Tag: Valampuri Sangu

  • Selvam Kozhika Valampuri Sangu

    * வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.

    * வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.

    * கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.

    * கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.

    * ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.

    * கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. 16 எண்ணிக்கையில் வலம்புரி சங்கு கோலமிட்டு, நடுவில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்வது நல்லது.

    * சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.

    * வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம் இருக்காது.
     

  • Valampuri sangu thondriya kadhai

    சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அம்சமே சங்கு. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்கு உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரி சங்கு மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. 

    தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. 

    அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லக்மிகடாச்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும். சங்கு ஊதினால் அபசகுனம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.
     

  • Dhosham Neekum Valampuri sangu

    விஷ்ணுவின் அம்சமாக சாளக்கிராமம் இருப்பது போல, வலம்புரிச் சங்கு லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டின் தலைவாசலில் சங்கு பதித்தால் திருஷ்டி தோஷம் உண்டாகாது. பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருந்தால் தீய சக்தி நீங்கி தெய்வீக சக்தி நிலைக்கும்.

    வெள்ளிக்கிழமையன்று சங்கு பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும். தண்ணீரில் சங்கினைக் கழுவி சுத்தம் செய்து வாழையிலையில் அரிசி பரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும்.

    சந்தனம் குங்குமம், மலர்களால் அலங்கரித்த பின், லட்சுமி அஷ்டோத்திரம், 108 போற்றியை சொல்லி வழிபட வேண்டும்.
     

  • Manai dhosham Neekum Valampuri sangu

    பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசிபோட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப் பஞ்சமே வராது.

    காத்து கருப்பு சேஷ்டை உள்ள வீட்டில், பூஜை அறையில் ஒன்பது இடம்புரி சங்குகளை அடுக்கி ஒவ்வொரு சங்கினுள்ளும், ஒரு குண்டு மஞ்சள், ஒரு கருகுங்கிலிய கட்டி, ஒரு படிகாரக்கட்டி இவைகளை போட்டு தூப தீபம் காட்டி, வீட்டின் நான்கு மூளைகளிலும், நான்கு சங்குகளை புதைக்கவேண்டும். மீதம் இருக்கும் ஐந்து சங்குகளையும் வீட்டின் வாசலுக்கு நேராக கீழே புதைத்து விடலாம். இப்படி செய்தால் வீட்டில் காத்து கருப்பு சேஷ்டை அனுகாது.

    வீட்டை சுற்றி எட்டு திக்கிலும் எட்டு வலம்புரிச்சங்கையும் மண்ணில் புதைத்து விட்டால் மனை தோஷம் விலகும்.

    புது வீட்டின் வாசப்படிக்கு கீழ் மூன்று இடம்புரி சங்கும், வாசப்படிக்கு மேல் மூன்று வலம் புரி சங்குகளையும் வைத்து வீடு கட்டினால் மங்கள கரமான வீடாக இருக்கும்.

    வீட்டின் கிணற்றிலோ அல்லது போரில் பெளர்ணமி திதி அன்று சந்திர உதயத்திற்கு பின் வலம்புரி சங்கினுள் இறைவன் படம் பொறிக்கப்பட்ட தங்க காசு அல்லது வெள்ளி காசு போட்டு சங்கில் கடல் நீரை நிரப்பிய வாழை மரத்தின் சாரை அதில் கொஞ்சம் இட்டு கங்காதேவியை மனதில் நினைத்து பூஜித்து கினற்றிலோ அல்லது போரிலோ போட்டு விட்டால் அந்த நீர் புனித தீர்த்தமாக மாறி விடும்.

    மனிதர்கள் யாரேனும் இறக்கும் தருவாயில் இருக்கும் போது அவர்களுக்கு பச்சை பசும்பாலை வலம்புரி சங்கின் மூலம் வாயிலும், உச்சி தலையிலும் ஊற்றி வந்தால் அவர்களுக்கு ஜீவ முக்தியும், மறுபிறவி இல்லாமையும் இருக்கும்.

    சுமங்களிபூஜை செய்து குறைந்தது ஐந்து சுமங்கலிகளுக்கு வலம்புரி சங்கை தானமாககொடுத்தால், பெண்கள் தீர்க சுமங்களியாகவும் ஆரோக்கியத்துடன் நல்ல பிள்ளை பேறுகளும் நிலைத்து இருக்கும்.
     

  • Subeeksham Perukkum Valampuri Sangu

    வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகூர்த்த நாளில் சுபவேளையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து  நாட்கள் வாழை மரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேளையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால் நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும்.குடும்பம் சுபிட்ஷம் பெறும். பணம் வீண்  விரையம் ஆகாது.தெய்வகுறைகள் விலகும். குல விருத்தி அடையும்.

    வலம்புரி சங்கில் நெய் ,தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு தேன் விட்டு பஞ்சு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் ஐஸ்வர்ய கடாசம் பெருகும்.சுபகாரியங்கள் நடை பெறும்.

    இடம்புரி சங்கில் இலுப்பை என்னை ஊற்றி சிறிதளவு வேப்பமரத்து வேரை அதில் இட்டு சிகப்பு சேலை துண்டு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் துஷ்டசக்திகளும், தரித்திரங்களும் விலகும்.

    வலம்புரி சங்கு வழிபாடு நமக்கு வளத்தை கொடுக்கும். இடம்புரி சங்கு வழிபாடு நமக்கு இடர்களை நீக்கி நன்மையை உண்டாக்கும்.
     

  • Veetil Panam Niraindhu irukka

    வீட்டில் எப்போது லக்ஷ்மி கலாட்சம் நிறைந்து செய்யும் தொழில் மேன்மை அடைந்து செல்வம் கொழிக்க வலம்புரி சங்கு மிகவும் சிறந்த ஒன்று.பாற்கடலில் மஹாலக்ஷ்மியுடன் தோன்றிய பெருமை வலம்புரிச் சங்குக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

    எத்தனையோ லட்சங்கள் மற்ற சங்குகள் கிடைத்தாலும், அரிதினும் அரிதான வலம்புரி சங்கு கிடைப்பது  மிகவும் அரிதான ஒன்று.

    வலம்புரி சங்கு எங்கெல்லாம் இருகின்றதோ, அங்கு கண்டிப்பாக திருமகள் குடி கொண்டிருப்பாள் என்பது ஐதீகம்.மேலும் நாம் செய்யும் எந்த வேலையும் தடை இல்லாமல்  நடக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது.அதேபோல் தான் வலம்புரி சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துஷ்ட சக்திகள் எதுவும் அண்டாது.

    கண்திருஷ்டி படாது, எதிரிகள் ஒதுங்கி போவார்கள்.கடன் பிரச்சினை நீங்கும்.மேலும்,எதிர் மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

    வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் மறைந்து நல்ல சக்திகள் உள்ளே வரும் என்பது காலம் காலமாக உள்ள ஐதீகம்.