Tag: Thirunallaru

  • Thirunallaru sani peyarchi

    நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு  காரைக்காலை  அடுத்துள்ள திருநள்ளாறில் கோயில் அமைந்துள்ளது. தர்பாரண்யேஸ்வரர்  என்று அழைக்கப்படும் இந்த தேவஸ்தானத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .இங்கு சனீஸ்வர பகவான் அபய ஹஸ்த முத்திரையுடன் கிழக்கு நோக்கி அருள் செய்துவருகிறார் . பரிகார தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்திற்கு தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி  வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இதனால்  இங்கு கூட்டம் குவியும்.

    அடுத்து நடைபெற இருக்கிற சனி பெயர்ச்சியையொட்டியும்  சனிப் பிரதோஷம் என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும்  பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். 

    வருகிற 27-ஆம் தேதி அன்று  அதிகாலை 5. 22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார் .இதனால் மகரராசி,  கும்பராசி ,தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் ஆகும். மிதுன ராசிகாரர்களுக்கு அஷ்டமசனி காலம் ஆகும். விருச்சிக ராசி, சிம்ம ராசி மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களே ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

    சனிப் பெயர்ச்சியை ஒட்டி வருகின்ற பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கோடு மாவட்ட நிர்வாகத்துடன் தேவஸ்தான நிர்வாகம் இணைந்து முன் ஏற்பாடுகளை  செய்து வருகிறது.

  • Thirunallaru Sani Peyarchi

    திருநள்ளாறில் டிசம்பர் 27 அரசு விதிமுறைகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    புகழ்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதை சனிப்பெயர்ச்சி விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இந்தாண்டு வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி இன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பந்தல்கால் முகூர்த்துடன் சனிப்பெயர்ச்சி விழா துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, துணை ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான ஆதர்ஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் "இது சனி பெயர்ச்சிக்காண தொடக்க நிகழ்ச்சி ஆகும் என்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் எனவும் சனிபெயர்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  • thirunallaru Sani Peyarchi

    திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதியில் டிசம்பர் 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். சனிப்பெயர்ச்சி வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதியே பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. 

    திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளமாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ், திருநள்ளாறு கோவிலில் டிசம்பர் 27-ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது என்று கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
     

  • Thirunallaru Nandhi

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை தோறும் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

     கடந்த ஓரிரு மாதங்களாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது . இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். சாலைகளில் வீசும் அனல் காற்று வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. 

     இந்நிலையில் மழை வேண்டியும், வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டியும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தியை சுற்றிலும் தொட்டி கட்டி , அதனுள் நீரூற்றி நந்தி குளிர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் ஓதி மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். 

    இதை தொடர்ந்து பல்வேறு  திரவியங்களைக் கொண்டு நந்திக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  மகா தீபாராதனை காட்டப்பட்டது. காரைக்காலில் கடந்த சில மாதங்களாக ஒரு துளி மழை கூட விழாத நிலையில் மழை வரும் வரை இந்த வழிபாடு தொடரும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.

  • Thirunallaru Yagasalai poojai thodangiyadhu

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 11 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி உள்ளது. 

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜையும், தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி உள்ளது. 
     
    வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது. கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

  • Thirunallaru Kumbabishegam

    திருநள்ளாறு கோவிலின் 14 வருடங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நவகிரகத் தலங்களில் முக்கியமானது. சனி பகவானின் மிக முக்கிய பரிகாரத் தலமுமாக திருநள்ளாறு கோயில் இருக்கிறது. 

    இக்கோயிலில் 14 ஆண்டுகளுக்கு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் புதுவை அரசுக்கு கோரிக்கை வந்தது. இந்நிலையில், தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

  • Thirunallaru Sani Parigara thalama

    பெரும்பாலோனோர் திருநள்ளாறு திருத்தலத்தை சனியின் பரிகாரத் தலமாக கருதுகின்றனர். அவ்வாலயம் சனியது ஆலயமோ சனிக்கு ப்ரீதியான இடமோ அல்ல. அவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் தளமாகும்.

    வருத்ததிற்கு உரிய விஷயம் என்னவென்றால் சுவற்றில் குடையப்பட்டிருக்கும் சனியை பார்க்க முந்தியடித்து செல்லும் மக்கள் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிப்பதில்லை.

    தல வரலாறு:
    நள தமயந்தியை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.  நளமகாராஜாவுக்கு 7 1/2 சனி பிடித்தது. அவரது ராஜ்யம், மனைவி தமயந்தி மக்கள் அனைவரையும் இழந்தார். எனினும் சனியானவர் நள மகாராஜாவை விடாமல் துரத்தினாராம்.

    அப்பொழுது நளமகாராஜா திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று ஈசனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே ஈசன் அங்கு தோன்றி, சனியை ஆலயத்தின் உள்ளே வராதே என்று சொல்ல சனியும் ஆலய வெளியிலேயே நின்றுவிட்டார்.

    அத்துடன் திருநள்ளாறு வந்து என்னை அதாவது, ஸ்ரீ தர்பாரனண்யேஸ்வரரை தரிசத்து செல்பவரை சனி பிடிக்கக்கூடாது என்று கட்டளை இட்டார். ஆக திருநள்ளாறு திருத்தலத்தில் தரிசிக்கப்பட வேண்டிய மூர்த்தி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரே தவிர சனி அல்ல.

    ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் பெற்றாலே சனி பீடை தானே விலகிவிடும். ஆக இதைப்படிக்கும் அன்பர்கள் திருநள்ளாறு சென்றால் சனிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை கட்டாயம் தரிசியுங்கள்.

    தல விருட்சம்:

    திருனள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தல விருக்ஷமாக இருப்பது தர்பைப்புல் தாவரம். இதுவே அவ்வாலயம் சனி பரிகார ஸ்தலம் அல்ல என்பதை நிரூபிக்கும். ஏனெனில் சனியது அபிமான தாவரம் வன்னி எனப்படும் மரமே தவிர தர்பைப்புல் அல்ல….