Tag: Midhunam

  • Midhunam December Monthly Prediction – Sakthi Online

    மிதுனம்:

    கிரகநிலை:
    பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – சப்தம ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் குரு  – லாப ஸ்தானத்தில் ராகு – விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:
    06-12-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    உலக அனுபவ அறிவை பெற்ற மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர். இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி  தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

    கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

    பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

    திருவாதிரை:

    இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

    இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும்.

    பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Midhunam Monthly Prediction – September 2022

    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

    கிரகநிலை:
    தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி(வ) – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் ராகு – விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றம்:
    01-09-2022 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
    25-09-2022 அன்று சுக்ர பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:
    காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட மிதுன ராசியினரே  நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

    தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

    குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

    பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும்.

    அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

    கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

    மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் பேச்சு திறமையால் காரியங்களை  சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.

    திருவாதிரை:
    இந்த மாதம் அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த மாதம் புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை  விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை  படிப்பது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

    பரிகாரம்: பானகம் அர்ப்பணித்து பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;
    சந்திராஷ்டம தினங்கள்: செப் 07, 08
    அதிர்ஷ்ட தினங்கள்: செப் 01, 02, 28, 29

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Midhunam Aug Monthly Prediction – 2022

    கிரகநிலை:
    ராசியில் சுக்ரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    07-08-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    10-08-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் இயல்பு உடைய மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள். இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம் போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

    குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

    பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.

    கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

    அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.

    மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  திறமையுடன்  காரியங்களை செய்வீர்கள்.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.  பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். 

    திருவாதிரை: 
    இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம்.  மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
    இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

    பரிகாரம்: குருவை வணங்கி வர மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். 

    சந்திராஷ்டம தினங்கள்: ஆக 11, 12
    அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 2, 3, 29, 30, 31

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Midhunam July Month Prediction – 2022

    மிதுனம்:

    கிரகநிலை:
    ராசியில் சூர்யன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ –  அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    12-07-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-07-2022 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    17-07-2022 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    29-07-2022 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுனராசியினரே இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.

    தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

    பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

    மிருகசிரீஷம் 3, 4:
    வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். வார தொடக்கத்தில் மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். 

    திருவாதிரை:
    தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    புனர்பூசம் 1, 2, 3:
    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    பரிகாரம்: வாரம் ஒரு முறை அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வர மன நிம்மதி கிடைக்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
    அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Midhunam October month predictions

    (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    மிதுன ராசியினரே இந்த மாதம் காரிய அனுகூலம்  ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். 

    தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். 

    பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

    கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். 

    அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். 

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

    மிருகசீரிஷம் – 3, 4:
    இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    திருவாதிரை:
    இந்த மாதம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

    புனர்பூசம் – 1, 2, 3:
    இந்த மாதம் உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும்.  

    பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன்; தேய்பிறை: வியாழன், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
    அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
     

  • midhunam rahu kedhu peyarchi palangal

    ராகு கேது பெயர்ச்சி 2020

    நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். 

    மிதுன ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில் பன்னிரண்டாம் வீடு  என்பது மோட்சம் அல்லது வீட்டுப் பேறு, தூக்கம், தொண்டு, முதலீடு மற்றும் செலவுகள் முதலியவற்றையும்; ஆறாம் வீடு, தன்னலமற்ற சேவை, அன்றாட நடவடிக்கைகள், தொழில்முறை வேலைகள், கட்டாயக் கடமைகள், சுகாதாரம், நோய்கள், கடன்கள் மற்றும் போட்டிகள் போன்ற அம்சங்களையும் குறிக்கின்றன.

    நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. 

    எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. 

    ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
                  
    மிதுன ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்குப் பன்னிரண்டாவது வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, உங்களுக்கு நன்மையையும் தீமையும் கலந்த பலன்கள் காத்திருக்கின்றன எனலாம். இதுவரை இருந்த குழப்பம் விலகி, உங்கள் எண்ணங்களில் ஒரு தெளிவு ஏற்படும். உங்களில் சிலர், இந்தக் காலகட்டத்தில், வெளிநாடுகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும், தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு எழலாம். 

    இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்; எனவே எச்சரிக்கை தேவை. சில முதலீடுகளைச் செய்யவேண்டும் என்ற ஆவலும், எண்ணமும் கூட, உங்கள் மனதில் எழலாம். இந்த நேரத்தில் இது உங்களுக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், கானல் நீர் போல, இது உங்களுக்கு ஏமாற்றத்தையே தரக் கூடும். உங்களில் சிலருக்கு, வெளிநாட்டு நண்பர்கள், அறிமுகங்கள் மூலம் சில அன்பளிப்புகள் வந்து சேரலாம். நாம் பிறருக்கு ஏதாவது கொடுத்தால், அல்லது தானம் செய்தால், அது போல ஏதாவது ஒன்றை அவர்கள் நமக்குத் திருப்பி அளிப்பார்கள், இதன் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். 

