Tag: Yagam

  • Aswamedha yagam seidha palan tharum Egadasi Viradham

    ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனை கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும், இத்தகைய வைகுண்ட ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன.

    மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைக்கின்றனர். அதனால்தான், ஏகாதசி அன்று புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் என்று கூறபடுகிற சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். மகாவிஷ்ணு பெருமாளின் புகழ்பாடும் பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, மகாவிஷ்ணு பெருமாளின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

    தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும்.
    ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அல்லது அவர்கள் வீட்டில் இருந்தபடியே பகவானின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.

    பக்தர்கள் இந்த வழிபாட்டை மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவார்கள்.
     

  • Sadha chandi maha yagam

    மனிதர்களுக்கு நோய் நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீதன்வந்திரிபகவான், அவரே ஸ்ரீமன்நாராயணன். அப்படிப்பட்ட தன்வந்திரி பகவானுக்கு வாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்யபீடம் அமைந்துள்ளது. இப்பீடத்தில் இங்கு சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் என 6 மதங்களுக்குறிய தெய்வங்களை கொண்டு 87 பரிவார சந்நதிகளை அமைத்து  அவற்றுடன் 468 சித்தர்கள் சிவலிங்கம் ரூபமாக அமைந்துள்ளது மிகசிறப்பாகும் மேலும் யாகமே யோகம் – ஹோமமே ஷேமம் என்ற வார்த்தைக்கிணங்க தினசரி பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெறும் யக்ஞம் பூமியாக திகழ்ந்து வருகிறது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    இங்கு வரும் பக்தர்களுக்கு தன்வந்திரிபகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப்பூச்சி, அமிர்தகலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தருகின்றார். இவரை வழிபட்டால் தீராதநோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ஸ்ரீதன்வந்திரி ஆரோக்யபீடம் எனும் பெயரில் வாலாஜாபேட்டை,  இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    இப்பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக் ஞஸ்ரீகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற 8.12.2021 புதன்கிழமை பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம் முதல் 20.12.2021 ஈஸ்வரனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் வரை தினமும்காலை 10.00 மணிமுதல்மாலை 06.00 மணிவரை உலகமக்கள் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற ஸ்ரீஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர பரிவார மூர்த்திகளை வேண்டி கொரோனா என்ற கொடிய நோயின் அச்சம் மற்றும் தாக்கம் குறையவும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும் 100க்கும் மேற்ப்பட்ட விலை உயர்ந்த மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், கடுக்காய், ஜாதிக்காய், ஏலக்காய் போன்ற பொருள்களுடன் பட்டு வஸ்திரங்கள், நெய், தேன் பட்சணங்கள் கொண்டுமேற்கண்ட நாட்களில் சிறப்பு தொடர் யாகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    தொலைபேசி : 04172 – 294022,செல்– 9443330203

  • Swarna bairavar yagam

    சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை

    ஸ்லோகம்:

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஆபதுத்தாரணாய

    ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல பத்தாய லோகேஸ்வராய

    ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம

    தாரித்ரிய வித்வேஷணாய

    மஹா பைரவாய நம ஹ்ரீம் ஐம்

    இந்த ஸ்லோகத்தை தினசரி 27 முறை உச்சரித்து சுவர்ண பைரவரை வணங்கி பூஜித்தால் கடன் பிரச்சனைகள் விலகி செல்வம் பெருகும்!
     

  • Sani Bagavan Yagam

    மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், பிரகாச மூர்த்தியான சூரியனின் நக்ஷத்திரமான உத்திராட நக்ஷத்திரத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 24.01.2020 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை சனிப்பெயர்ச்சி மஹா யாகத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

    ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.

    சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.

    சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

    சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் ஏற்படும் தோஷங்கள் குறைய சனிப்பெயர்ச்சி யாகத்தில் தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    சனியின் சஞ்சாரம் பார்வை :

    சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். அதே நேரத்தில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது.

    வாலாஜாபேட்டை ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் (தங்க சனீஸ்வரர்) ஆலய மகிமை :

    ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படையில் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர். இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். அதைப் போலவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனி ஆலயம் அமைத்து கொண்டு சனிபகவான் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்து வருகிறார். வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் தன்வந்திரி பீடத்தில் சொர்ண சனி பகவான் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று பல்வேறு தரப்பு மக்கள் சனி பகவானை மிகவும் ஆர்வத்துடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    மேலும் தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் ஆயுள் கண்ட பிரச்னைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்க மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட தேதியில் 2020-2023 ஆண்டுக்கான நடைபெறும் சனி பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு நர்பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    இச்சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்களை அடையவும் சனிப்பெயர்ச்சியாகமும், பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

    அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் :

    தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Bairavar Jayanthi Yagam

    இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகளான மஹா கணபதி ஹோமம், கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை, 64 பலி பூஜைகள், கூஷ்மாண்ட ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. 

    இதனை தொடர்ந்து மாலை காலபைரவருக்கும், சொர்ண பைரவருக்கும் விசேஷ அபிஷேகங்களும், ஆராதனைகளும், 64 ஹோமகுண்டங்களுக்கான 64 பைரவர் பூஜையும், சொர்ண பைரவர், மஹா பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களை வேண்டி நடைபெற உள்ளது. நாளை 64 குண்டங்களில், 64 நபர்கள் பங்கேற்று நடைபெறும் மாபெரும் சதுர்ஷஷ்டி பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

  • Nava Durga Yagam…

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 29.08.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நன்பகல் 1.00 மணி வரை நவதுர்கா யாகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை ஆவணி அமாவாசையை முன்னிட்டு நவ சண்டி யாகம் நடைபெற உள்ளது.

    இந்த யாகம் கோபூஜை, புண்ணியகவாசனம், யாகசாலை பூஜை, வேத பாராயணம், மங்கள வாதியம், நவாவரண பூஜை, நவ துர்கா பூஜையுடன் நடைபெற்றது. இந்த யாகத்தில் விசேஷ மூலிகைகள், பழங்கள், பட்டி வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள், நவசமித்துகள், நிவேதன பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் சென்னை திருமதி. சித்ரா தேவராஜ் குழுவினர்களின் ஸ்ரீ துர்கா கவசம், ஸ்ரீ துர்காஸூக்தம், ஸ்ரீ தேவிமஹாத்மியம், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் பாராயணங்கள் நடைபெற்றது.

    மேலும் இதில் சென்னை திரு. பாஸ்கர் குடும்பத்தினர்கள், சென்னை திரு. பிரகாஷ் குடும்பத்தினர்கள், ஊட்டி திரு. ராஜசேகர், சென்னை டாக்டர். ரங்கராஜன், ஹைதெராபாத் திருமதி. ராதா, சென்னை திருமதி. இன்பவல்லி, சென்னை திருமதி. சுபத்ரா மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
     

  • Thirupathy Ezhumalayan Koil Rain Yagam

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் காஞ்சி மடம் இணைந்து  மழை வேண்டி திருமலையில் காரீரி இஸ்டி யாகம் நடைபெற்று வருகிறது.  இதற்காக  தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா  மாநிலங்களில் இருந்து வேத விற்பன்னர்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டு  யாகம் நடைபெற்று வருகிறது.

     நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் போதிய மழை இல்லாமல் வறட்சி தாண்டவமாடும் தற்போதைய நிலையில் மழை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று தொடங்கிய காரீரி இஸ்டி யாகம் 18 ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. 

     

    மேலும் திருப்பதி மலை  அடிவாரத்தில் உள்ள  கபிலேஷ்வர சாமி கோவிலில் வருண ஜபத்தையும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீரச்ஞ்சனம் மேடையில் மழையை வரவழைக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியையும் நடத்தப்படுகிறது.

     இந்நிலையில் திருமலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் காரீரி இஸ்ட்டி யாகத்தை தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் லட்சுமி காந்தம் ஆகியோர் தம்பதியினர் சமேதர்களாக காரீரி இஸ்ட்டி யாகத்தில் கலந்து கொண்டனர்.  

    உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட கருப்பு குதிரை, கருப்பு ஆடு ஆகியவற்றை யாக சாலை முன் நிறுத்தி காஞ்சி காமகோடி பீடத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த வேதவிற்பன்னர்கள், தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் யாகம் வளர்த்து காரீரி இஸ்ட்டி யாகம் நடத்தினர்.

    இதேபோல் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வர சுவாமி கோவிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் இசைக்கலைஞர்கள் மழையை வரவழைக்கும் சக்தி படைத்த அமிர்த வர்ஷ்னிராக ஆலாபனை நடத்துகின்றனர்.

    இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், கடந்த 2017 ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது மழை வேண்டி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்ட்டி யாகம், வருண ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன அந்த ஆண்டில் சிறப்பான முறையில் மழை பெய்து  நாடு செழிப்படைந்தது. இந்த ஆண்டிலும் தேவஸ்தானம் நடத்தும் காரீரி இஸ்ட்டி யாகத்தைத் தொடர்ந்து சிறப்பான முறையில் மழை பெய்து நாடும், நாட்டு மக்களும் வலம் பெறுவார்கள் என்று கூறினார்.

    இம் மாதம் 18 ம் தேதி வரை காரீரி இஸ்ட்டியாகம், வருணஜபம், அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை ஆகியவை தொடர்ந்து நடை பெறும் என அவர் தெரிவித்தார்.