Tag: Thiruthani

  • Thiruthani murugan koil Aadi kiruthigai

    திருத்தணி முருகன் கோவிலில் இம்மாதம், 24ம் தேதி முதல் 28 ம் தேதி  வரை ஆடிக்கிருத்திகை  திருவிழா நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசிப்பர். 

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  மலைக்கோவிலில் நடந்தது. 

    ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவுள்ளது. விழாவிற்கு, அரசு போக்குவரத்து துறை சார்பில், மொத்தம், 260 பேருந்துகளும், ரயில்வே துறை சார்பில் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    பக்தர்கள் பாதுகாப்புக்காக, 2000 போலீசார் ஈடுபடுத்தபட உள்ளனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்சம்பங்கள் எதுவும் நடக்காமல் இருக்கவும், பொது சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறி இருக்கிறார். 
     

  • Thiruthani vel

    திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மின் விளக்குகளால் ஆன வேல் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், மலைக்கோவிலில் உள்ள மாடவீதிக்கு முன்பாக, 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் நிர்வாகம், 123 அடி உயரத்திற்கு ராஜகோபுரம் கட்டும் பணிகளில் நிறைவடைந்தது. 

    மேலும், ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதிக்கு இணைப்பு படிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த ஒரு பக்தர் கதிரவன் என்பவர் கோவிலுக்கு, 5 லட்சம் ரூபாய் காணிக்கை வழங்கினார், ராஜகோபுரம் முன்புறத்தில் மின்விளக்குகளால் ஆன 45 அடி உயரத்திற்கு வேல் பொருத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து ராஜகோபுரத்தின் மீது கோவில் நிர்வாகம் வேல் பொருத்தம் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
     

  • Thiruthani bramorchava kodiyetram

    திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

    திருத்தணி கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினந்தோறும் காலை இரவு பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.

    முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ இன்று காலை 6.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை மாத பிரம்மோற்சவயொட்டி இன்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதை தொடர்ந்து, தினமும், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, மாலை ஆகிய இருவேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.வரும், 16ம் தேதி தேர் திருவிழாவும், 17ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 19ம் தேதி உற்சவர் சண்முகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைபெறுகிறது.

  • Thiruthani Hundiyal Ennum

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் ஆகியவை திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தால்-34- நாட்களில் உண்டியல் பணம் என்னும் பணி மலைக்கோயில் மேல் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.

     காலையில் தொடங்கிய இந்த பணியில் சேலம் மாவட்டத்திலிருந்து தமிழக முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தன்னார்வ முருக பக்தர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியினை மேற்கொண்டனர் மற்றும் இந்த பணியில் திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் ஆகியவர்கள் ஈடுபட்டனர்.

     காலை முதல் மாலை வரை உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயிலின் இணை ஆணையர் செயலாளர் சிவாஜி திருக் கோயில் தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர்கள் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது என்ன பட்ட பணம் எவ்வளவு என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

     பணமாக 92 லட்சத்து 32 ஆயிரத்து 713 ரூபாய் தங்கம் ஆயிரத்தி 178 கிராம் வெள்ளி ஏழாயிரத்து 881 கிராம் ஆகியவை பக்தர்கள் முருகன் கோயில் மற்ற உப கோயில்களில் செலுத்திய பணம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

  • Thiruthani vallammai Kalyanam

    திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 10ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து 9வது நாள் அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். 

    முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயில் முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை  சமாதானம் செய்து கோயிலுக்குள் செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

  • Thiruthani thirukalyanam

    திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலை நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 10ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து 9வது நாளான இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர்.

     முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயில் முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை  சமாதானம் செய்து கோயிலுக்குள் செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

  • Thiruthani Murugan koil Ther Video

    திருத்தணி முருகன் கோயிலில்  மாசி பிரம்மோற்சவம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மரத்தேரோட்டம். மேள தாளங்கள் முழங்க, முருகன் பஜனை குழுவினர்  பக்தி பாடல்கள் இசையுடன், முருகப்பெருமான் மலைக் கோயில் மாட வீதிகளில் உலா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

    முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் மாசிமாத பிரம்மோற்சவம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. உற்சவ விழாவில் தினம் தோறும் உற்சவர்  சிறப்பு அலங்காரத்தில் வாகன சேவைகளில் எழுந்தருளி  மலைக் கோயில் மாட வீதிகளில் உலா நடைபெற்று வருகின்றது. 

    உற்சவ விழாவில் 7ஆம் நாளில் மாலை சிறப்பு பெற்ற மரத்தேரோட்டம் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயில் தேர்  பழுதடைந்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்ட தேர் புதுபிக்க வேண்டும் என்று  முருக பக்தர்கள் கோரிக்கை  இந்து அறநிலைத்துறை  கண்டுக்கொள்ளாத நிலையில் திருத்தணி  முருகன்  திருவடி திருச்சபை சார்பில்  ரூ.50 லட்சம்  மதிப்பீட்டில்  33 அடி உயரமுள்ள மரத்தேர் புதியதாக உருவாக்கப்பட்டு திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

    இதனை அடுத்து இன்று  மாலை நடைபெற்ற தேர் திருவிழாவை யொட்டி  மரத்தேர்   மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத உற்சவர் சுப்பிரமணியர்  சிறப்பு  அலங்காரத்தில் மரத்தேரில்  அமர்ந்தனர். கோயில் அர்ச்சர்கள் சிறப்பு பூஜைகள் தீபாராதனை தொடர்ந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேர் பவனி நடைபெற்றது. மலைக் கோயில் சுற்றி  தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அரோரக என்று பயபக்தியுடன் வழிபட்டனர். 

    தேர் மாட வீதிகளில்  உலா சென்ற போது முருகன் பக்தி குழுக்கள் திருமுருகன் பாடல்கள் இசைத்தவாறும், கெண்டை மேளம், நாதஸ்வரம், பஜனைகள்  மலைக்கோயிலில்  கோலாகலத்தை ஏற்ப்படுத்தியது. தேரோட்டத்தில் திருத்தணி கோ.அரி எம்.பி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

  • Thiruthani maasi peruvizha

    திருத்தணி முருகன் கோயில் மாசிப்பெருவிழா இன்று தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.

    முருனனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை 5.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    மாசித்திருவிழாயொட்டி  இன்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற உள்ள மாசித் திருவிழாவில் உற்சவர் கடவுள் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன் சேவைகளில் எழுந்தருளி மலைக் கோயில் ராஜ வீதிகளில் உலா நடைபெறும் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் முருகன் கோயிலுக்கு வருவார்கள்ள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
     

  • Thiruthani Murugan Thai Poosam

    திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.

    ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கும் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

     விழாவை முன்னிட்டு வெளியூர்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பஸ், கார்கள் மலைக்கோயிலில் வந்து குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தைப்பூச விழாவையொட்டி 50 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு கவுன்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதுபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.