அருப்புக்கோட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் வைகாசி வசந்த விழா
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரஸ்தி பெற்ற அருள்மிகு செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசி வசந்த விழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோவிலில் வைகாசி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மங்கல இசை உடன் ஊர்வலமாக கொடி எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கும், பலிபீடத்திற்கும், மஞ்சள், தயிர், பால், இளநீர், திருமஞ்சனம், தேன், பழக்கலவைகள் என்ன 11 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கலசங்களில் பூஜித்து வைக்கப்பட்ட புனித நீர் கொடி மரத்தில் ஊற்றப்பட்டு தீப தூப ஆராதனை நடைபெற்றது. மேலும் உற்சவருக்கும் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
காரைக்கால் | திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீசெண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள செல்லும் காட்சி.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். #shakthionlinetv#bakthivideos#dailydevotional#thirunallar
திருவாரூர் | திருக்காரவாசல் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா
தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி,ஆதிவிடங்க தியாகராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அருள்மிகு வினாயகர்,சுப்ரமணியர்,சந்திரசேகர்ர் ,சண்டிகேஸ்வர்ர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷப படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். #shakthionlinetv#bakthivideos#dailydevotional#mayiladuthurai