Tag: Worship

  • Worship of Varaki Amman: A spiritual method that gives success in 45 days

    வாராகி அம்மன் வழிபாடு இன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. வீடுகளிலும், ஆலயங்களிலும் பலர் வாராகி அம்மனை வணங்குகின்றனர். குறிப்பாக, வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி திதிகளிலும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. சிலர் தினமும் வீட்டில் வாராகி அம்மனை வணங்குகின்றனர். இந்த ஆன்மிகப் பதிவில், 45 நாட்களில் காரிய சித்தி தரும் வாராகி அம்மன் வழிபாட்டு முறையைப் பார்ப்போம்.எந்த தெய்வத்தை வணங்கினாலும், ஒரு வேண்டுதலை முன்வைத்தே வழிபாடு செய்கிறோம்.

    வாராகி அம்மனை வணங்குவதன் மூலம், நினைத்த காரியம் விரைவில் நிறைவேற வழிபாடு செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை, பஞ்சமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்க வேண்டும். வீட்டில் வாராகி அம்மனின் படம் இருந்தால், அதை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைக்கவும். சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்கவும். ஆறு தீபங்கள் ஏற்றி, நெய்வேத்தியமாக மாதுளம்பழ முத்துக்களை தேனில் கலந்து வைக்கவும்.வலது கையின் மோதிர விரலில் வாசனையுள்ள தாழம்பூ குங்குமத்தை எடுத்து, வாராகி அம்மனின் காரிய சித்தி மந்திரத்தை ஒருமுறை அல்லது ஆறு முறை உச்சரிக்கவும்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் சுக்ல வாராகி மம ரக்ச ரக்ச வார்த்தாலி வார்த்தாலி வாராகி வாராகி சகல காரிய சித்திம் அனுக்கிரகம் குரு குரு”.

    இதை கூறி, குங்குமத்தை இலை அல்லது கிண்ணத்தில் வைக்கவும். பின்னர், நினைத்த காரியத்தை மனதில் வைத்து வேண்டுதல் செய்யவும். காரியம் தொடர்பாக வெளியே செல்லும்போது, இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளவும். இவ்வாறு 45 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது, காரியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே வரும். இந்த காலத்தில் உணவில் அசைவத்தை தவிர்த்து, சுத்தமாக இருக்கவும். தீட்டு காரியங்களில் ஈடுபடாமல், விரதம் போல இவ்வழிபாட்டை மேற்கொள்ளவும். இதனால், வாராகி அம்மனின் அருளால் காரிய சித்தி கிடைக்கும்.

  • Mistakes to avoid while worshipping at temple and home!

    நாம் கடவுளை வணங்கும்போது, கோவிலிலோ அல்லது வீட்டிலோ, அறியாமல் சில தவறுகளைச் செய்கிறோம். இவை நாம் எதிர்பார்க்கும் நல்ல பலன்களைத் தடை செய்யலாம். இத்தவறுகளைத் தவிர்த்து, சரியான முறையில் வழிபாடு செய்ய உதவும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

    முதலில், கோவிலில் தீபம் ஏற்றும்போது, அதற்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே ஏற்ற வேண்டும். சிலைகளுக்கு அருகில் தீபம் ஏற்றுவது தவறு, ஏனெனில் இது புனிதத்தைக் குறைக்கலாம். அதேபோல், வீட்டில் பூஜை செய்யும்போது, சுவாமி சிலைகளைத் தொடாமல் வழிபடுவது முக்கியம். சிலைகளைத் தொடுவது அவமரியாதையாகக் கருதப்படலாம். மேலும், பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் (பூ, பழங்கள், பிரசாதம்) பூஜை செய்யப்படாத பொருட்களுடன் கலந்துவிடக் கூடாது. இதற்காக, பூஜைப் பொருட்களைத் தனியாக வைத்து, புனிதத்தைப் பேண வேண்டும்.

    வழிபாட்டின் போது மனதை ஒருமுகப்படுத்துவது அவசியம். பூஜை செய்யும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்; அசுத்தமான இடத்தில் வழிபாடு செய்வது பலனைத் தராது. மேலும், பூஜைக்கு முன் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து, மனதைத் தூய்மையாக வைத்திருப்பது முக்கியம். பூஜையின் போது மந்திரங்களை உச்சரிக்கும்போது, சரியான உச்சரிப்புடன், புரிந்து செய்வது பலனை அதிகரிக்கும்.

