Tag: Thiruverkadu

  • 2025 English New Year: Special arrangements at Thiruverkadu Temple

    ருகிற 2025 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. 

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்று அம்மனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக, முந்தைய தினமான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. 

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து, கோவில் அலுவலகத்தில் கோவில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    அதன்படி, வருகிற புத்தாண்டையொட்ட்டி  நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்வது, கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் குளியலறை வசதி, அன்னதானம், பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

    கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜை தொடங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலின் உப கோவிலான சம்மந்தரால் பாடல்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமும், நான்கு வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட தலமான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், 2025 புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக டிசம்பர் 31 ஆம் தேதி 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபி ஷேகங்கள் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. 
     

  • Thiruverkadu theppam

    ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவேற்காட்டில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

    இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோயிலில் இருந்து பலக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைத்து கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

    இதில் மூன்றாம் நாளான இன்று தெப்பத்தில் 11 சுற்றுகள் கோயில் குளத்தில் சுற்றி வரப்பட்டது மேலும் பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தெப்ப உற்சவத்தை காண கோயில் தெப்ப குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  • Thiruverkadu amman koil

    சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறை மணி காட்சி நடைபெறும் இந்த ஆண்டும் கோவில் மூலஸ்தானம் மற்றும் முன் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டது. 

    தேவலோகத்தில் இருப்பது போல் இருக்க வேண்டும் என்பதற்காக பழங்கள், காய்கறிகள் கட்டி தொங்க விடப்பட்டன. பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் காட்சி அளித்தது. மேலும் நாம் வேண்டியது நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் உலகில் உள்ள ஜீவ ராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்றும் மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்வதாகவும் தெரிவித்தனர். 

    மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அந்த பழங்கள், காய்கறிகளை புகைப்படம் எடுத்து சென்றனர்.

  • Thiruverkadu temple ther

    திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திரு தேர் திருவிழாவில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று.இதில் 26 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருந்திருவிழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   

    7 வது நாளான இன்று தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கருமாரியம்மன்  அமர்ந்து காட்சி அளித்தார்.இந்த தேரை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிர் வேட்டுகள் முழங்க ஓம் சக்தி என்ற கோஷங்களுடன்   வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஊர்வலத்தில் மயிலாட்டம்,ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,தாரை என பல்வேறு கிராமி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • Thiruverkadu Karumari amman

    சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைமணி வைபவ உற்சவவத்தை முன்னிட்டு  2 டன் காய், கனிகளால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
     
    தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் ஒன்று. இங்கு  ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமியில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும்.உலக ஜீவ ராசிகளின் பஞ்சத்தை போக்க அம்மன் தன் சரிரத்த்தில் அனைத்து விதமான காய்,கனி,தானியங்களை உற்பத்தி செய்து அனுக்கரித்தாக ஐதீகம். 

    இதனை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு புரட்டாசி மாதம் பவுர்ணமி  அன்றும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும் அந்த வகையில் இன்று நடைபெற்ற நிறைமணி உற்சவவத்தில் அம்மன் 2 டன் காய்,கனி,தானியங்கள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    முன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்த்தில் கடைசி நாளில் இங்கு அலங்கரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.அம்மனின் நிறைமணி அலங்காரத்தை காண ஆலயத்திற்கு  பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.