Tag: Navarathiri

  • October 15 2023 Navarathiri Arambam

    அக்டோபர் 15 – நவராத்திரி ஆரம்பம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 28
    15-அக்-2023 ஞாயிறு
    நவராத்திரி ஆரம்பம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை ந.இ 12.47
    நட்சத்திரம் : சித்திரை இ 7.15
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Navarathiri durga lakshmi saraswathi poojai

    கலைமகளுக்த்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு.சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

    துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.

    முதல் ராத்திரியின்போது மலர்களால் துர்க்கையை அலங்கரித்து வழிபட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள்.

    இரண்டாவது ராத்தியின்போது ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள்.

    மூன்றாவது ராத்திரியின்போது முதலில் செய்வித்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அளிக்கிறாள்.

    முதல் மூன்று நாட்களிலும் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடமிருந்து பெறும் நாம்,

    அடுத்த மூன்று நாட்களிலும், மகாலட்சுமியை பூஜிக்க வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை

    நான்காவது நாளில் இருந்து பூஜிக்கின்றனர். அன்னைக்கு பாசம் அதிகம். அதனால் என்னை பூஜிப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறுகிறாள்.

    ஐந்தாவது நாளில் பூஜிப்பதால் சகல சவுபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பஞ்ச பூதங்கள் நம்மை சரிவர நடத்தும்.

    ஆறாவது நாளில் அறுசுவையுடன் அல்லாது போனாலும், பசியின்றி இருக்க உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை மகாலட்சுமி காத்தருளுவாள்.

    இந்த ஆறு நாட்களும் முடிந்த பிறகு வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்க வேண்டும்

    ஏழாவது நாளில் நாதஸ்வரூபமாக எழுந்தருளும் கலைவாணி நமக்கு வினயத்தைத் தந்தருளுகிறாள்.

    எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள் அன்னை.

    ஒன்பதாவது நாளில் அழியாத தன்மையைத் தருகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது என்பதை உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி

    பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

  • November 27 2022 Navarathiri 2nd day

    செப்டம்பர் 27 – நவராத்திரி 2ஆம் நாள்
    சுபகிருது வருடம் – புரட்டாசி 10
    27-செப்-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                         
    திதி    :    துவிதியை         
    திதி நேரம்    :    துவிதியை    ந.இ    3.32
    நட்சத்திரம்    :    அஸ்தம்    கா    8.01
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

     

  • Navarathiri uruvana kadhai

    நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டி ற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம் பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தி னர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகி ழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமா க பெறும் நன்னாள் இது.

    ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையு டன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான்.

    பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன் று விடமுடியாது என்றுமகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான். நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்த மாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.

    எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷ னை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந் து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

    “போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடு வான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும் படி நடந்து சென்றாள்.

    சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தி யை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரை தான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனி ன் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

    இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியி டம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலை யை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள்.

    மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசு ரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினா ர்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

  • Navarathiri vuruvana story

    நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டி ற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம் பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தி னர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகி ழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமா க பெறும் நன்னாள் இது.

    ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையு டன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். 

    பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன் று விடமுடியாது என்றுமகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான். நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்த மாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.

    எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷ னை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந் து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

    “போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடு வான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும் படி நடந்து சென்றாள்.

    சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தி யை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரை தான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனி ன் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

    இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியி டம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலை யை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். 

    மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசு ரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினா ர்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.
     

  • Navarathiri kolu padigalin thathuvam

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரண த்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில் தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

    முதல் படி, அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.

    இரண்டாம் படியில்  – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

    மூன்றாம் படியில்  – மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

    நான்காவது படியில்  – நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.

    ஐந்தாம் படியில்  – ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

    ஆறம் படியில்  – ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

    ஏழாம்  படியில்  – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

    எட்டாம் படியில்  – தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.

    ஒன்பதாம் படியில்  – முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வ தி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.. இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடு வில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும்.

    பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும்.

    முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக “தேவி பாகவதம்” சொல்கிறது.

    ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப் பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக் கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்க ளை குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம்.
     

  • Navarathiri 9 natkalum vazhipadum murai

    நவராத்திரி முதல் நாள்
    வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
    பூஜை :  2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
    திதி : பிரதமை
    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
    பூக்கள் : மல்லிகை., சிவப்புநிற அரளி., வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
    நைவேத்தியம் : வெண்பொங்கல்., சுண்டல்., பழம்., எலுமிச்சை சாதம், தயிர் சாதம்., சர்க்கரை பொங்கல்., மொச்சை., சுண்டை., பருப்பு வடை.
    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
    பலன் : வறுமை நீங்கும்., வாழ்நாள் பெருகும்.

    நவராத்திரி இரண்டாம் நாள்
    வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
    பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
    திதி : துவிதியை.
    பூக்கள் : முல்லை., துளசி., மஞ்சள்நிற கொன்றை., சாமந்தி., நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
    நைவேத்தியம் : புளியோதரை., எள் பாயாசம்., தயிர்வடை., வேர்க்கடலை சுண்டல்., எள் சாதம்.*
    ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
    கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
    பலன் : நோய்கள் நீங்கும்., உடல் ஆரோக்கியம் பெருகும்.

    நவராத்திரி மூன்றாம் நாள்
    வடிவம் : வாராகி (மகிஷனை அழித்தவள்)
    பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வடிவத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
    திதி : திருதியை.
    கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
    பூக்கள் : செண்பக மொட்டு., குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
    நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல்., காராமணி சுண்டல்.
    ராகம் : பாட்டு பாட வேண்டிய ராகம் காம்போதி.
    பலன் : தனம்., தானியம் பெருகும்., வாழ்வு சிறப்பாக அமையும்.

    நவராத்திரி நான்காம் நாள்
    வடிவம் : மஹாலக்ஷ்மி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)
    பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி கோலத்தில் பூஜிக்க வேண்டும்.
    திதி : சதுா்த்தி.
    கோலம் : அக்ஷதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
    பூக்கள் : செந்தாமரை., ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
    நைவேத்தியம் : தயிர் சாதம்., அவல் கேசரி., பால் பாயாசம்., கற்கண்டு பொங்கல்., கதம்ப சாதம்., உளுந்துவடை., பட்டாணி சுண்டல்.
    ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
    மாலை : கஸ்தூரி மஞ்சள்., முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
    பலன் : கடன் தொல்லை தீரும்.

    நவராத்திரி ஐந்தாம் நாள்
    வடிவம் : மோஹினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
    பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வடிவத்தில் பூஜிக்க வேண்டும்.
    திதி : பஞ்சமி.
    கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
    பூக்கள் : கதம்பம்., மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல்., கடலை பருப்பு வடை., பாயாசம்., தயிர் சாதம்., பால் சாதம்., பூம்பருப்பு சுண்டல்.
    ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
    பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    நவராத்திரி ஆறாம் நாள்
    வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
    பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி., காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
    திதி : க்ஷஷ்டி.
    கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
    பூக்கள் : பாரிஜாதம்., விபூதிப் பச்சை., செம்பருத்தி., சம்பங்கி., கொங்கம்.
    நைவேத்தியம் : தேங்காய் சாதம்., தேங்காய் பால்பாயாசம்., ஆரஞ்சு பழம்., மாதூளை., பச்சைப்பயறு சுண்டல்., கதம்ப சாதம்.
    ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
    பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

    நவராத்திரி ஏழாம் நாள்
    வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
    பூஜை : 8 வயது சிறுமியை பிராஹ்மி மஹா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
    திதி : ஸப்தமி.
    கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
    பூக்கள் : தாழம்பு., தும்பை., மல்லிகை., முல்லை.
    நைவேத்தியம் : எலுமிச்சை பழசாதம்., பழ வகைகள்., வெண்பொங்கல்., கொண்டக்கடலை சுண்டல்., பாதாம் முந்திரி பாயாசம்., புட்டு.
    ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
    பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