    கோவிலில் வழிபாடு செய்யும்போது, மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல், அமைதியாக நடந்துகொள்ள வேண்டும். பிரசாதத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து, அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும். இறுதியாக, வழிபாட்டில் நம்பிக்கையும், பக்தியும் முக்கியம். மனதில் எந்தவித கவலையும் இல்லாமல், முழு ஈடுபாட்டுடன் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

    இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நம் வழிபாடு முழுமையடையும். தவறுகளைத் தவிர்த்து, பக்தியுடன் வழிபடுவோம்; கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

  • Benefits of lighting a ghee lamp!

    இறைவனை வழிபடுவதில் தீப வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தீப ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் லட்சுமி தேவியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளி அருள்புரிவதாக ஐதீகம் உள்ளது. ஆகவே, தீபத்தில் முப்பெரும் தேவியரும் கடாட்சம் செய்வதாக நம்பப்படுகிறது.

    விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் பலன்கள்:

    • 5 நெய் விளக்குகள்: சிறந்த கல்வி மற்றும் ஞானம் பெறலாம்.

    • 9 நெய் விளக்குகள்: நவகிரக தோஷங்கள் விலகும்.

    • 12 நெய் விளக்குகள்: தடைகள் நீங்கி, எடுத்த காரியம் வெற்றியடையும்.

    • 18 நெய் விளக்குகள்: கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் அகலும்.

    • 27 நெய் விளக்குகள்: திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • 36 நெய் விளக்குகள்: சகல தோஷங்களும் நீங்கும்.

    • 48 நெய் விளக்குகள்: தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    • 108 நெய் விளக்குகள்: அம்மனின் அருள் முழுமையாக பெறலாம்.

    நெய் விளக்கு ஏற்றிய பிறகு, கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வருவது சிறப்பு.

    நெய் தீப பரிகாரங்கள்:
    வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது மாலை 6 மணிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நாகராஜ சிலைக்கு அபிஷேகம் செய்து, செவ்வரளி சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால், தம்பதியரிடையே ஒற்றுமை நிலைக்கும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் அமாவாசை அன்று பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் தோஷம் நீங்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து, தொடர்ந்து நெய் தீபம் ஏற்றினால், விரைவில் கருத்தரிக்கலாம். தீபம் ஏற்றும்போது வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்து ஏற்றினால் செல்வ செழிப்பு பெருகும்.

    கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்தி பொழுது நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. கருவறையில் உள்ள தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட்டால், கடுமையான பிரச்சினைகளும் விலகும். சமூக வலைதளங்களில், இந்த பரிகாரங்களை பலரும் பகிர்ந்து, இறைவனின் அருளை பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

  • A simple offering to relieve mental anguish: Trimidura worship!

    குடும்பத்தில் மனச் சஞ்சலங்கள், பொருளாதார பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் நீங்கி, இனிமையான வாழ்வு பெற ஒரு எளிய நிவேதன வழிபாடு பற்றி ஞான நூல்கள் பரிந்துரைக்கின்றன.

    தினமும் வீட்டு பூஜையறையில் உள்ள இஷ்ட தெய்வத்திற்கு பசும்பால், வாழைப்பழம், தேன் ஆகிய மூன்றையும் கலந்து நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இந்த கலவையை ‘திரிமதுரம்’ என்று சிறப்பாக அழைப்பர். திரிமதுர நிவேதனம் செய்து வழிபட்டால், வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, இனிமையும் மகிழ்ச்சியும் பெருகும் என்று நம்பப்படுகிறது.

    இந்த வழிபாடு மிகவும் எளிமையானது மற்றும் அனைவராலும் செய்யக்கூடியது. பசும்பால், வாழைப்பழம், தேன் ஆகியவை இயற்கையான பொருட்கள் என்பதால், இவை தெய்வத்திற்கு படைப்பதால் மன அமைதியும், நேர்மறை ஆற்றலும் பெறலாம். இந்த திரிமதுர நிவேதனத்தை படைத்த பிறகு, வழிபாட்டை முடித்து, அந்த பிரசாதத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணலாம்.

    சமூக வலைதளங்களில் இந்த வழிபாடு குறித்து பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த எளிய நிவேதனம், மனதில் உள்ள பதற்றத்தை நீக்கி, குடும்பத்தில் ஒற்றுமையையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு வரும் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்வதால், வாழ்வில் அமைதியும் செழிப்பும் பெருகும்.

