Tag: Sivan

  • Coconut Sivan

    மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தூர் மாவட்டம் நகரியில் 100 அடி உயர தேங்காய் சிவன். 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சமீபத்தில் உள்ள கீழப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தபட்டுள்ள 100 அடி உயர தேங்காய் சிவன் சிலை பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    கீழப்பாடு கிராமத்தில் உள்ள  திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் ஒரு லட்சம் தேங்காய்களை பயன்படுத்தி 100 அடி உயர சிவன் சிலையை பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைத்துள்ளார்.

    சுமார் ஒரு மாத காலம் உழைத்து கணேஷ்  ஏற்படுத்திய தேங்காய் சிவன் சிலையை பக்தர்கள் பார்த்து ரசித்து தரிசித்து செல்கின்றனர்.

  • Sivalayangalil valam varuvadhu eppadi

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.

    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது

    நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். 

    பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.
     

  • Sivanukku Mattum Poojai Seiyalama?

    சிவலிங்கத்தை முறையாக பராமரிக்க முடியாவிடில், வீட்டில் வைப்பது நல்லதல்ல. வழக்கமான பூஜைகளை விட சிவலிங்க பூஜைகள் தனித்துவம் வாய்ந்தது. அதன் பூஜை முறைகளும் வித்தியாசமானது. தவறாக பூஜை செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    முதலில் குளித்தவுடன் கங்கை தீர்த்தத்தை கட்டாயம் தெளிக்க வேண்டும். குளிப்பதனால் உடல் சுத்தமானாலும், கங்கை நீர் தெளித்தால் தான் மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.

    ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சிவலிங்கத்தை எடுத்து வைப்பதற்கு முன்பாக சிவலிங்கத்தின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் அதனை கங்கை நீர் கலந்த சுத்தமான நீரில் முக்கி எடுக்க வேண்டும். கல் வடிவில் இருந்தால் அதன் மீது கங்கை நீர் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.

    பதப்படுத்தப்பட்ட பாலை சிவலிங்கத்திற்கு ஊற்றி பூஜை செய்யக் கூடாது. ஐஸ் பாலில் தான் பூஜை செய்ய வேண்டும்.தினசரி சிவலிங்க வழிபாட்டிற்கு முன்பு 3 வரி சந்தன பட்டையை லிங்கத்தின் மீது பூசவும்.சிவலிங்கத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்றால், தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் செய்த நாகயோனி நிழலில் வைக்க வேண்டும்.

    வீட்டில் சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். லிங்கத்தின் மீது தண்ணீர் படவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.சிவலிங்கத்தை மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது. அத்துடன் கௌரி அல்லது விநாயகரின் களிமண் சிலையை வைத்து பூஜை செய்ய வேண்டும்.சிவலிங்கத்திற்கு பூஜை செய்த எந்த ஒரு பொருளையும் பிரசாதமாக உண்ணக் கூடாது.

    எப்போதும் சிவனுக்கு மிகவும் பிடித்த வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்ய்யுங்கள்.தினமும் சிவலிங்கத்தை துடைத்து சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜையை தவறாமல் செய்தால் சிவனின் அருள் கிட்டும்