Tag: Nellaippar

  • Nellaippar car festival

    நெல்லை  அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 516 வது  ஆனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
      
    தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  புராதன சிறப்புமிக்க  சிவாலயங்கிளல் ஒன்று சுவாமி நெல்லையப்பர்- காந்திமதியம்மன்  கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சுவாமி அம்பாள் காலை மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது . தேர் திருவிழாவினையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். 

    முன்னதாக அதிகாலையில் விநாயகர் , முருகன்  தேர் சென்றதைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தேரோட்டம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ஆகியோர் வடம்பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரதவீதிகளிலும் தேர் பவனி வந்த்து, இதனைத் தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.  

    இந்த நிகழ்ச்சியல்  மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல்துறை ஆணையர் அவினாஷ்குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரானா ஊரடங்கைத் தொடர்ந்து  இரண்டாண்டுகளுக்குப் பின் தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

  • Nellaippar koil thiruvizha

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 11-ந்தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஐப்பசி திருவிழா. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஐப்பசி திருவிழா தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. திருவிழாவை வழக்கம்போல் இந்த ஆண்டு நடத்த வேண்டுமென நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

    அதன்படி ஐப்பசி திருவிழாவை இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பூஜைகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும். வருகிற 11-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படும். வழக்கமாக தபசு காட்சி, காட்சி மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தபசு காட்சியை காட்சி மண்டபத்தில் வைத்து நடத்துவதா? அல்லது கோவில் உள்பிரகாரத்தில் நடத்துவதா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம். திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை மற்றும் கோவில் வளாகத்திற்குள் வைத்து நடைபெற உள்ள சுவாமி, அம்பாள் புறப்பாடு ஆகியவற்றையும், அம்மன் தபசுக்காட்சி, திருக்கல்யாண காட்சி ஆகியவற்றையும் யூடியூப்பில் பார்த்துக் கொள்ளலாம்.