Tag: Siva Rathiri

  • October 15 Siva Rathiri

    அக்டோபர் 15  – மாத சிவராத்திரி
    சார்வரி வருடம் – புரட்டாசி 29
    15-அக்-2020 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    திரையோதசி    கா    6.35
    நட்சத்திரம்    :    உத்திரம்    மா    5.27
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Monthly Siva Rathiri

    சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது… சிவராத்திரி. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படும். மாதந்தோறும் சிவராத்திரி வரும். இந்த நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அதேபோல், விரதம் இருக்கிறார்களோ இல்லையோ… அன்றைய தினம் சிவன் கோயிலுக்குச் சென்று தென்னாடுடைய சிவனை வழிபடுவார்கள் பக்தர்கள்.

    மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் சிவபெருமான்.

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.

    சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். பிரதோஷமும் சிவனாருக்கு உகந்த நாள். சிவராத்திரியும் பிரதோசஷமும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக் கூடியது.
     

  • July 19 Month Siva Rathiri

    ஜூலை 19 – மாத சிவராத்திரி
    சார்வரி வருடம் – ஆடி 4
    19-ஜூலை-2020 ஞாயிறு 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ந.இ    12.17
    நட்சத்திரம்    :    திருவாதிரை    இ    10.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • March 4 Maha Siva Rathiri

    மார்ச் 4 மகா சிவராத்திரி
    விளம்பி வருடம் – மாசி 20
     மகா சிவராத்திரி
    04-மார்-2019 திங்கள் 
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    மா    5.58
    நட்சத்திரம்    :    திருவோணம்    ம    1.38
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Siva Rathiri Veetil Poojai

    சிவராத்திரி அன்று சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    முதல் ஜாம பூஜை – மாலை 6 முதல் 9 மணி வரை: 
    ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் , அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

    இரண்டாம் ஜாம பூஜை – இரவு 9 முதல் 12 மணி வரை : 
    பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

    மூன்றாம் ஜாம பூஜை – இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை: 
    தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

    நான்காம் ஜாம பூஜை – அதிகாலை 3 முதல் 6 மணி வரை: 
    கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.

    அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.
     

  • Rameswaram Masi siva rathiri

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது.  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    விழாவின் ஐந்தாம் நாளான நேற்று ராமநாத சாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாளும் சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா வந்தனர். 

    திருவிழாவின் முக்கிய நாளான மார்ச் 4ம் தேதி அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி – அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற உள்ளது. மறுநாள் காலை தேரோட்டத்தையொட்டி அலங்கரித்த திருத்தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் ரதவீதியில் உலா வருவர். தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.