Tag: Vasthu

  • Dhanvanthri peedathil vasthu homam

    ரியல் எஸ்டேட் தொழில் சிறந்து விளங்கவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும், வீடு மனை போன்றவைகளில் உள்ள வாஸ்து தோஷங்கள் அகலவும், வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம் வருகிற 6.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.

    இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

    வாஸ்து பகவான் அமைப்பு:

    வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

    வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    தனக்கென் ஒரு வீடு:

    சிறிய தொழில், பெரிய தொழில் செய்வோர்க்கும், வியாபாரம் செய்வோர்க்கும் மற்றும் பலவகை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும், குடும்ப பெண்களுக்கும் சொந்தமாக ஒரு வீடுகட்ட வேண்டும் என்ற கனவு எல்லோருடைய மனதிலும் இருப்பது உண்டு. இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப வீட்டு மனைகளை வாங்கிப்போடுவதும், தான் குடியிருக்கும் வாடகை வீட்டை விலைக்கு வந்தால் வாங்கி போடலாம் என்பது சிலர் நினைப்பதும் உண்டு. அப்படி வாங்கிப்போட்ட மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி சிலருக்குன் கேள்வியாக இருக்கும்.

    மனை வீடு வாஸ்து:

    ''வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும் பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

    வாஸ்து விழிப்பு நாளில் வாஸ்து ஹோமம்:

    நிகழும் பிலவ வருஷம் மாசி மாதம் 22-ம் தேதி 6.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.32 முதல் 11.08 வரை வாஸ்து விழிப்பு நேரம் என்பதால், அந்த நேரத்தில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
     
    வாஸ்து ஹோம பிரசாதங்கள்:

    ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று செல்லாம்

    மேற்கண்ட காரணங்களுக்காகவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்படும் தடைகள் விலகவும் வீட்டு மனைகள் விரைவில் விற்கவும் பூமி லாபம் ஏற்படவும், விலை போகாத வீடு மனைகள் விலைபோகவும் அதனால பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெறவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி மேற்கண்ட நாளில் காலை வாஸ்து ஹோமமும் வாஸ்து பகாவனுக்கு அபிஷேகமும் பஞ்சபூதம் மற்றும் அஷ்டதிக் பாலகர்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • Vasthu Dhosham Vilaga

    சில பரிகாரங்கள் மூலம் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது நம்பிக்கை.

    வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என பல பிரச்சனை ஏற்படுகிறது. இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று ஒரே குழப்பம். எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது.

    பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். ருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும். ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

  • Vasthu Dhosham neenga parigarangal

    சில பரிகாரங்கள் மூலம் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது நம்பிக்கை.

    வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என பல பிரச்சனை ஏற்படுகிறது. இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று ஒரே குழப்பம். எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது.

    பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். ருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும். ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
     

  • Vasthu Dhosham Neekum Eliya parigaram

    பொதுவாக தென் கிழக்கு மூலையான அக்னி மூலையில் சமையலறை அமைவதே சிறப்பு. ஆனால், தற்போதைய நிலையில் நாம் நினைத்த வண்ணம் வீடுகள் நமக்கு வாய்ப்பதில்லை. 

    இத்தகைய வாஸ்து தோஷங்கள் ஓரளவு சீர்பெற கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று தினையைப் பரப்பி அதன் மேல் தர்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளித்து மயில்களுக்கு உணவிட்டு வரவும். தொடர்ந்த வழிபாடு சிறந்த பலன்களை நல்கும்.

    அதேபோல பூ, கல்வி, வேதம், தண்ணீர் இவற்றை காசுக்காக விற்கக் கூடாது என்பது தெய்வீகச் சட்டம். அறிந்தோ அறியாமலோ கல்வியை காசுக்காக விற்றவர்கள், விற்றுக் கொண்டு இருப்பவர்கள் மனம் திருந்தி இத்தகைய தோஷத்திலிருந்து விடுபட விரும்பவது உண்டு. 

    அத்தகையோர் மார்கழி மாத அமாவாசை தினத்தன்று நெல் அல்லது அரிசியைப் பரப்பி அதன் மேல் ஆறு செவ்வாழைப் பழங்களை வைத்து தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் அந்த செவ்வாழைப் பழங்களுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வர செய்த தவறுகளுக்கு பிராய சித்தம் பெற வழி பிறக்கும்.
     

  • Vasthu Tortoise

    வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த  அறிவுத்துறையாகும். 

    சீன வாஸ்து எனும் ஃபெங்க்சுயி முறையில் ஆமை எப்படித் தன் ஐந்து உறுப்புகளையும் (தலை மற்றும் கால்கள்) உள்ளடக்கிக்கொண்டு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி நீண்ட ஆயுளையும்,  விருப்பங்கள் உடனடியாக நிறைவேறுவதையும் ஆமை குறிக்கிறது.
     
    ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் விளங்காது என்ற சொல்வழக்கு உண்டு. ஆனால், உலோகத்தால் செய்யப்பட்ட ஆமையை, நீர் நிறைந்த ஒரு குவளையில் இட்டு, வீட்டினுள் வடக்கு திசையில் வைத்தால் சகல தோஷங்களையும் நீக்கும். 

    வடக்கில் படுக்கை அறை  அமைந்திருக்குமானால், வெறும் உலோக ஆமையைப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் பொருளாதார மேம்பாடு, பகைவரை வெல்லுதல், நீண்ட ஆயுள்,  பொறுமை முதலான பல பலன்களை நம்மால் ஈட்ட முடியும்.
     
    ஆமை மட்டும் இல்லை, ஆமையின் கூர்மாவதாரத்தில் தோன்றிய வலம்புரி சங்கு, காமதேனு, கற்பகவிருக்ஷம் ச்யமந்தக மணி, ஐராவதம், உச்சிஸ்ரவைஸ்  என அனைத்துமே வாஸ்து தோஷம் போக்கும் பொருட்களாகும்.