Tag: Shakthi

  • Rishabam Shakthi Online – November Monthly Prediction – 2024

    ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் குரு(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் – பஞசம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன்  – சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றம்:

    05.11.2024 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.    

    08.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    13.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.    

    16.11.2024 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    குணத்தில் சாந்தமாக இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

    பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.  

    கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பனி புரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

    அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  

    கார்த்திகை:
    இந்த மாதம் தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

    ரோகினி:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    மிருகசீரிஷம்:

    இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

    பரிகாரம்:  மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 5, 6, 7

    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Mesham June Monthly Prediction Shakthi Online 2024

    மேஷம்:

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக், சூர், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    09-06-2024 அன்று புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-06-2024 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-06-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    26-06-2024 அன்று புதன் பகவான்  தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த ஒரு காரியத்தையும் திறமையாக திட்டமிட்டு சரியான நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உடைய மேஷ ராசியினரே நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். ராசிக்கு 8ல் இருக்கும் கேது தேவையற்ற மன சஞ்சலத்தை உண்டாக்குவார். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

    தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

    குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

    பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

    கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

    அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

    மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

    அசுபதி:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.

    பரணி:

    இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவு இருக்கும்.

    கார்த்திகை – 1:

    இந்த மாதம் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

    சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Meenam Shakthi Online – May Monthly Prediction – 2024

    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:

    ராசியில் புதன், ராஹூ, செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – களத்திர ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-05-2024 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    தனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே,

    இந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.

    குடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும். இதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.

    உத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும்.

    தொழிலதிபர்கள் நன்மைகளை ஏராளமாக அனுபவிக்கக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய தீராத பணிச்சுமையிலும் உங்களது குழந்தைகளின் நலனுக்காக பெண் தெய்வ வழிபாடுகளை பின்பற்றி வருபவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வ அருளைப் பெற்று தங்கள் புத்திர வகையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள்.

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் தகுந்த உதவிகளால் நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்குகளை சுலபமாக செய்து உயர் அதிகாரிகளிடம் தகுந்த நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், தெய்வ அருளால் குடும்பத்தில் சுமூகமான வாழ்க்கை முறைகளைப் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

    கலைஞர்கள் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தொழில் விவகாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தையும் இனிதே முடிக்க முடியும்.

    அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள்.  

    மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார். போக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

    ரேவதி:

    இந்த மாதம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.

    பரிகாரம்: ராமபிரானை வழிபாடு செய்வதாலும் அவரது நற்செயல்களை பின்பற்றி நடப்பதாலும், ராம நாமத்தை உச்சரிப்பதாலும் இன்னல்கள் இல்லாத இனிய வாழ்வை பெறலாம்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Mahara Rasi Shakthi Online – May Monthly Prediction – 2024

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய்  – சுக ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-05-2024 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான்  தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே

    இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள்.

    குடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும். பூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது.

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள்.

    தொழிலதிபர்கள் உங்கள் தொழிலிலும், செயல்பாட்டிலும் பிறரது குறுக்கீடு இல்லாமல் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள். தந்தையின் பேச்சுக்கு ஏற்றபடி செல்வதும், மூத்த அனுபவசாலிகள் பேச்சுக்கு மரியாதை தருவதும் உங்கள் வெற்றிக்கு அடிகோலாய் அமையும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இப்பொழுது மிக அவசியம்.

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெ?ண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.

    கலைஞர்கள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறை வேற்ற துணை இருப்பார்கள்.

    அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம்.

    மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.

    திருவோணம்:
    இந்த மாதம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.

    பரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
    அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Dhanusu Shakthi Online – May Monthly Prediction – 2024

    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-05-2024 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான்  சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, நிஜ வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து வாழும் தனுசு ராசி அன்பர்களே

    இந்த மாதம் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர்களின் உதவியால் பொருளாதார முன்னேற்றம் பெற நல்மார்க்கம் உண்டு. எந்த பிரச்சனைகளையும் எளிதாக எதிர்நோக்கும் மனதைரியத்தை பெறுவீர்கள். வீடு, மனை, தாய் வாகனம் போன்ற வகைகளில் தடங்கலும்,அனுகூலமும் சம அளவில் இருக்கும்.

    குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். மனைவி, கணவணுக்கு சிறிய காய்ச்சலுக்கு கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவர் குடும்பத்தவரின் உதவியான செயல்களால் உங்களுக்குடைய கடன் வகைகளை ஓரளவு சரி செய்யலாம்.

    உத்தியோகஸ்தர்கள் கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் திக்குமுக்காட வைக்கும். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.

    தொழிலதிபர்கள் உங்கள் தொழில் வகையில் கடந்த நாட்களைவிட உயர் வருமானம் பெறும் வாய்ப்புண்டாகும். சகோதர வகையில் பிரச்சனைகள் இருந்தால் சரி செய்வது உத்தமம். வெளிநாட்டு வகையில் தொழில் செய்பவருக்கு கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே நல் ஆதாயத்தைக் காண முடியும். எந்த ஆவணங்களாக இருந்தாலும் படித்து பார்த்து கையெழுத்திடுவது நல்லது.

    பெண்கள் அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிபுரிந்து அதற்கான வெகுமதியை பெறுவார்கள். உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.

    கலைஞர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணம் பலவகைகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடனிருப்போரின் தொந்தரவு அதிக கவனம் தேவை.

