Tag: Thirupathi

  • Intriguing Secrets of Tirupati Venkateshwara idol

    There are millions who worship Lord Venkateshwara of Tirumala, but there are very few who know the glory of the statue of Tirupati Ezhumalayan. Let’s take a look at the intriguing secrets of the Lord’s statue in Tirumala, Tirupati. The Tirupati Venkateshwara statue is made of a 250 crore year old rare rock called "Silatoranam". Tirumala is located at an altitude of 3,000 feet. At such a cold temperature, The Lord is anointed (abhishegam) with cold water, milk, Sandalwood paste, etc at 4.30 am, but when the abhishegam is over, Lord Venkateshwara sweats. An intriguing fact, indeed!

    It is believed that Lord opens his third eye during the anointing, hence heat emanates!

    Scientifically, applying tender camphor on black stone or a statue carved out of it, will cause it to explode immediately. But, despite being applied with tender camphor throughout the day, there is no hazardous reaction.

    The sculptor's chisel marks are visible on any statue. Even a metal statue shows the moulding marks. But nothing like that is seen in the Lord’s Statue.

    Take any stone statue, it will have a rough texture. But, the intricate carvings on Ezhumalayan Thirumeni are all so smooth!

    So next time you visit Tirumala, think of how marvellous the Lord is and rever his mysterious Thirumeni!

  • November 21 Thirupathi Puspangi Sevai

    நவம்பர் 21 – திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை….  
    விகாரி வருடம் – கார்த்திகை 5
    21-நவ-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    நவமி    கா    9.35
    நட்சத்திரம்    :    பூரம்    மா    5.18
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்,சதயம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Thirupathi laddu Paper bag

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சணல் மற்றும் பேப்பர் பெட்டிகளில் லட்டு தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.   அவ்வாறு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு வழங்குவதற்காக லட்டு பிரசாதத்தை ஒவ்வொரு பக்தர்களும் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்று செல்கின்றனர். 

    இதற்காக லட்டுகளை எடுத்துச் செல்ல மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர்கள் தேவஸ்தானம் சார்பில் ரூ 3 விலைக்கு பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இருப்பினும் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்காக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    அதன் ஒரு கட்டமாக பிளாஸ்டிக் கவர்களுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. இன்று முதல் பேப்பர் மற்றும் சணல் மூலம் தயார் செய்யப்பட்ட பை மற்றும் அட்டை பெட்டிகள் மூலம் லட்டு கொண்டு செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்காக ஒரு லட்டு பிடிக்கும் விதமான அட்டை பெட்டி 3 ரூபாயும், 2 லட்டுகள் பிடிக்கும் விதமான அட்டைப்பெட்டி 5 ரூபாயும்,  4 லட்டுகள் பிடிக்கக்கூடிய அட்டைப் பெட்டி 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதேபோன்று 5 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சனல் பை 25 ரூபாயும், 10 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 30 ரூபாயும்,  15 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 35 ரூபாய்,  25 லட்டுகள் கொண்டு செல்லக்கூடிய சணல் பை 55 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் லட்டு  பெறக்கூடிய பக்தர்கள்  பேப்பர் பெட்டி அல்லது சணல் பைகளில் மட்டுமே லட்டுகளை கொண்டு செல்ல முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சணல் அல்லது பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

  • thirupathi sarva dharisanam cancel

    திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதையொட்டி, திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். இதனால் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், அதிக கூட்டம் காரணமாக இன்றுமுதல் வரும் 13 ம் தேதி வரை மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Thirupathi Ezhumalayan Ariya Thagavalgal

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் திருப்பதி ஏழுமலையான சிலையில் காணமுடியாது. சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட தங்கம் போல பளபளப்பாக மின்னும்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

  • Thirupathiyil Uriyadi Urchavam

    கோகுலாஷ்டமியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் காலிங்க நர்தன கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், உறியடிஉற்சவம் நடைபெற்றது.

    திருமலை திருப்பதி தேவஸ்தான  தோட்டத் துறையின் சார்பில் கோகர்ப்பம் அணையின் எதிரே உள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு தோட்டத்துறை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் பால், பஞ்சாமிர்தம், மஞ்சள் ,சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு ஆரத்தி வழங்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து உறியடி உற்சவம் நடைபெற்றது இதில் உள்ளூர் இளைஞர்களும் பக்தர்களும் திரளாக பங்கேற்றனர். நாளை கிருஷ்ணாஷ்டமி ஒட்டி ஏழுமலையான் கோவில் எதிரே வழுக்கு மரம் ஏறும் உற்சவம் நடைபெற்றது. 

    இதையொட்டி மதியம் கோவிலில் இருந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஒரு பல்லக்கிலும்,  ஸ்ரீ கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கில் எழுந்தருளி பெரிய ஜீயர் மடம்,  ஹத்திராம் பாபா ஜீ மடம் சென்று நான்கு மாடவீதிகளில் வழியாக மீண்டும் மாலை கோவிலை வந்தடைந்தார். 

  • Thirupathi Mudi Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய தலைமுடி காணிக்கை ஏலம் விட்டதின் மூலமாக 7.94 கோடி ரூபாய் வருவாய்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடிகள் இன்று  ஏலம் விடப்பட்டது. 4 ஆயிரத்து 300 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் 7.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

    ஒரு கிலோ 22,499 ரூபாய் என  31 அங்குலத்திற்கு மேல் உள்ள முதல் ரக தலைமுடி  4100 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் 1000 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலமாக 2.25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 16 முதல் 30 அங்குலத்திற்கு உட்பட்ட இரண்டாவது ரக தலைமுடி ஒரு கிலோ 17 ஆயிரத்து 250 ரூபாய் என 30 ஆயிரத்து 900 கிலோ தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டதில் 3300 கிலோ விற்பனை செய்ததன் மூலமாக 5.69 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

    முதல் மற்றும் இரண்டாவது ரக தலைமுடி 4 ஆயிரத்து 300 கிலோ விற்பனை செய்யப்பட்டதில் மொத்தம் 7. 94 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • Thirupathi Arjidha Sevai Divya Dharisanam Cancel

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    2019 ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் சாதாரண பக்தர்களை கோவிலில் சாமி தரிசனத்துக்கு எப்படி அனுமதித்தோமோ அதேபோல், 2019 ஆங்கில புத்தாண்டு தினத்திலும் பக்தர்களை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உள்ளோம், எனத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     
    டிசம்பர் – 31, ஜனவரி – 1 இரு நாட்கள் ஏழுமலையான் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் கார்டு வழங்குவது, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கான அனுமதி சீட்டு வழங்குவது, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள் ஆகியோருக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 7 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நாளை, நாளை மறுநாள் சாதாரண பக்தர்கள் இலவச தரிசனத்தில் எப்போதும் போலவே ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி தரிசன நடைமுறைகள் எப்படி பின்பற்றப்பட்டதோ, அதேபோல் 2019 ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கான தரிசன நடைமுறை பின்பற்றப்படுகிறது. நாளை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் 500 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடக்கின்றன. 1.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இருந்து மறுநாள் நள்ளிரவு 1 மணிவரை இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.