இன்றைய ராசி பலன்
மேஷம் – அனுகூலம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – பாராட்டு
கடனம் – மகிழ்ச்சி
சிம்மம் – பொறுமை
கன்னி – போட்டி
துலாம் – பெருமை
விருச்சிகம் – அன்பு
தனுசு – திறமை
மகரம் – தனம்
கும்பம் – தாமதம்
மீனம் – நற்செய்தி
சந்திராஷ்டமம் – பூசம்
Tag: Rasi Palan
-
November 5 Rasi Palan
-
November 4 Rasi palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – வெற்றி
கடனம் – நட்பு
சிம்மம் – கோபம்
கன்னி – அச்சம்
துலாம் – பெருமை
விருச்சிகம் – சிரமம்
தனுசு – சோதனை
மகரம் – முயற்சி
கும்பம் – அனுகூலம்
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – புனர்பூசம்
-
November 3 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – நட்பு
கடனம் – வரவு
சிம்மம் – கவனம்
கன்னி – அமைதி
துலாம் – வீம்பு
விருச்சிகம் – நன்மை
தனுசு – போட்டி
மகரம் – பரிசு
கும்பம் – நஷ்டம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – திருவாதிரை
-
November 1 Rasi palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – சினம்
மிதுனம் – அன்பு
கடனம் – போட்டி
சிம்மம் – ஜெயம்
கன்னி – நன்மை
துலாம் – பகை
விருச்சிகம் – இன்பம்
தனுசு – திடம்
மகரம் – பெருமை
கும்பம் – மகிழ்ச்சி
மீனம் – விவேகம்
சந்திராஷ்டமம் – ரோகிணி
-
October 31 Rasi Palan
இன்றைய ராசி பலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – நலம்
மிதுனம் – வெற்றி
கடனம் – ஆர்வம்
சிம்மம் – அசதி
கன்னி – கீர்த்தி
துலாம் – லாபம்
விருச்சிகம் – சாதனை
தனுசு – ஆதரவு
மகரம் – சலனம்
கும்பம் – சுகம்
மீனம் – சாந்தம்
சந்திராஷ்டமம் – கார்த்திகை -
Viruchiga Rasikku November Rasi Palan
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய விருச்சிக ராசியினரே நீங்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்வீர்கள். இந்த மாதம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத விஷயங்களில் ஒரு முடிவு வந்து சேரும். உறவினர்களுடன் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. சில்லறை சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.
பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.
அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
-
Thulam Rasikku November Rasi Palan
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் துலா ராசியினரே இந்த மாதம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பாதிபதி செவ்வாய் ராசியில் நட்பாக சஞ்சரிக்கிறார். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும்.
மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Mobile/WhatsApp: +91 7845119542
-
Kannai Rasikku November Rasi Palan
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
சிக்கனமும் உழைப்பும் கொண்ட கன்னி ராசியினரே இந்த மாதம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமான புதன் அனுகூலமான சஞ்சாரத்தில் இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். குடும்பத்தில் இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் மாறும்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு தனாதிபதி குருவின் சஞ்சாரம் பண வரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது.
அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம்.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
-
Simma Rasikku November Rasi Palan
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
தான் எடுத்த முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றிக் கொள்ளாத தனது திறமையால் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய சிம்ம ராசியினரே, இந்த மாதம் ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருக்கிறார். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி வரலாம்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். குடும்பத்தில் உங்களுக்கான வாக்குவன்மை அதிகரிக்கும்.
பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்க ளால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Mobile/WhatsApp: +91 7845119542
-
Kadaga Rasikku November Rasi Palan
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வில் பீடு நடை போடும் கடக ராசியினரே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்ட வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். சொத்து சம்பந்தமான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நல்லபடியாக முடியும்.தொழில் காரகன் சனி ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். மேலிடத்துடன் கருத்து மோதல்களை தவிர்க்கவும்.
குடும்பாதிபதி சூரியன் பலம் பெற்றிருக்கிறார். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.
அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
பரிகாரம்: அரளிப்பூவை ஆதிபராசக்திக்கு அர்ப்பணித்து வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Mobile/WhatsApp: +91 7845119542