Tag: Sani Peyarchi

  • Sani Peyarchi Parigarangal

    மெஷம் – பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    ரிஷபம் – பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வரவும்.

    மிதுனம் – பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

    கடகம் – பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். 

    சிம்மம் – பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும். 

    கன்னி – பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

    துலாம் – பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். 

    விருச்சிகம் – பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

    தனுசு – பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும். 

    மகரம் – பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

    கும்பம் – பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

    மீனம் – பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
     

  • Sani Peyarchi

    தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இடம் பெயர்ந்தார்.

    2017-ம் ஆண்டுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா இன்று  அதிகாலை 5.22 மணிக்கு நடைபெற்றது. அதன்படி சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

    சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீசார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு – சுக்ல துவாதசியும் – க்ருத்திகை நக்ஷத்ரமும் – அமிர்தயோகமும் –  ஸாத்ய நாமயோகமும் – பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு – அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறினார். 

    மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் – ஏழாம் பார்வையால் கடக ராசியையும் – பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம். 

    சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு கோவிலில் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். 

  • Sani Peyarchi Eppadi Irukkum

    நவக்கிரகங்களில் கர்ம கிரகம் – தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் – சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.

    சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் – ஆயுள், தொழில், கர்மா. இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள்ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம். 

    சனி பகவானுக்குரிய ஆதிக்கம் பெற்ற விஷயங்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைக் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர். கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும். 

    சனியின் பலம்:
    சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீசார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு – சுக்ல துவாதசியும் – க்ருத்திகை நக்ஷத்ரமும் – அமிர்தயோகமும் –  ஸாத்ய நாமயோகமும் – பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு – அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார். 

    மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் – ஏழாம் பார்வையால் கடக ராசியையும் – பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம். 

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

  • Thirunallaru sani peyarchi

    நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு  காரைக்காலை  அடுத்துள்ள திருநள்ளாறில் கோயில் அமைந்துள்ளது. தர்பாரண்யேஸ்வரர்  என்று அழைக்கப்படும் இந்த தேவஸ்தானத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .இங்கு சனீஸ்வர பகவான் அபய ஹஸ்த முத்திரையுடன் கிழக்கு நோக்கி அருள் செய்துவருகிறார் . பரிகார தலங்களில் ஒன்றான இத்திருத்தலத்திற்கு தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி  வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இதனால்  இங்கு கூட்டம் குவியும்.

    அடுத்து நடைபெற இருக்கிற சனி பெயர்ச்சியையொட்டியும்  சனிப் பிரதோஷம் என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும்  பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். 

    வருகிற 27-ஆம் தேதி அன்று  அதிகாலை 5. 22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார் .இதனால் மகரராசி,  கும்பராசி ,தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் ஆகும். மிதுன ராசிகாரர்களுக்கு அஷ்டமசனி காலம் ஆகும். விருச்சிக ராசி, சிம்ம ராசி மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களே ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

    சனிப் பெயர்ச்சியை ஒட்டி வருகின்ற பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கோடு மாவட்ட நிர்வாகத்துடன் தேவஸ்தான நிர்வாகம் இணைந்து முன் ஏற்பாடுகளை  செய்து வருகிறது.

  • Thirunallaru Sani Peyarchi

    திருநள்ளாறில் டிசம்பர் 27 அரசு விதிமுறைகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    புகழ்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதை சனிப்பெயர்ச்சி விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இந்தாண்டு வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி இன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பந்தல்கால் முகூர்த்துடன் சனிப்பெயர்ச்சி விழா துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, துணை ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான ஆதர்ஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் "இது சனி பெயர்ச்சிக்காண தொடக்க நிகழ்ச்சி ஆகும் என்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் எனவும் சனிபெயர்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  • thirunallaru Sani Peyarchi

    திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதியில் டிசம்பர் 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். சனிப்பெயர்ச்சி வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதியே பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. 

    திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளமாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ், திருநள்ளாறு கோவிலில் டிசம்பர் 27-ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது என்று கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.