  • Worship of the ancestral deity: On which days does worshiping yield the best results?

    சில குடும்பங்கள் தொடர்ச்சியான சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றன. இவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று முறையாக வழிபாடு செய்யும்போது, அவர்களின் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணரலாம்.

    எனவே, முடிந்தவரை மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. ஆனால், சிலரால் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டில் குலதெய்வத்தை மனதில் நினைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

    எல்லா நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றவை என்றாலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் உகந்தவை என ஆன்மிக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நாட்களில் கோயிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு பிடித்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செல்ல முடியாதவர்கள், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.

    குலதெய்வத்தின் தன்மைக்கு ஏற்பவும் குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்தவை:

    • சிவபெருமான் அல்லது முனீஸ்வரர் போன்ற சிவனுடன் தொடர்புடைய தெய்வங்கள் குலதெய்வமாக இருந்தால், திங்கட்கிழமை வழிபாடு மிகவும் பொருத்தமானது.

    • முருகன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால், செவ்வாய்க்கிழமை வழிபடுவது சிறந்தது.

    • பெருமாள் தொடர்புடைய குலதெய்வங்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகள் உகந்தவை.

    • அம்பாள் போன்ற தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு மிகுந்த ஆன்மிக அருளை வழங்கும்.

    குலதெய்வ வழிபாட்டின் மூலம் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் தடைகளைத் தாண்டுவதற்கான ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

     

  • Worship Lord Srisimma Dakshinamurthy to Overcome Educational Challenges

    த்திரமேரூரில் இருந்து கீழரோடு வழியே காஞ்சிபுரம் செல்லும் பாதையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, பல்லவ மன்னனால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட அற்புதமான ஆலயம்.

    கல்லால மரத்தடியில், சிம்மத்தின் மீது திருப்பாதம் வைத்தபடி, மற்றொரு பாதத்தை முயலகன் மீது வைத்துக் கொண்டு, சிரசில் ருத்திராட்சம் துலங்கக் காட்சி தரும் ஸ்ரீசிம்ம தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தித்தால், படிக்காத பிள்ளையும் படிக்கும்; தேறாத மாணவர்கள்கூட, அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெறுவார்கள் எனச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள், தொடர்ந்து 18 வாரங்கள் இங்கு வந்து நெய்விளக்கேற்றி, ஸ்ரீசிம்ம தட்சிணா மூர்த்தியை வணங்கி வழிபட்டால், சிக்கல்கள் யாவும் தீரும்; ராஜ யோகம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்.

    சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் வழிபட்ட தலம்;  எனவே இங்கு ஸ்ரீசோழீஸ்வரர், ஸ்ரீபாண்டியரேஸ்வரர், ஸ்ரீசேரலேஸ்வரர் எனும் திருநாமங்களில் லிங்கமூர்த்தங்களைத் தரிசிக்கலாம். தவிர, வியாக்ரபாதருக்கும் தனிச் சந்நிதி உள்ளது.

    ஆதிகுருவாம் ஸ்ரீசிம்ம தட்சணாமூர்த்தியையும், வியாக்ரபாத முனிவரையும் வணங்குங்கள்; கல்வி- கேள்வியில் வளம் பெறுவீர்கள்!
     

  • Suitable Flowers for Shiva Puja

    பூக்கள் இல்லாத பூஜைக்கு பலன் குறைவே என்பது பெரியோர் வாக்கு. அவ்வகையில், சகல மலர்களும் இறை பூஜைக்கு ஏற்றவையே என்றாலும், குறிப்பிட்ட சில மலர்களை சிவபூஜைக்கு விசேஷமாகப் பரிந்துரைக்கின்றன ஞான நூல்கள். 

    நீர்ப்பூ வகைகள் 

    செந்தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் ஆகியவைகள் நீர்ப் பூ வகையைச் சார்ந்தது.

    நிலப் பூ வகைகள் 

    நாயுருவி,தும்பை,வெட்டி வேர்,பச்சை,சிவந்திப் பூ,மரிக்கொழுந்து,சிவகரந்தை, விஷ்ணு கரந்தை,துளசி,இருதயத்தை,செம்பரத்தை,அனிச்சம், நந்தியாவட்டை ஆகியவைகள் நிலப்பூ வகையைச் சார்ந்தது.