    அரசியல்வாதிகள் வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மீது சந்தேகம் வரலாம். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிய வரும். சிலர் மீது கோபப் பட வேண்டி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.     

    மாணவர்கள் தங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தினாலும் கூடாத சேர்க்கைகள் குறுக்கிட்டு மனக்குழப்பத்தை தரும் வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். தந்தையுடன் நல்ல ஒற்றுமையுடன் இருக்க சந்தர்ப்பங்கள் உருவாகும்.

    மூலம்:

    இந்த மாதம் பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.

    பூராடம்:

    இந்த மாதம் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் –  மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.

    பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் ஆகிய தெய்வங்களை வழிபடுவதால் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15
    அதிர்ஷ்ட தினங்கள்: 07, 08

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • shakthi vaindha sri pancha muga anjaneyar mandiram

    அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக் கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும். வராக முகம் செல்வம் அளிக்கும். அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும்.

    பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார். 

    கிழக்கு முகம் – ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம்……

    கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். 

    "ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா" 

    தெற்கு முகம்

    நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

    கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய 
    தக்ஷண முகேகரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா" 

    மேற்கு முகம் – கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

    கீழ் கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
    முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா" 

    வடக்கு முகம்

    வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் ஆகியவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.

    கீழ்கண்ட  ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா".

    மேல் முகம்

     ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

    இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். கீழ்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

    "ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா".

    அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கு சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

  • Shakthi vazihpadu

    ஆதி சக்தி என்றால் "முதல் சக்தி" என்று அர்த்தமாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வசிக்கின்ற தொடக்கநிலை சக்தியாகும். இந்த சக்தி பெண்மை வடிவமாகும். சக்தி என்பது அண்டசராசத்தில் உள்ள உயிரனங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு கருத்தமைவு அல்லது மனிதப் பண்புகளை மனிதர் அல்லாதவைகளுக்கு ஏற்றிச் சொல்லும் தெய்வீக பெண்மை வடிவமாகும்.

    சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார். “ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. 

    “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

    லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

    இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும். அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும்.  மனதை அடக்க, அடக்க மாயை விலகி சக்தி பிறக்கும்.

    சக்தியை வழிபடும் ஸ்லோகம்………

    “ யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை நமோ நமஹ!!”
    என்கிறது தேவி மஹாத்மியம்.

    இதன் பொருள்:
    “எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்.

  • Lemon Shakthi

    உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறதா? குடும்பத்தில் சண்டை, பணப்பிரச்சினைகள் அதிகம் இருக்கிறதா? உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

    பச்சை நிற எலுமிச்சையை பயன்படுத்தி வீட்டில் உள்ள எதிர்மறை  சக்தியை எளிதாக வெளியேற்றி விடலாம். மூன்று எலுமிச்சை பழங்களை வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைக்க வேண்டும். அதன் நிறம் எப்போது மஞ்சள் அல்லது கருப்பாக மாறுகிறதோ அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் புதிய எலுமிச்சை வைக்க வேண்டும். அவ்வளவு தான்.

    மழைநீரில் எலுமிச்சையின் தோலினை போட்டு கொதிக்க வைத்து வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் நம்மை விட்டு அகலும் என கருதப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் அல்லது மேஜையில் மூன்று எலுமிச்சைகளை வைத்து கொள்வது மிகவும் நல்லது.

    வீட்டிற்கு வெளியே செல்லும் போது ஒரு எலுமிச்சையை கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். திரும்ப வீட்டிற்கு வந்ததும் எலுமிச்சையை எடுத்து பார்க்க வேண்டும்.அது காய்ந்து இருந்தால் உங்களை நோக்கிய எதிர்மறை சக்தியை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.

    இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சையை நான்கு துண்டாக அறுத்து உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைக்க வேண்டும். கட்டிலுக்கடியில் வைத்து விட்டு விடிந்ததும் கையால் தொடாமல் பிளாஸ்டி கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிய வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும்.

  • Shakthi peedangal

    சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!

    பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான்'. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

    இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

    ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி…. யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.

    இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் கூறுகிறது.

    சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.

    இதோ 51 சக்தி பீடங்கள்.

    1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
    2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
    3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
    4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
    5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
    6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
    7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
    8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
    9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
    10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
    11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
    12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
    13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
    14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
    15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
    16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
    17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
    18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
    19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
    20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
    21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
    22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
    23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
    24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
    25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
    26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
    27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
    28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
    29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
    30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
    31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
    32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
    33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
    34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
    35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
    36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
    37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
    38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
    39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
    40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
    41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
    42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
    43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
    44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
    45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
    46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
    47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
    48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
    49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
    50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்uபூர்- (விரஜாபீடம்) உ.பி.
    51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.
     

  • Shakthi On line Krishnajayanthi

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும்  வழிபாடுகள், கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கிருஷ்ணர் கோயிலில் மேளதாளங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். வீடுகளில் குழந்தைகளுக்கு தத்ரூபமாக கிருஷ்ணர் வேடம் தரித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள்  செய்து, கிருஷ்ணன், ராதை போன்று வேடமணிந்த குழந்தைகளுடன்  கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடினர். 

    கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடிய சக்தி ஆன்லைன் வாசகர்கள் பலர் தங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா புகைப்படங்களை அனுப்பி இருந்தாலும், தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இங்கே பகிர்ந்துள்ளோம்…. 
     

    சுகன் கார்த்திக்

    ஸ்ரீ  திவ்யா

    நவ்யா

    பெர்டின்-டி-சில்வா

    கவுதம்