Tag: Ragu Kedhu

  • Ragu Kedhu Parigara Thalangal

    திருப்பாம்புரம்

    கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருப்பது இக்கோயிலின் சிறப்பு. ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. இங்கு வழிபட்டால் ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும்.

    ஸ்ரீகாளஹஸ்தி

    ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீகாளஹஸ்தி.  இது வாயுத் தலம்.  இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும். 

    திருக்களாச்சேரி

    நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடிக்கு அருகே உள்ளது திருக்களாச்சேரி. ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை சமர்ப்பித்து, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு- கேது தோஷம் விலகும்.

    சென்னை ஸ்ரீகோலவிழி அம்மன்

    சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும்  ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில். ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும்.

    காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில்

    காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன்  அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம். இங்கு வழிபட்டால், அனைத்து தோஷங்களும்  நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன

    திருமுருகன்பூண்டி

    திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் – திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்

    திருநெல்வேலி அருகே அமைந்துள்ளது செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர் ஆலயம். ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர்.

  • Kadaga rasi Ragu Kedhu Peyarci

    நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். 

    கடக ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டிலும், கேது ஐந்தாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், பதினொன்றாம் வீடு என்பது லாபங்கள், தொழில் மூலம் வருமானம், மூத்த உடன்பிறப்புகள், நண்பர்கள், சமூக வட்டாரம், மற்றும் விருப்பங்கள் நிறைவேறுதல் போன்றவற்றைக் குறிக்கும். ஐந்தாம் வீடு என்பது, குழந்தைகள், புத்திசாலித்தனம், படைப்பாற்றல், காதல் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றைக் குறிக்கும். 

    நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. 

    இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. 

    ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
                 
    கடக ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கடகத்திற்குப் பதினொன்றாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு நன்மை தரும் மாற்றமாக அமையும் எனலாம். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு வகையிலும் உங்களுக்கு லாபங்கள் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக பொருள் சார்ந்த ஆதாயங்களை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம். மூத்த உடன்பிறப்புகளுடன் நீங்கள் இணக்கமான உறவைப் பராமரிப்பீர்கள். 

    அதிக நண்பர்களும் உங்களுக்குக் கிடைப்பார்கள். இதனால் உங்கள் சமூக வட்டமும் வளரும். உங்களில் சிலர் அதிக அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து கூட உதவி பெறலாம். சில புதியவர்களுடன் நட்பு ஏற்படுவதற்கும், வெளிநாட்டு நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதற்கும் கூட நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதிகார வர்கத்தில் இருப்பவர்கள், மற்றும் அரசாங்கத்தின் மூலம் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில முக்கிய விஷயங்கள், இப்பொழுது உங்களுக்குக் கை கூடி வரும். நீங்கள் ஏதேனும் போட்டிகளில் பங்கேற்றால், பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெறுவதற்கான சரியான தருணமாகவும் இந்த காலக் கட்டம் விளங்கும். 

    எனவே, இந்தப் பெயர்ச்சியின் பயனாக, உங்கள் வாழ்க்கை பொருள் வளங்கள், செழுமை, வெற்றி ஆகியவற்றால் நிறைந்து காணப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ஆசைகள் யாவும் கூட நிறைவேறலாம். இவ்வாறு, லௌகீக இன்பங்களைப் பொறுத்தவரை, உங்களுக்குப் பெரும் நன்மைகள் விளைவிக்கும் காலமாக இது அமையக்கூடும். 

    கேது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கடகத்திற்கு ஐந்தாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, ஓரளவு சவால்கள் நிறைந்த காலமாக அமையக்கூடும். உங்கள் கடந்த கால செயல்களின் பலன்களை நீங்கள் இப்பொழுது அனுபவிப்பீர்கள். திருமணமான தம்பதியர் குழந்தை பாக்கியத்தை இப்பொழுது எதிர் பார்க்க இயலாது. அதே நேரம், குழந்தைகளுடனான உறவும், சுமுகமாக இல்லாமல், கவலை அளிக்கும் விதமாக இருக்கலாம். 

    இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக அன்பையும், பரிவையும் காட்ட முயலுங்கள்; இது, அவர்களுடனான உறவை இணக்கமாகப் பராமரிப்பதற்குத் தேவையான ஒன்றாகும். தவிர, உங்கள் செயல்பாடு புத்திசாலித்தனமாக இல்லை என்ற எண்ணமும், இப்பொழுது உங்களை அலைக்கழிக்கலாம். மேலும், அதிர்ஷ்டம் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றின் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவதும், இப்பொழுது இயலாத ஒன்றாக இருக்கும்.  

    ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக இதயம் மற்றும் முதுகெலும்பு குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதே சமயம், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு போன்ற கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவும் இது இருக்கும். கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம், அவர்கள் கல்வியில் சிறக்க முடியும். ஆனால், இந்த நேரத்தில் உங்கள் கற்பனைத் திறன், சுற்றுலா செல்லும் ஆர்வம் போன்றவை குறைந்தே காணப்படும். 


    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

     

    •  
  • Rishabam Ragu Kedhu Peyarchi palangal

    ரிஷப ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷப ராசிக்கே பெயர்ச்சி ஆகிறார். இது, உங்கள் முதலாவது வீடாகும். பொதுவாக இது, அணுகுமுறை, நடத்தை என இரண்டிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். பிறரை ஏமாற்றும் விதத்தில் நடந்து கொள்ளவும், நண்பர்கள், சமுதாயம், குடும்பம், தொழில்துறை சகாக்கள் போன்றவர்கள் மத்தியில் பெயர், புகழ் பெறுவதற்காக நேர்மையற்ற முறையில் செயல்படவும் தூண்டும் எண்ணங்களுக்குப்  பலியாகாமல் நீங்கள் இருப்பது அவசியம். 

    உங்கள் உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை நன்கு கவனித்துக் கொள்வதும் நன்மை தரும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, உங்களில் சிலர், தலைப் பகுதி அல்லது அதிலுள்ள உறுப்புகள் ஆகியவை குறித்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். எனினும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும், புதிய சூழ்நிலைகளைச் சமாளிப்பதிலும் இப்பொழுது உங்கள் திறமை பளிச்சிடும். மேலும், உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை நீங்கள் மேம்படுத்திக் கொண்டால் இந்தப் பெயர்ச்சி காலத்தில் உங்கள் அறிவாற்றல் மேலும் வளரும். 

    ஆனால், உங்களில் சிலருக்கு சற்றே அகங்கார உணர்வு தலை தூக்கும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பலவீனத்திற்கும், துக்கத்திற்கும் காரணமாக அமையக் கூடும். எனவே எச்சரிக்கை தேவை. மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

    கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷபத்திற்கு ஏழாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர், அங்கு சஞ்சாரம் செய்யும் இந்தக் கால கட்டம் மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரமாக இருக்கும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவைப் பேண வேண்டியது அவசியம். 

    நீங்கள் உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபடும் வாய்ய்புள்ளது. ‘நான் செய்வதே சரி’ போன்ற தேவையற்ற விவாதங்கள் செய்து, உங்கள் வலிமையை நிரூபிக்கவும் நீங்கள் முயலக் கூடும். ஆனால் இதற்காக முடிவில் நீங்கள் வருத்தப்பட நேரிடும். எனவே, உங்கள் கணவர் அல்லது மனைவியுடனான பிரச்சினைகளை முடிந்தவரை இணக்கமாகத் தீர்க்க முயற்சி செய்வது பலவகையிலும் நன்மை தரும். இந்த நேரத்தில் அமைதியாகச் செயல்படுவதும் நல்ல பலனளிக்கும். தொழில் துறையில் உள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை! நீங்களும், உங்கள் தொழில் கூட்டாளியும் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

     உங்கள் இருவருக்கும் இடையேயான இணக்கமான நல்லுறவை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளும் தேவையும் உள்ளது. அயல்நாடுகளிலோ அல்லது வெளிநாட்டு வியாபார முயற்சிகளிலோ இப்பொழுது நீங்கள் அதிக நற்பலன்களை எதிர்பார்க்க இயலாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எது சரி, எது தவறு என்பதை நன்கு பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. 


    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

  • Ragu Kedhu Peyrchi

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்.

    நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். 

    நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. 

    மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன.

    நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசார்வரி வருஷம் – தக்ஷிணாயனம் – வர்ஷ ரிது – ஆவணி மாதம் 16ம் தேதி – செவ்வாய்க்கிழமை – 01.09.2020 – அன்றைய தினம் தினசுத்தி அறிவது – பௌர்ணமியும் – அவிட்ட நக்ஷத்ட்ரமும் – அதிகண்ட நாமயோகமும் – பத்ரை கரணமும் – சித்தயோகமும் – கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மதியம் 2.16க்கு (நாழிகை: 20.24) தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மாறக்கூடிய ராகு பகவான் பிலவ வருஷம் – உத்தராயணம் – சிசிர ரிது – பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) – திங்கள்கிழமை வரை ரிஷபத்தில் இருந்து அருளாசி வழங்குவார்.

    கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மாறக்கூடிய கேது பகவான் பிலவ வருஷம் – உத்தராயணம் – சிசிர ரிது – பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) – திங்கள்கிழமை வரை விருச்சிகத்தில் இருந்து அருளாசி வழங்குவார்.

    பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.

    ராகு – கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.