Tag: Nadai Thirappu

  • Sabarimalai nadai thirappu

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  வைகாசி மாத பூஜைக்காக வரும் 14-ந் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. 

    15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும்.

     இந்த நாட்களில் சிறப்பு பூஜைகளான உதயஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Sabari Malai Nadai Thirappu

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரணகோஷம் முழங்க, சபரிமலை நடை திறக்கப்பட்டது. 

    கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம். இந்த பூஜைக்காக இன்று சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரணகோஷம் முழங்க, நடை திறந்து விளக்கேற்றினார்.  நடைதிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளுக்குப் பிறகு 18-ம் படிக்கு கீழே உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. 

    நாளை காலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கும். தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெறும். மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும்.
     

  • Sabarimalai Nadai Thirappu

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டபிறகு நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத் திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந் திருக்கும். அன்று இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். சித்திரை திருநாள் ஆட்ட திருவிழாவையொட்டி மீண்டும் வருகிற 26-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 27-ந்தேதி விசே‌ஷ பூஜைகளுக்கு பிறகு அன்று இரவு நடை அடைக்கப்படும்.

    அதைத்தொடர்ந்து பிரசித்திபெற்ற மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 16-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

  • Sabari malai Nadai thirappu

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைத்தார்.

    ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 9- ந் தேதி திறக்கப்பட்டது. 11- ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் நடை 13- ந்தேதி இரவு அடைக்கப்பட்டது.

    இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி நேற்று மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைத்தார். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

     தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 21- ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

  • Sabari Malai Nadai Thirappu

    ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று சந்திரகிரகணத்தை ஒட்டி காலையில் நடை தாமதமாக திறக்கப்படுகிறது. நேற்று மாலை, 5:30 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். 

    18ம் படி வழியாக சென்ற மேல்சாந்தி, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், பக்தர்கள் படி வழியாக ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில், கேரளாவில் பெய்த பெருமழையால், பம்பை உருக்குலைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில், கார் போன்ற சிறிய வாகனங்களில் வரும் பக்தர்கள், பம்பை வரை செல்ல அனுமதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் பம்பை வந்து இறங்கிய பின், கார்களை நிலக்கல் அனுப்பி விட வேண்டும்.தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் சென்று, ஊர் திரும்ப வேண்டும்.
     

  • Sabari Malai Nadai thirappu

    விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.  கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ் தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

     
    ஏப்ரல் 15- ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கல்லுக்கு இயக்கப்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள், மாற்று பஸ்களில் கொண்டுவரப்படுவார்கள். தனியார் வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை பார்க் செய்ய நிலக்கல்லில் விசாலமான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே மாதம் 14- ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 19- ந் தேதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

  • Sabari malai Nadai thirappu

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மார்ச் 11-ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது. 

    சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். மேலும் சித்திரை விஷூ, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் சபரி மலை கோவிலில் சிறப்புடன் நடைபெறும்.

     இந்த ஆண்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    அன்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

    7.30 மணிக்கு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

    அப்போது சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடத்தப்படும்.

    13-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் ஸ்ரீபூதப்பலி, உற்சவபலி போன்றவை நடைபெறும். 20-ந்தேதி இரவு 10 மணிக்கு சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் 21-ந்தேதி காலை 11 மணி அளவில் பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட் டும் நடைபெறும். அன்று மாலை கொடி இறக்கப்படும். இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
     

  • Sabari Malai Nadai Thirappu

    மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.  மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்துவைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

    31-ந்தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும். பிரசித்திப்பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும்.

    16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.