    கோட்டுப் பூ வகைகள் 

    வன்னி, பலா, எலுமிச்சை, கோங்கு, நார்த்தை, மந்தாரை, மாவிலங்களை, நொச்சி, பன்னீர்-அகில், மாதுளை, அசோகு, பாதிரி, இலந்தை, நுணா, வெள்ளெருக்கு, புன்னை, மருது, விளா, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, வில்வம், குருந்து ஆகியவைகள் கோட்டுப் பூ வகையைச் சார்ந்தது.

    கொடிப் பூ வகைகள் 

    நாட்டு மல்லிகை,முல்லை, வெற்றிலை, தாளி, கருக்காக்கொன்றை, வெண்கா கொன்றை குருக்கத் தி, இருவாச்சி, கொன்றை, பிச்சி ஆகியவைகள் கொடிப் பூ வகையைச் சார்ந்தது.

    நான்கு வேளை பூஜைக்கு  உகந்த மலர்கள்…

    அதிகாலை, காலை, நண்பகல், மாலை ஆகிய நான்கு வேளைகளிலும் சிவ பூஜைக்கு உகந்த மலர்கள் இன்னின்ன என்று ஆன்றோர் வகுத்துள்ளனர். அவை:

    அதிகாலை: புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை

    காலை: அலரி, நாயுருவி, மல்லிகை, எருக்கு, வில்வம், நந்தியாவர்த்தம், தாமரை, பவழமல்லி.

    உச்சிக்காலம்: பொன் ஊமத்தை, புலிநகக் கொன்றை, பாதிரி, மல்லிகை, கத்தரி, மந்தாரை, சரக்கொன்றை, தும்பை.

    மாலை மற்றும் அர்த்தசாமம்: மல்லிகை, காட்டு மல்லிகை, மகிழம்பூ, கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மரிக்கொழுந்து.

  • Tamil Newyear worship

    சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப்பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். இந்தாண்டு சோபகிருது வருடம் பிறக்கிறது.

    சித்திரை மாதம் தொடங்குவதற்கு முன், இரவு வீட்டில் நிலைக்கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்-காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துவிடுவார்கள். மறுநாள் காலையில் துயில் நீங்கி எழும்போது, அந்த தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

    பூஜையறைகளை அலங்கரித்து விளக்கேற்றுவதும், முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவதும், புதுவருட பஞ்சாங்கம் வாங்கி பெரியோர் வாயால் பஞ்சாங்க பலனை கேட்பதும், இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

    சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்பு வடை, பருப்பு பாயாசம், மசால் வடை போன்றவை இடம்பெறுதல் அவசியம்.

  • owl worship

    பார்ப்பதற்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஆந்தையை பல்வேறு கோணங்களில் மக்கள் பார்க்கின்றனர். முந்தைய காலங்களில் ஆந்தையை மரணத்தின் அறிகுறியாக பார்த்து வந்தனர். ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டாலே அந்த ஊரில் யவரேனும் இறக்க நேரிடும் என்று அவர்கள் கருதினர். இதனால் சிலர் ஆந்தையை வெறுத்தனர். 

    ஆந்தையை கண்டால் கல்லை கொண்டு எரிந்து விரட்டி அடித்தனர். அது மிகவும் தவறானது. ஆந்தையின் படம் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக மஹாலக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜாக்களின் அரண்மனையில் ஆந்தையின் படம் கண்டிப்பாக இருக்கும். அதை அதிர்ஷ்டத்தின் உருவமாக வழிபட்டனர்.

    ஆந்தை சொந்தமாக கூடு கட்டுவதைவிட மற்ற பறவைகளின் ஆதரவற்ற கூட்டை அதிகம் விரும்புகின்றன. தேவி மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருப்பது ஆந்தை தான்.  வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லக்ஷ்மியை அதிகளவு வழிபாடு செய்கின்றனர். 

    விவசாயிகளின் உற்ற நண்பனாக ஆந்தை கருதப்படுகிறது. வயல்களை சேதபடுத்தும் எலிகளை சாப்பிட்டு விவசாயத்திற்கு பெரிதும் உதவி செய்கின்ற ஆந்தையை அபசகுணமாக கருதவும் செய்கின்றனர்.  மஹா லஷ்மி ஸ்ரீமஹா விஷ்ணுவிற்கு வாகனமாக கருடன் உள்ளது போல் மஹா லக்ஷ்மிக்கென்று பிரத்யேகமாக ஆந்தை வாகனமாக இருக்கின்றது. இது பலரும் அறியாமல் இருக்கலாம். 

