்.
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகரை மனதில் நினைத்து உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த யாகத்திற்க்கு தேவையான அஷ்ட திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், நல்லெண்ணை, நெய், தேன், நிவேதனத்திற்குரிய பொருட்கள், அருகம்புல், பால், தயிர், மற்றும் அபிஷேக பொருட்கள் அளித்து விநாயகர் பெருமானுடைய அருளைபெற்று சங்கடங்கள் நிவர்த்தி செய்து வாழ்வில் நலம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203