Tag: Thai Poosam

  • thai poosam thirunaal vazhipadu

    பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

    சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார். தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். முருகப் பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங் களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான். சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத் தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

    தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம். தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

     

  • February 05 2023 Thai Poosam

    பிப்ரவரி 5 – தைப்பூசம்
    சுபகிருது வருடம் – தை 22   
    பவுர்ணமி
    தைப்பூசம்
    பழநி, மருதமலை முருகன்,
    கோவை பாலதண்டாயுதபாணி,
    நாகர்கோவில் நாகராஜா தேர்,
    சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
    05-பிப்-2023 ஞாயிறு  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30  
    திதி : பவுர்ணமி     
    திதி நேரம் : பவுர்ணமி ந.இ 12.48
    நட்சத்திரம் : பூசம் ம 1.14
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thai Poosam poojai seiya ugandha neram

    பூசம் என்றாலே பலருக்கும் தைபூசம் தான் நினைவுக்கு வரும்..அதிலும் தைபூசம் என்றால் முருக பெருமான் தான் முதலில் நினைவுக்கு வருவார். அத்தகையை பூச நட்சத்திரத்தை நம்பெருமான் ஈசரோடு தொடர்புபடுத்தி ஞானசம்பந்தரும்,அப்பர் பிரானும் பாடியருளியதை காண்போம்.

    "ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே''  என்று திருநாவுக்கரச பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்.  ''பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய ஈசன்  உறைகின்ற இடைமருது''  என்றும், ''வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த''  என்றும் #திருஞானசம்பந்த பெருமானும் போற்றி மகிழ்கின்றார்.

    மயிலாப்பூரில்  நாகம் தீண்டி மடிந்த பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்து எழுப்பும் போதும் ''நெய்ப்பூசும் ஒண்புழுக்க நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்.

    "நெய் நிறைந்த பொங்கல் படைத்துப் பெண்கள் கொண்டாடும் தைப்பூச விழாவினைக் காண வருவாய்…பூம்பாவையே!….'' என்று தைப்பூசத்தினைக் குறித்து பாடியருள்கின்றார். தேவேந்திரன் கடல் நுரை கொண்டு விநாயகர் திருமேனியினை வடிவமைத்து வணங்க –   அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டு  – விநாயகர் விளங்கும்  திருத்தலமும் ஆகிய – திருவலஞ்சுழியில் – திருஞானசம்பந்தப்பெருமான்  பணிந்து வணங்கும் போது – 

    ''பூசநீர் பொழியும் புனற்பொன்னியில் பன்மலர் 
    வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேசநீர்'' 

    ''பலவகையான  மலர்களைச் சுமந்து வருவதனால் நறுமணம் மிக்கதாக விளங்கும் பொன்னி எனும் காவிரி நதியில், பூச நன்நாளில் நீராடி – உமது திருவடிகளைப் பணிபவர்களுடைய இடர்களை நீக்கி அருளும் பெருமானே!..'' – என்று சிவபெருமானிடம் விண்ணபிக்கும் பாடல்களை காணலாம்…

    இப்படி பெருமை மிகுந்த தைப்பூசம் திருவிழா நாளை (18-1-2022) பெளர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து இருக்கும் நேரம் காலை 5-29 முதல் 5-56 வரை தைப்பூசம் பூஜை செய்ய உகந்த நேரம்.

  • January 18 2022 Thai Poosam

    ஜனவரி 18 – தைப்பூசம்
    பிலவ வருடம் – தை 5
    தைப்பூசம், 
    மதுரை மீனாட்சி, 
    சென்னை கபாலீஸ்வரர் தெப்பம், 
    கோவை பாலதண்டாயுதபாணி, 
    பழநி, 
    மருதமலை முருகன், 
    நாகர்கோவில் நாகராஜா தேர்
    18-ஜன-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    பூசம்    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • January 28 Thai poosam

    ஜனவரி 28 – தைப்பூசம்
    28-ஜன-2021 வியாழன்  
    மதுரை மீனாட்சி வண்டியூரில் தெப்பம்
    மருதமலை முருகன் தேர்
    சார்வரி வருடம் – தை 15
     பவுர்ணமி பவுர்ணமி
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    ந.இ    1.35
    நட்சத்திரம்    :    பூசம்    அ.கா    4.48
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • thai Poosam murugan Padal

    தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடினால் துன்பங்கள் நீங்கி வளமான வாழ்வை பெறலாம்.

    தைப்பூசம் அன்று பாடவேண்டிய முருகன் பாடல்
    அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில் 
    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

     முருகாஎன்று ஓதுவார் முன்.

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
    குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    தொளைத்த வேலுண்டே துணை.

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
    வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

    திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
    பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
    மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
    குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.

    கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
    உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
    தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
    வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

    மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
    வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
    கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க 
    எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி மேருவையே.

    ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
    ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
    மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!
     

  • February 8 Thai Poosam

    பிப்ரவரி 8 தைப்பூசம்
    விகாரி வருடம் – தை 25
     பவுர்ணமி 
    தைப்பூசம், 
    மதுரை மீனாட்சி வண்டியூரில் தெப்பம், 
    கோவை பாலதண்டாயுதபாணி, பழநி முருகன், மருதமலை முருகன், சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
    08-பிப்-2020 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ப    3.32
    நட்சத்திரம்    :    பூசம்    இ    10.03
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Palani Thai Poosam

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின.

    கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

    அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

  • Thai Poosam Viradha murai

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

    தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுநாளும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
     

  • Thai Poosam Important Information

    முருகப் பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங் களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

    தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.

    பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

    தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.

    இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

    சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.

    தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர் கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

    தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

    தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான்.

    சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத் தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

    தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.