    ஆனால் இது உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களில் சிலர், சில ரகசிய அல்லது மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால் இது, உங்கள் சமூக அந்தஸ்து, பொது வாழ்க்கையில் நீங்கள் ஈட்டியுள்ள நற்பெயர் போன்றவற்றை பாதித்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் முடிந்தவரை  வெளிப்படையாக இருப்பதே சாலச் சிறந்தது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்கள், கணுக்கால்கள் போன்றவற்றில் பிரச்சினை, ஏற்பட வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது. 

    கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்கு ஆறாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்காது எனலாம். உங்களில் சிலர், சிறு உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம், இதனை நீங்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்க விரும்பாமலும் இருக்கலாம். எனவே, மற்றவர்களின் உதவியின்றி, நீங்களே இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். தவிர, சிலரது ஆரோக்கியம் கவலை தரும் வகையிலும் இருக்கக் கூடும். இதன் காரணத்தை, மருத்துவ நிபுணர்கள் கூட, துல்லியமாகக் கண்டறிய இயலாமல் போகலாம். எனினும், உங்கள் தொப்புள், குடல், வயிறு போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் கூட, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சில தொந்தரவுகள், சச்சரவுகள் போன்றவை எழக்கூடும். 

    பணியிடத்தில், வழக்கமான அமைதி இல்லாமல் போகலாம். எனவே மற்றவர்களுடன் சுமுகமாக, அனுசரித்து நடப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கைப் பாதையில் கூட, உங்கள் முன்னேற்றத்திற்குத் தடைகள் மற்றும் தாமதங்கள் எழலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் மனதில் சில சந்தேக எண்ணங்களும் தலைதூக்கக் கூடும். இது வெளிப்பட்டால், இது நாள் வரை நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படலாம். மற்றவர்கள் பார்வையில் நீங்கள் தாழ்ந்து விடவும் நேரிடலாம். ஒட்டுமொத்தமாக, இந்தக் காலக் கட்டங்களில் பொருள் இன்பங்களைத் தேடுவதை விட ஆன்மீகத் துறையில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும்.

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

  • Midhunam March 2020 palangal

     (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
    மிதுன ராசி அன்பர்களே
    இந்த மாதம் ஆரோக்கியம் சீராகவும், ஆயுள் பலம் கூடுவதற்கான கிரக நிலையும் அமையப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிறருக்கு சொல்லும் நல் வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். தந்தை பற்றிய எண்ணமும் அவர்தம் நற்செயல்கலும் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களை நல்வழிப்படுத்தும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.

    குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் பெரிய அளவில் பாதிப்பு இராது. உங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும். 

    உத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது. யாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.

    தொழிலதிபர்கள் வேலையில் அடுத்தவர்களை நம்பாது தானே காரியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். வங்கிகளிலிடமிருந்து கடனுதவி பெற்று தொழில் சம்மந்தமான கடன்கள் அடையும். பணியாளர்களுக்கு தகுந்த ஊதியத்தை அளித்து நற்பெயரை சம்பாதிப்பீர்கள்.உடல் நலனிலும் அக்கறை தேவை. 

    பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கும் பெண்கள் உறவினர்களின் சந்தோஷ வருகையால் உற்சாகமாக செயல்படுவார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியில் நல்ல கவனம் செலுத்தி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். 
    கலைஞர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.  வெற்றி வாய்ப்புகள் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு அனைத்தும் கிட்டும். நற்காரியங்கள் அனைத்துக்கும் அனுபவ சாலிகளின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள். 
    அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை  மூத்த அரசியல் வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும். நேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்து பார்த்து பின் கையெழுத்திடவும். 

    மாணவர்கள் தங்கள் படிப்பில் சீரான கவனம் செலுத்தி தேர்ச்சி  பெற்று ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவார்கள். தந்தை மகன் உறவு நிலைகளில் நல்ல முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சில பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றும்.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
    இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். 

    திருவாதிரை:
    இந்த மாதம்   பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது  நல்லது. அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. 

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

    பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும்.  பொருளாதாரம் உயரும்.
    அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Midhunam Feb month predictions

    மிதுன ராசியினரே, இந்த மாதம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

    குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

    தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக் கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

    அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

    கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
    பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.

    மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

    மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:  
    இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். எந்த விசயத்திலும் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், மனதில் ஏதோ ஒரு உணர்வு உங்களை வழி நடத்திச் செல்லும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான அழைப்பு வரலாம். தீடீரென வரும் வாய்ப்புகள் மனதிற்கு சற்று மகிழ்ச்சியைத் தரும். 

    திருவாதிரை:  
    இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். திடீர் செலவுகள் உங்களை வருத்தத்தை ஏற்படச் செய்யும். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். குல தெய்வ பிரார்த்தனை நடைபெறும். 

    புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்: 
    இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம். வேலை விசயமாக வெளியூர் செல்ல நேரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்றதாக அமையும். உடன் பிறந்தவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். 

    பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வந்து அர்ச்சிக்க நினைத்தது நடக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
    அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Midhunam 2020 predictions

    மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

    பொதுவாக மிகவும் சாதுவான தோற்றத்தைக் கொண்டவர்களான மிதுன ராசி அன்பர்களே நீங்கள் அறிவுக்கூர்மையும் அன்புள்ளமும் செயலாற்றலும் மிக்கவர்கள்தான். இந்த ஆண்டில் உழைப்பு கூடினாலும் அவற்றுக்கு இரட்டிப்பான வருமானம் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். உங்களைச் சார்ந்திருப்பவர்களையும் உயர்த்தி விடுவீர்கள். அதேநேரம் எவருக்கும் அவர்கள் கேட்காமல் அறிவுரைகள் கூற வேண்டாம். வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டது என்றிருந்தவர்களுக்கு அது மாறி நம்பிக்கை துளிர்விடும். வெளிநாடுகளுக்கு உத்தியோகம், கல்வி ஆகியவற்றிற்காகப் பயணம் செய்ய நேரிடும். அதோடு சமூகத்தின் மேல்தட்டு மக்களின் நட்பு கிடைக்கும். கடினமான வேலைகளையும் சரியாக முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆக அரசாங்க அதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

    உத்தியோகஸ்தர்களுக்கு  
    உங்கள் பணிகளில் கவனக் குறைவு கூடாது.  சக பணியாளர்கள் உங்கள் மீது புகார் எழுப்பத் தயாராயிருப்பார்கள்.  மறைமுக வருமானங்களில் அதிக எச்சரிக்கை தேவை.  நீங்கள் எதிர்பார்த்த்படி சிலருக்கு இடமாற்றங்கள் கிடைக்கக் கூடுமாயினும் உங்களுக்குத் திருப்திதர முடியாதபடி கடுமையான வேலைப் பளு நிறைந்ததாக இருக்கக் கூடும்.  உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறக்கூடிய வகையிலும்,  புகார் எழ வாய்ப்பில்லாத நிலையிலும் உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருவது அவசியம்.  

    வியாபாரிகளுக்கு  
    உங்கள் எதிரிகள் உங்களுக்குப் போட்டியாகக் கடுமையாக இயங்கக் கூடும் என்பதால் உங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நீங்கள் புதுமையாக ஏதேனும் சலுகைகளை அறிவித்து அவர்களை உங்கள் பக்கமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வியாபாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் குறைந்தபட்ச லாபத்துடன் நடைபெற்று வர வழிவகுக்கலாம்.  

    கலைத்துறையினருக்கு  
    புதிய வாய்ப்புகள் அமைவதற்குரிய நிலை சாதகமாக இல்லை என்றாலும் கடுமையாக உங்கள் முயற்சிகளைத் தொடர்வது அவசியம்.  உங்கள் வசதிகளில் பெரும்குறை ஏற்படாமல் பார்த்துக்  கொள்ளும் அளவில் சில வாய்ப்புகளை பெறக்கூடும்.  எல்லாரிடமும் இனிமையாகப் பேசி பழகுங்கள்.  இசை, நடனக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரிவினர் கூடுதல் வாய்ப்புகளைப் பெறக்கூடும். 

    மாணவர்களுக்கு  
    விளையாட்டை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.சிலர் படிப்பை நிறுத்தி விட்டு உத்தியோக வாய்ப்புகளைப் பெறவும் முயலக் கூடும்.  விளையாடும் போதும் வாகனங்களிலும் கவனம் தேவை. முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். 
    அரசியல்வாதிகள் எதிலும் எப்போதும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாக அமைகிறது. சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்தாலும் எதிரிகளின் கை ஓங்கியே காணப்படும். கட்சியில்  உங்கள் மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம். வாயைக் கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதே நேரம் பயணங்களில் வெற்றியடைவீர்கள்.

    பெண்களுக்கு  எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.  உடல் நலத்தில் அக்கறை தேவை.  கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நன்மைகளுக்கு வழிவகுக்கும். யாரிடமும் தேவையில்லாத பேச்சுகளை பேச வேண்டாம்.

    நட்சத்திரப் பலன்கள்: 
    மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:  இந்த ஆண்டில் எந்தப் பிரச்சனையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம்  போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம்.  உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக  சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும்.

    திருவாதிரை:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும்.  நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள்.  அதற்கு வாய்ப்பு இல்லை.  உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை.  பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை.

    புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்: இந்த ஆண்டில் உத்தியோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.  வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.  பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது  பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள்.

    பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியை அர்ப்பணித்து 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

    அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்

    +  குடும்பத்தில் சந்தோஷம் : – தொழிலில் சுணக்கம்

     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
    Mobile/WhatsApp: +91 7845119542

     

  • Midhunam December month predictions

    (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
    மிதுன ராசியினரே இந்த மாதம் அனைத்து கிரகங்களும் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. வீண்கவலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே  சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள்.

    பெண்களுக்கு அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.

    கலைத்துறையினருக்கு யாரிடமும் நிதானமாக பேசி பழகுவது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

    அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.

    பரிகாரம்: கல்யாண கோலத்தில் இருக்கும் வெங்கடாஜலபதியை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30
     

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542