    வட இந்திய மக்கள் தங்களின் வீட்டு கூரையில் ஆந்தை கூடு கட்டி அலறல் சத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் சுப சகுணமாக கருதுகின்றனர். சுபகாரியம் நடத்தவிருக்கும் வீட்டில் ஆந்தை சத்தம் கேட்டால் லக்ஷ்மியின் சம்மதம் கிடைத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுகின்றனர். வெளியில் கிளம்பும் போது ஆந்தையை காண நேர்ந்தால் உறுதியாக போகும் காரியம் அமோக வெற்றி தான் என்கின்றனர்.

    தென்னிந்திய மக்களோ இதை அபசகுணமாக கூறுகின்றனர். வடக்கே ஆந்தை அலறினால் சுபமாகவும், மற்ற திசைகளில் ஆந்தை குரல் கேட்டால் அபசகுனம் என்றும் ஆருடம் பார்க்கின்றனர். ஆந்தையின் பார்வை திறன் அதிகம் என்பதால் அதனால் வெகு தொலைவில் இருக்கும் இரையை கூட தெள்ள தெளிவாக பார்க்க முடியும். 

    இரவில் ஆந்தை அலறினால் சுப பலன்கள் கிட்டும் என்று நிச்சயமாக நம்புகின்றனர். எந்த வீட்டின் அருகே அமர்ந்து ஆந்தை அலறுகிறதோ அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமாம். செல்வா வளமும் பெருகுமாம். கோவில் மரங்களில் இது போல் ஆந்தை அலறினால் அங்கிருக்கும் மக்களுக்கு நல்லது நடக்குமாம். 

    ஆந்தை சத்தம் போடாமல் அமைதியாக இருந்தால் வேதனை படுவார்கள். ஆந்தை அலறும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் கூறுகின்றனர். நவ கிரங்கங்களின் அடிப்படையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிக்கையில் ஆந்தை அலறும் பலன்கள் கூறப்படுகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த ஆந்தையாரை கிரக்கர்கள், ஐரோப்பிய மக்கள் அறிவின் கடவுளாக கருதுகின்றனர். 

    ஆந்தை புத்திக் கூர்மையுள்ள பறவை என்றும் குறிப்பிடுகின்றனர். இரவின் அரசன், விவசாய நண்பன், மஹா லக்ஷ்மியின் வாகனம், செல்வம் தரும் பறவை என்று மக்களுக்கு நல்லதை செய்கின்ற ஆந்தையை அதன் விசித்திர முகம் காரணமாக வெறுப்பது சரியல்லவே. 

  • Sarabeswarar worship

    ஹிரண்யனை வதம் செய்வதற்காக ஸ்ரீநரஸிம்ஹர் அவதாரம் எடுத்த ஸ்ரீமகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்ரத்தை அடக்க முடியாமல் இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த “ஸ்ரீமஹாலட்சுமி” கூட நரஸிம்ஹரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். 

    அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சம்ஹார மூர்த்தியான சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருவர் தான் இவரின் கோபத்தை சாந்திப்படுத்த வல்லவர் என்று கைலாயம் சென்றார்கள்.

    பின்னர் சிவபெருமான் சரபரின் தோற்றத்தில் உருமாறி ஸ்ரீ நரஸிம்ஹரின் கோபம் தனித்தார் என்கிறது காளிகா புராணம். இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது.  மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். 

    தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். 

    சரபரின் ஹுங்கார சப்தத்தில் நரஸிம்ஹரின் கோபாக்னி அடங்கியதாய்ச் புராணங்கள் கூறுகின்றன. சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். 

    இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி.  இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் அதி பயங்கர உக்கிரத்தை அடக்கியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன. 

    காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மர் வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மரின் கோபத்தை சாந்தப்படுத்தியதாக கூறுகிறது. 

    லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி நரஸிம்ஹரின் சக்தி எப்படி அளவிட முடியாததோ அதேபோல் சரபேஸ்வரரின் சக்தியும் அளவிடவே முடியாதது.  சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்.

    இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர்.  தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர்.  பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது.