Tag: Palani

  • Palani Nagarathar

    தைப்பூச விழாவுக்கு பழனி முருகப்பெருமானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடியுடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் பழனி மலைக்கு 450 ஆண்டுகளாக காவடியுடன் வரும் நகரத்தார் பற்றி உங்களுக்கு தெரியுமா? 

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, காவடிகளை சுமந்து நடைபயணமாகவே  இவர்கள் செல்கின்றனர். காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, காண்டனூர் உட்பட 96 ஊர்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட நகரத்தார் காவடிகள் பழநிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

    ஆண்கள் மட்டுமே காவடி சுமந்து செல்கின்றனர். பழநி சென்று திரும்பும் வரை வாகனங்களை பயன்படுத்துவதில்லை. நடந்தபடியே காவடிகளை சுமக்கின்றனர். 40 நாட்கள் விரதமிருந்தே காவடியைச் சுமப்பர். மயில்தோகை வைத்து அலங்கரித்து, அழகு வடிவில் காவடிகள் காட்சியளிக்கின்றன. செல்லும் ஊர்களில் எல்லாம் இவர்களுக்கு போட்டி போட்டு பொதுமக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். 

    காரைக்குடியை சேர்ந்த அரண்மனை பொங்கல் குடும்பத்தார் மற்றும் சாமியாடி  தலைமையில்  காவடிகள்,   பக்தர்களோடு புறப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. முதலில்  அனைத்து காவடி பக்தர்களும் காரைக்குடியை சுற்றி நகர் வலம் செல்லும். 

    இக்காலத்தில் நகரம் முழுக்க ஆன்மிகம் மணக்கும். தொடர்ந்து,  நகரத்தார் காவடிகள் பழநிக்கு கிளம்பும். தைப்பூசத்தின் முதல் நாள் பழநியை சென்றடையும். பூசத்தின் மறுதினமும் தங்கி  பழநி முருகனுக்கு காவடிகளை செலுத்திவிட்டு மீண்டும் நடைபயணமாகவே வருவது நகரத்தாரின் தனிச்சிறப்பாகும். 

    வரும்போது குன்றக்குடி வரை அனைத்து காவடிகளும் வந்து சேர்ந்தவுடன், மஹேஸ்வர பூஜைக்கு பிறகு அவரவர் தங்கள் சொந்த ஊர் திரும்புவோம். இது 450 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ஒரு பண்பாட்டு ஆன்மிக அடையாளமாக இருக்கிறது’’ என்றார்.
     

  • PALANI MURUGAN KOVIL THAIPOOSA THIRUVIZHA

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. வருகிற 11-ம் தேதி 10-ம் திருநாளான மிகவும் பிரசித்திப்பெற்ற தெப்பத்தேர் நிகழ்ச்சி நடைபெற்று தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை,மயூரையாகம் நடைபெற்றது. பின்னர் கொடிப்படம் நான்கு ரதவீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும், கோவில் மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

    அதன்பிறகு சப்பரத்தில் கொடிப்படத்துடன் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் கொடிகட்டு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்;தொடா;ந்து அங்கு விநாயகர் பூஜை, கொடிபூஜை, உள்ளிட்ட பு+ஜை இடம்பெற்றது. பின்னர் கொடிப்படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தா;கள்  ‘முருகனுக்கு அரோகரா’, ‘கந்தனுக்கு அரோகரா’ என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரத்துக்கு விசேஷ பூஜை நடந்தது.

    10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்த பல்லக்கில் புறப்பாடும், இரவு 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வௌ;ளி ஆட்டுக்கிடா, வௌ;ளி காமதேனு, வௌ;ளியானை, பெரியதங்கமயில் மற்றும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடும் நடைபெற இருக்கிறது. விழாவின் 10-ம் திருநாளான 11-ம் ;தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
     

  • Palani murugan Astabandhanam

    பழனி முருகன் கோவிலில் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 5.40 மணிக்கு விளாபூஜை, 6.10 மணிக்கு சிறுகாலசந்தி, 6.20 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. அதையடுத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிவானம், மூலமந்திரம் யாகம் நடைபெற்று, அஷ்டபந்தனம்  இடிக்கப்பட்டு மருந்து தயார் செய்யப்பட்டது. அந்த மருந்து மூலவர் சன்னதியில் உள்ள சிலைக்கும், பீடத்துக்குமான இடைப்பகுதியில் வைத்து சாத்தப்பட்டது. இந்த அஷ்டபந்தன மருந்துக்கான பொருட்கள் தருமை ஆதீனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

     அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கான ஏற்பாடுகளை சிவசண்முக குருக்கள், பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சர்வசாதகம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள் செய்திருந்தனர்.
     

  • Palani Murugan Koil Navarathiri Vizha

     பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா செப்டம்பர் 29-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

    பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 29 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. கோயில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறும். 

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதேபோல் மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். 

    நவராத்திரி விழாவின் 10-நாளான அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    பின்னர் மாலையில் 3 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கிருந்து முத்துக்குமார சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு மேல் வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நவராத்திரி விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு பொம்மைகளை கொண்டு கொலு வைக்கப்படுகிறது. அதோடு விழாவையொட்டி தினமும் பக்தி கச்சேரி, சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 
     

  • Palani Murugan koil Hundiyal vasool

    பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவின்போது பக்தர்கள் ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    பழனி முருகன் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை மலைக் கோயிலில் உள்ள உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    அந்த வகையில், கடந்த 15 நாள்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில்  ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி மற்றும் 371 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • Palani theppa Ther Thiruvizha

    பழனி தைப்பூச திருவிழா நிறைவாக தெப்பத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இரவு தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    தெப்பத்திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய் வானையை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 

    6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து, 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனையும், உபசாரங்களும் நடைபெற்றது. 

    அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை குளத்தில் வலம் வந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியாள் வாகனத்தில் வந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். 

  • Palani Thai poosa therottam

    பழனியில் தைப்பூச தேரோட்டம், நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.