Tag: month

  • Panguni month viradhangal

    பங்குனி பௌர்ணமி- பங்குனியில் பளிங்குகல் லிங்கம் வழிபாடு சிறப்பு பகல் உபவாசமிருந்து சிவபூஜை செய்து இரவில் சாமை உணவு உண்ணுதல். பங்குனிமாத அஷ்டமி-மாரி-மகாதேவன்-வணங்கினால் இராஜயோக பலன்.

    பங்குனி உத்திரம் – எல்லாப் பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் முழுநிலவு நாள் குறிப்பிட்ட நட்சத்திரத்தை ஒட்டியே அமையும். பங்குனியில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் எனப்படும். அன்று சூரியனது வெப்பம் அதிமாகவும் சந்திரனின் குளிர்ச்சியும் அதிகமாகவும் இருக்கும். சந்திரன் தன் 64 கலைகளையும் பொழிந்து காட்சியளிக்கும் நாள் பங்குனி உத்திரம். ஜோதிடரீதியாக ஆரோக்யகாரகனாகிய சூரியனும், மனோகாரகனான சந்திரனும் சம பலத்துடன் அமைவதால் உடலுக்கும் மனதிற்கும் அன்றைய தினம் வலிமை அளிக்கக்கூடிய நாள்.

    பங்குனி உத்திரம் விரதம்- அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தை நினைத்து நீராடி நெற்றியில் இட்டுக்கொண்டு வீட்டில் உள்ள கடவுள்களின் படங்களுக்கு பூமாலை அல்லது மலர்கள் அணிவித்து அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அல்லது துதியை அல்லது தெய்வத்தின் திருநாமத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பொதுவாக சிவ-பார்வதி, முருகன்-வள்ளி-தெய்வானை படத்தை வைத்து வழிபடவும். காலையில் பால் பழங்கள் சிறிதளவு உண்டு மதியம் எதுவும் உண்ணாமல் இருத்தல் நலம். உடல் நலம் இல்லாதவர்கள் பாலன்னம் சிரிதளவு உண்ணலாம். தயிர், மோர் சேர்த்தக் கூடாது. பின் கோவிலுக்குச் சென்று உற்சவங்கள் ஆராதனை அபிஷேகங்களில் பங்கேற்க வேண்டும். 

    முடிந்த அளவு தானங்கள் செய்யவும். இரவு கோவில் பிரசாதத்தை உண்ணலாம். மறுநாள் மீண்டும் அதிகாலை எழுந்து நீராடி ஜபித்து இறைவனை வணங்கி வழிபட்டு வழக்கப் படியான உணவை உண்ண வேண்டும். இன்று அனுஷ்டிக்கப்படும் விரதத்தை திருமண விரதம் என்றும் சொல்வர், கோவில்களில் நடைபெறும் தெய்வத் திருவிழாவை தரிசித்து மனதார வேண்டினால் மனம் போல் மணப்பேறு கிட்டும். தம்பதியர்க்கு வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையுடன் வாழ அருள் கிட்டும். இந்த விரதத்தால் அடுத்த பிறவி தெய்வப்பிறவியாக அமையும். பங்குனி உத்திரம் விரதமிருந்துதான் மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தாள். இந்த விரத மகிமையால்தான் பிரம்மன் சரஸ்வதி தன் நாவை விட்டு நீங்காமல் இருக்கச் செய்தது.

    அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் அந்த வாரம் அசைவ உணவு அருந்தக்கூடாது. தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் பலன்கள் அதிகம். நல்ல கல்வி, தகுதிற்கேற்ப வேலை, நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட் செல்வம் அனைத்தும் தவறாது தருவது பங்குனி உத்திர விரதம்.

  • Margazhi month sirappugal

    மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது.

    தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

    மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

    சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள  வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

    மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.
     

  • November 03 Month Sivarathiri

    நவம்பர் 3 – மாத சிவராத்திரி
    பிலவ வருடம் – ஐப்பசி 17
    03-நவ-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    திரையோதசி    கா    7.33
    நட்சத்திரம்    :    அஸ்தம்    கா    9.14
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Puratasi month perumal temples

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தளங்களை பார்க்கலாம்.

    அரங்கநாத சுவாமி கோவில்
    ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.

    சாரங்கபாணி திருக்கோவில்
    சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.

    மூலவர் திருக்கோலம்
    இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.

    கள்ளழகர் திருக்கோவில்
    108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர்.

