Tag: superstition

  • Cat Omen: The Backstory of the Superstition

    எவ்வளவுதான் அறிவியலும் நாகரிகமும் முன்னேறினாலும், சில மூடநம்பிக்கைகளை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அப்படியொரு பழக்கம் தான் பூனை சகுனம். வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்தா, அதை அபசகுனம்னு நினைச்சு, வேலையை நிறுத்திட்டு, வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிச்சு, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து, பிறகு திரும்ப கிளம்புவோம். இந்த பழக்கத்தோட பின்னணி கதை ரொம்ப சுவாரசியமானது.

    பழங்காலத்துல தெருவிளக்கு இல்லை. ஊருக்கு ஊர் மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டில தான் பயணம். இரவு நேர பயணத்துல, இருட்டுல பூனையோட கண்கள் மட்டும் ரேடியம் மாதிரி மின்னும். பூனையோட உருவம் தெரியாது, ஆனா கண்கள் மட்டும் பளிச்சுனு தெரியும். இது புலி, சிறுத்தை மாதிரியான காட்டு விலங்குகளோட கண்களுக்கும் பொருந்தும். இப்படி மின்னுற கண்களைப் பார்த்து மாடு, குதிரை பயந்து மிரளாம இருக்க, வண்டியை ஓட்டுறவங்க சிறிது நேரம் வண்டியை நிறுத்தி, மாடு அல்லது குதிரைக்கு தண்ணீர் கொடுத்து, கொஞ்சம் ஓய்வு கொடுப்பாங்க.

    வண்டி ஓட்டுபவனும் தண்ணீர் குடிச்சு ஓய்வெடுத்து பயணத்தை தொடருவான்.காலப்போக்கில் இது மாறி, பூனை குறுக்கே வந்தா அபசகுனம்னு மாறிடுச்சு. இனி இந்த மூடநம்பிக்கையை மனசுல வச்சு குழப்பிக்க வேண்டாம். பூனை வந்தாலும், வரலேன்னாலும், மனசு திருப்தியோட செய்யுற எந்தக் காரியமும் வெற்றியில முடியும்னு நம்புவோம்.

  • Is it wrong to give charity when going to and from the temple?

    நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது மனக் குழப்பத்திலோ இருக்கும்போது, இஷ்ட தெய்வங்களை வணங்க கோவில்களுக்கு செல்வது வழக்கம். அங்கு இறைவனை வேண்டி விட்டு திரும்பும்போது, வாசலில் சிலர் தர்மம் கேட்பது இயல்பு. ஆனால், பலர், “கோவிலில் வேண்டுதல் நிறைவேறியது, இப்போது தர்மம் செய்தால் வரம் பறிபோய்விடும், பலன் கிடைக்காது” என தவறாக நம்பி, தர்மம் செய்ய தயங்குகின்றனர். இது முற்றிலும் மூடநம்பிக்கை.

    இறைவனை வணங்கிவிட்டு, பெரும் தொகையை தானமாக அளித்து, “இவ்வளவு செய்தோம், இவ்வளவு புண்ணியம் கிடைக்கும்” என எண்ணுவதும் தவறு. உதவி தேவைப்படுவோருக்கு, நம்மால் முடிந்த உதவியை, பாகுபாடின்றி, சரியான நேரத்தில் செய்ய வேண்டும். தர்மம் உரியவரை முழுமையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பணம் மட்டும் கொடுத்துவிட்டு, “புண்ணியம் கிடைத்துவிடும்” என நினைப்பது சரியல்ல.

    உதாரணமாக, கோவிலில் இருந்து திரும்பும்போது, ஒரு முதியவர் பசியால் உணவு கேட்கிறார் என்றால், “கோவில் வந்துவிட்டேன், தர்மம் செய்ய மாட்டேன்” என மறுப்பது தவறு. பசியை உடனே தீர்ப்பதே உண்மையான தர்மம். அது நம் புண்ணிய கணக்கில் சேரும். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும், அவரவர் பூர்வ ஜென்ம பலன்களால் வாழ்கிறது. நல்ல எண்ணங்களுடன், நன்மைகளை மேம்படுத்த முயற்சிப்பது நம் கடமை. தர்மத்தை பகுத்தறிந்து, மனிதாபிமானத்துடன் செய்வோம்; அதுவே இறைவனுக்கு உகந்தது.