    நவராத்திரி எட்டாம் நாள்
    வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்த வடிவம்)
    பூஜை : 9 வயது சிறுமியை மஹா கௌவுரியாக பூஜிக்க வேண்டும்.
    திதி : அஷ்டமி.
    கோலம் : பத்ம கோலம்.
    பூக்கள் : மருதானி., சம்பங்கி பூக்கள்., வெண்தாமரை., இருவாட்சி.
    நைவேத்தியம் : பால்சாதம்., தேங்காய் சாதம்., புளியோதரை., மொச்சை சுண்டல்.
    ராகம் : புன்னாகவராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
    பலன் : நாம் வேண்டியது சித்தியாகும்.

    நவராத்திரி ஒன்பதாம் நாள்
    வடிவம் : பரமேஸ்வரி., சுபத்ராதேவி (கையில் வில்., பாணம்., அங்குசம்., சூலத்துடன் தோற்றம்)
    பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்
    திதி : நவமி.
    கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
    பூக்கள் : தாமரை., மருக்கொழுந்து., துளசி., வெள்ளை மலர்கள்.
    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல்., உளுந்து வடை., வேர்க்கடலை சுண்டல்., கடலை மற்றும் எள் கலந்த பாயாசம்., கேசரி., பொட்டுக்கடலை மற்றும் எள் கலந்த உருண்டை.
    ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.
    பலன் : ஆயுள்., ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சௌக்கியமாக இருப்பார்கள்.

    நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமி
    வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
    திதி : தசமி.
    பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷமியே விஜயதசமி. மூன்று சக்திகளும் இணைந்து தீய சக்தியை அழித்து., வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
    நைவேத்தியம் : பால் பாயாசம்., காராமணி சுண்டல், இனிப்பு வகைகள்.
    பூக்கள் : வாசனைப் பூக்கள்.

  • Navarathiri Kriya Vazhipadu

    ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

    நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

    அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

    குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.

    கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.

    டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.

    சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.

    நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

    நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

    அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

    வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.

    தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

    அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

    காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.

    நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

    நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

    கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

    நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

    முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.
     

  • Navarathiri Important Days

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிஎன்ற முப்பெரும் சக்தி  ஒன்றிணைந்து மகிஷாசுரமர்த்தினியாக  உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரி.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து நம் இல்லம் தேடி வருவாள்.

    நவராத்திரி 9 நாட்களும் அன்னையை பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி அதாவது 7, 8,9வது  நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாளான  அஷ்டமி அன்றாவது  நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

     நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை அம்பிகையாகவே நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து மரியாதை செய்யலாம்.

    நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பதும் ,தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பதும் தேவியை மகிழ்விக்கும்.

    நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

     சங்கீதப் பிரியையான அம்பிகையை மகிழ்விக்க ,நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாடினால் நலம்.

    இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

    மைசூரில் நவராத்திரியுடன் சேர்த்து  10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

     மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்றும்ம,மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

     உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று ராவணனை ராமபிரான் அழித்ததை நினைவு கூறும் வகையில், "ராம்லீலா'' கொண்டாடுகிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் நமது பாவங்களை விரட்டும்.

     நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம்.அதனால், வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போடும் வழக்கம் உள்ளது.

    ஒரு காலத்தில் ,நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவில், நம்மூர் சரஸ்வதி போல பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன்,பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

    சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம்.மேலும் அக்பர் காலத்தில் தான்  தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

    காளி வழிபாடு  மேற்கு வங்க மக்கள் மத்தியில் மிகவும் முக்கியம் அம்மாநில மக்கள் சக்தி உபாசகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    குஜராத்தில் நவராத்திரியின்  9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து ஆடும் கார்பா நடனம் சிறப்பு வாய்ந்தது.
     

  • Navarathiri ambikai Arul pera

    சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.

    நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

    நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

    விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

    நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

    ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

    பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.