  • Puratasi month fastings

    புரட்டாசி மாத பிறப்பு இந்த வருடம் செப்டம்பர் 17ஆம் தேதி வருகிறது. அன்று திருவோண விரதமும் சேர்ந்து வந்துள்ளது. புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். இந்த புரட்டாசியில் வரும் விரதங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க….

     சித்தி விநாயக விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.

    சஷ்டி – லலிதா விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வாள்.

    அனந்த விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

    அமுக்தாபரண விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    ஜேஷ்டா விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

    மஹாலட்சுமி விரதம்:

     புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்:

    புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.

    மஹாளய பட்சம்:

    மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான காலம். மகாளயம் கூட்டாக, ஒன்றாக என்று அர்த்தம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். நம் முன்னோர்கள் அனைவரும் கூட்டாகவும் ஒன்றாகவுமாக பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு, நம் வீட்டுக்கு வந்து நம்மைப் பார்க்கிறார்கள் என்பதாக ஐதீகம். அன்றைய தினம் உங்கள் முன்னோர்களை வணங்கி வழிபடுங்கள். உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்க உங்களை ஆசீர்வதித்து அருளுவார்கள் முன்னோர்கள்.

    திருவோண விரதம்:

    திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.
     

  • Sivaperuma ugandha avani month

    சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆவணி மாதம் ஆகும். இந்த மாத அதிதேவதை ஸ்ரீதரன் ஆகும். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான இடமாகும். நமக்கு வேண்டிய ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணி வரைக்கும் சூரிய ஹோரை இருக்கும்.

    ஆவணி அவிட்டம் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அன்றுதான் பிராமணர்கள் உபாகர்மம் என்னும் பூணூல் வைபவத்தை நடத்துகின்றனர். சிரவண பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. உபாகர்மா அடுத்த நாள் காயத்ரி ஜபம் மேற்கொள்கின்றனர். ரிக் வேதிகளுக்கு உபாகர்மம் சிராவண மாதத்தில் சிரவண நட்சத்திரம் வரும் நாளாகும். சிராவண மாதம் என்பது ஆடி அமாவாசையிலிருந்து ஆவணி அமாவாசை வரையுள்ள காலம். சிராவண என்பதன் திரிபுதான் ஆவணி. யஜூர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது சிராவண மாதப் பௌர்ணமியாகும்.

    சாம வேதிகளுக்கு ஒரு மாதம் தள்ளி அஸ்த நட்சத்திரத்தில் உபாகர்மம் மேற்கொள்கின்றனர். அநேகமாக பிள்ளையார் சதுர்த்தியிலோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னேயோ அல்லது பின்னேயோ இருக்கும்.

    திருவிளையாடல் நிகழ்வுகள்

    ஆவணி மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல உற்சவம் மிகவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, வளையல் விற்ற லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கியது போன்ற திருவிளையாடல் நிகழ்வுகளை மக்கள் விழாக்களாகக் கொண்டாடுகின்றனர். சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆவணி மாதத்தில் அவதரித்தவர்களாக விநாயகர், கிருஷ்ணர், சுவாமி தேசிகன் குமாரர் வரதாச்சாரியார், குலச் சிறையார், குங்கிலிய கலய நாயனார், இளையான்குடி மாறனார் ஆகியோர் கருதப்படுகின்றனர்.

    மகாபலிக்கு உகந்த நாள்

    ஆவணி மாத திருவோண நட்சத்திரம் மகாபலி சக்கரவர்த்திக்கு உகந்த நாளாகக் கூறுகின்றனர். பகவான் வாமன அவதாரம் எடுத்தது இந்த நாள் ஆகும். திரு ஓணம் பண்டிகை இந்த நாளில்தான். மகாபலி சக்கரவர்த்திக்காக வீட்டின் வாசலில் அத்தப் பூக்கோலம் போட்டு புத்தாடை உடுத்தி பல விதமான சுவையான பதார்த்தங்கள் செய்து உறவினர்களுடன் கலந்து மகிழ்ந்து உண்டு பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.

    பகவான் கிருஷ்ணன், இந்த ஆவணி மாதத்தில் அஷ்டமி நட்சத்திரத்தில் பூமியில் அவதரித்தார். இந்த நாளை நாம் கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம்.  பகவான் கண்ணன் அஷ்டமியில் பிறந்து அந்த நட்சத்திரத்துக்கு ஒரு ஏற்றம் தந்துள்ளார். கண்ணனை மனதார வேண்டி வாழ்வில் எல்லா வளங்களையும் மக்கள் அடைகின்றனர். பகவான் கண்ணணாகிய தரனை, பக்தி மார்க்கமாக தியானம் செய்தால் நமது வினைகள் அனைத்தும் மாண்டுவிடும் என்கிறார் நம்மாழ்வார்.

    ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில்தான் விநாயகர் அவதரித்தார். இந்த நாளில்தான் விநாயகர் சதுர்த்தி தினம் மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தியென வழிபடுகின்றனர். இந்நாளில் விநாயகரை வணங்கி, சந்திர தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் பொடிப்பொடியாகி விடுவதாக பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

    ஆவணி மாதத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. பகவான் விஷ்ணு பாதாள லோகத்தில் இருந்த குதிரை முகம் கொண்ட அசுரர்களிடமிருந்து வேதங்களைக் காப்பதற்காக தானும் குதிரை முகம் வடிவெடுத்து அவர்களை வென்று வேதங்களைக் காத்தார். 

    பகவான் குதிரை முகம் வடிவெடுத்ததால் இவரை ஹயக்ரீவர் என்ற திருநாமத்தால் பக்தர்கள் வழிபட்டனர். இவரை வழிபட்டால் கல்வியில் மேன்மை ஏற்படுகிறது. திருவஹிந்திரபுரம், செட்டி புண்ணியம் போன்ற தலங்களில் இந்த ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  • Aadi month

    ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும். ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும். ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

    கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

    ஆடி மாதம் ஏகாதசி துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம் சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

    ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவு கொடுத்து ரவிக்கை சீப்பு குங்குமச்சிமிழ் கண்ணாடி வளையல் தாம்பூலம் கொடுக்க வேண்டும். ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை நாச்சியார் திருமொழி திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் சகல நலன்களையும் நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து தூய ஆடை அணிந்து சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து செவ்வரளி செம்பருத்தி அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில் “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து கருப்புப் பட்டாடை நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை கருஊமத்தம் பூமாலை அணிவித்து மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

  • Aadi month festivals

    ஆடி 1ஆம் தேதி சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பு. ஆடிப்பண்டிகை கொண்டாட்டம் 

    ஆடி 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை விஷ்ணு சயன ஏகாதசி கோபத்ம விரதம் 

    ஆடி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா. பவுர்ணமி பூஜை 

    ஆடி 11ஆம் தேதி செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி, வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள் 

    ஆடி 15 சனிக்கிழமை நீலகண்ட அஷ்டமி 

    ஆடி 17 திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை 

    ஆடி 18 செவ்வாய்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு 

    ஆடி 19 புதன்கிழமை ஏகாதசி யோகினி ஏகாதசி 

    ஆடி 21 வெள்ளிக்கிழமை பிரதோஷம் 

    ஆடி 23 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை சர்வ அமாவாசை 

    ஆடி 26 புதன்கிழமை ஸ்வர்ண கவுரி விரதம் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம் 

    ஆடி 27 வியாழக்கிழமை நாக சதுர்த்தி விரதம் 

    ஆடி 28 வெள்ளிக்கிழமை நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம் 

    ஆடி 29 சனிக்கிழமை சஷ்டி விரதம், கருடாழ்வார் ஜெயந்தி 

    ஆடி 30 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி சூரிய வழிபாடு செய்ய ஏற்ற நாள் 

    ஆடி 31 திங்கட்கிழமை கடைசி ஆடிப்பண்டிகை

  • July 17 aadi month first day

    ஜூலை 17- ஆடி மாதம் முதல் நாள் ராசிபலன்….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     பெருமை 
    ரிஷபம் –     போட்டி 
    மிதுனம் –      வரவு
    கடகம் –      நன்மை 
    சிம்மம் –      சுகம் 
    கன்னி –      நிறைவு
    துலாம் –      வெற்றி 
    விருச்சிகம் –       ஆதரவு 
    தனுசு –       புகழ் 
    மகரம் –      அமைதி
    கும்பம் –     பயம் 
    மீனம் –       கோபம் 
    சந்திராஷ்டமம்    –   பூரட்டாதி, உத்திரட்டாதி

  • July 17 aadi month starts

    ஜூலை 17 – ஆடி மாதம் பிறப்பு – தட்சிணாயன புண்ணியகாலம்
    பிலவ வருடம் – ஆடி 1
    தட்சிணாயன புண்ணியகாலம்
    17-ஜூலை-2021 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    அஷ்டமி    ந.இ    12.31
    நட்சத்திரம்    :    சித்திரை    இ    11.59
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்