மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.
வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.
உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.
கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்:
முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
Mobile/WhatsApp: +91 7845119542