Tag: Rasi Palan

  • Midhuna Rasikku November Rasi Palan

    (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
    நிதானம் மற்றும் உலக அனுபவ அறிவை பெற்ற மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அருமையான இடத்தில் அமர்ந்து மிக அதிகமான பலன்களை அள்ளித் தர போகிறார். எதிலும் சற்று அதிக முயற்சி கொடுத்தால் எதிர்பார்த்த வெற்றி சேரும். நீங்கள் முடிக்க வேண்டும் என நினைத்த காரியம் கச்சிதமாக முடியும். ராசியாதிபதி புதன் மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி  தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

    தொழில் ஸ்தானாதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தேவையான பண உதவி கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். 

    குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. வாக்குக் கொடுப்பதற்கு முன் கவனம் தேவை.
    பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

    கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். 

    அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரம்  பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். 

    மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

    பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
    அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Rishaba Rasi November Rasi Palan

     (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
    தீர்க்க சிந்தனையும் தெளிவான வாக்குசுத்தமும் உடைய ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். தனாதிபதி புதனும் அனுகூலமான இடத்தில் சஞ்சரிக்கிறார். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
    தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான தொழில் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். பணியிட மாற்றம் சம்பந்தமான கோப்புகள் பரிசீலிக்கப்படும்.

    குடும்ப ஸ்தானத்தை செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக பார்க்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபவிரைய செலவுகள் ஏற்படும்.

    பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்.

    அரசியல் துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

    மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30
    அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

  • Mesham November Rasi Palan

     (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
    தெளிவான சிந்தனையும் நேர்மையான அணுகுமுறையும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு வாக்குவன்மை அதிகம். இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்திற்கு வந்திருக்கிறார். இதன் மூலம் எடுத்துக் கொண்ட எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ராசிக்கு ஏழாம் ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி சூரியன் – புதன் – சுக்கிரன் ஆகியோரின் சஞ்சாரம் மூலம் எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து வருவது தாமதமாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

    தொழில் ஸ்தானாதிபதி சனி பாக்கிய ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் அதிகமான பலம் பெறுகிறது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உகந்த காலகட்டமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த பணியிட மாற்றம் கிடைக்கும். 

    குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

    பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

    கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

    அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

    மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

    பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
    அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • October 29 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – பெருமை  
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – சினம் 
    சிம்மம் – புகழ் 
    கன்னி –  ஆர்வம் 
    துலாம் –  வெற்றி 
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு –     தொல்லை 
    மகரம் –  சிரமம் 
    கும்பம் – அச்சம் 
    மீனம் –     அசதி
    சந்திராஷ்டமம்    – அசுவினி
     

  • October 28 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – கவலை
    ரிஷபம் – ஆர்வம் 
    மிதுனம் – அசதி
    கடனம் – ஆதரவு
    சிம்மம் – முயற்சி
    கன்னி –  மறதி
    துலாம் –  துயரம்  
    விருச்சிகம் – இன்பம் 
    தனுசு –     தொல்லை
    மகரம் –  பயம் 
    கும்பம் – சோர்வு
    மீனம் –     உயர்வு 
    சந்திராஷ்டமம்    – ரேவதி
     

  • October 27 Rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நலம் 
    ரிஷபம் – நட்பு 
    மிதுனம் – சுகம் 
    கடனம் – பரிவு
    சிம்மம் – பாசம் 
    கன்னி –  வாழ்வு
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – தடங்கல் 
    தனுசு –     தாமதம் 
    மகரம் –  பிரதமை 
    கும்பம் – ஆதரவு
    மீனம் –     முயற்சி 
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி
     

  • October 26 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – லாபம் 
    கடனம் – செலவு
    சிம்மம் – உயர்வு
    கன்னி –  முயற்சி
    துலாம் –  ஆர்வம்
    விருச்சிகம் – பரிவு
    தனுசு –     விருப்பம் 
    மகரம் –  சிந்தனை
    கும்பம் – பரிசு
    மீனம் –     கவனம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி
     

  • October 12 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – போராட்டம்
    ரிஷபம் – சிந்தனை
    மிதுனம் – சாதனை
    கடனம் – சலனம் 
    சிம்மம் – ஓய்வு
    கன்னி –  வெற்றி
    துலாம் –  சுகம்  
    விருச்சிகம் – சுபம் 
    தனுசு –     பரிவு
    மகரம் –  லாபம் 
    கும்பம் – பெருமை
    மீனம் –     யோகம்
    சந்திராஷ்டமம்    – அவிட்டம்
     

  • October 23 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – அலைச்சல்
    ரிஷபம் – அசதி
    மிதுனம் – ஆர்வம் 
    கடனம் – கோபம் 
    சிம்மம் – பரிவு
    கன்னி –  பக்தி
    துலாம் –  நன்மை  
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு –     தடங்கல்
    மகரம் –  பகை
    கும்பம் – பரிசு
    மீனம் –     பிரீதி
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • October 22 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – மறதி
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – நிறைவு
    கடனம் – தடங்கல்
    சிம்மம் – தாமதம் 
    கன்னி –  பிரதமை
    துலாம் –  தடை 
    விருச்சிகம் – நன்மை 
    தனுசு –     தேர்ச்சி
    மகரம் –  சலனம்  
    கும்பம் – ஓய்வு
    மீனம் –     நம்பிக்கை
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்