Tag: Madurai

  • Madurai Meenatchi Amman Koil Free Laddu Prasadham

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

    உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. 

    இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த தீபாவளி அன்று, மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போன இந்த திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 ஆம் தேதி காணொலி காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார். 

    மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் அளிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
     

  • Madurai Meenatchi Amman Koil Laddu Prasadam

    மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்.  ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு,  உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

    அவ்வாறு மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும், தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • September 7 Madurai sundareswarar pattabishegam

    செப்டம்பர் 7 – மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
    விகாரி வருடம் – ஆவணி 21
    07-செப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    2.14
    நட்சத்திரம்    :    கேட்டை    கா    10.48
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Madurai pogamal Meenatchi Dharisanam

    நாகை மாவட்டத்தில் திருவெண்காட்டீஸ்வரர் ஆலயத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இங்கே சென்னைக்கு அருகில் திருவெண்காடுறை ஈஸ்வரர் இருக்கிறார்? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    மீனாட்சி அம்மனை மதுரை போகாமலேயே தரிசிக்கலாம். எங்கே என்று தெரியுமா? பாதாள சுரங்கம் உள்ள கோயில் எங்குள்ளது என்று தெரியுமா? இந்த கேள்விகளுக்கான பதில், சென்னைக்கு மிக அருகே உள்ள மதுராந்தகம் தான்.

    அந்த காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது இந்த ஊர் அதாவது நான்கு வேதங்களும் சம காலத்தில் ஓதப்பட்ட இடம் மதுராந்தகம்.  இங்கு ரயிலடிக்கு அருகே அமைந்துள்ளது திருவெண்காட்டீஸ்வரர் ஆலயம். ஐந்து நிலைகளைக் கொண்ட இந்த ஆலயம், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

    வெண்கொக்கு மந்தாரைகள் நிறைந்த காட்டில் இருந்ததால் வெண்காட்டீஸ்வரன் என்று இந்த ஈஸ்வரனுக்குப் பெயர் மதுராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதும், பராந்தக சோழன் ஆட்சிக்குட்பட்டும் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் பராமரிக்கப்பட்டதுமானது இக்கோயில்.

    வெண்காட்டீஸ்வர், இங்கு மீனாட்சி சமேதராக காட்சி தருகிறார். இங்குள்ள அம்மன், 6 அடி உயரம் கொண்டது. திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி,மதுராந்தகம் மீனாட்சி அம்மன், அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் மட்டுமே 6 அடி உயரத்தில் காட்சிதருகிறார்கள்.

    திருவெண்காட்டீஸ்வரர் உளி படாத திருமேனி கொண்டவர். தெற்கு பார்த்த வாக்கில் அம்மன்..இடதுபுறம் சூரியனின் அழகிய சிலை வடிவம். சிலையின் நகக்கண் கூட தெளிவாக தெரியும் வகையிலான அற்புத வடிவம் கொண்ட சூரியன், சூரியனார் கோயிலில் உள்ளதைப்போல உரு கொண்டவர்.

    சன்னதியின் ஒரத்தில் யாரும் கவனிக்காத வகையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு, இங்கு பாதாள சுரங்கமோ அல்லது நகைகள் வைக்கக்கூடிய அறையோ கர்ப்பகிரகத்திற்கு கீழே இருப்பதாக காட்டுகிறது. ஆனால், இதுவரை யாரும் இதனை ஆராய்ந்தது இல்லை. 

    சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் சுந்தரர், அப்பர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் காட்சியளிக்கின்றனர். மேலும் நான்கு பைரவர்கள் உள்ள கோயில்களில் மதுராந்தகம் கோயிலும் ஒன்று. 

    தோஷங்கள் நிவர்த்திசெய்யும் திருக்கோயில் என்பதால், திருமண தோஷம் முதல், பல்வேறு தோஷ நிவர்த்திக்கு இங்கு பக்தர்கள் வருவது வழக்கம். கடைசியாக 80 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்ததாக செவி வழி செய்தி இருந்ததையடுத்து ஊர் மக்களாக கூடி கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர். 

    பிரதோஷம் முதற்கொண்டு அனைத்து பூஜைகளும் விமரிசையாக நடக்கும் இந்த கோயிலில் வழிபட்டால், நாகை திருவெண்காட்டீஸ்வரரை தரிசித்தற்கான பலன்களை பெறலாம். 

    அதனால்தான், மண்ணிலே சிறந்த ஊர்..மாலவன் நடந்த ஊர்..மறைகள் நான்கும் வலம் வந்த ஊர்..மனதிற்கு இனிய ஊர் மதுராந்தகம் என்கிறார்கள். 
    ஓம் நமசிவாய!
    – பாமா

  • Madurai Meenatchi ThiruTherottam

    மதுரை சித்திரைத் திருவிழாவின் 11-ம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர்.

    சைவமும், வைணவமும் இணையும் வகையில் கொண்டாடப்படும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது என 15 நாட்கள் ஆண்டுதோறும் மதுரையில் இந்த விழாகளைகட்டி காணப்படும்.

    இந்த நிலையில், இன்று 11-ம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலை 5.50 மணிக்கு மேஷ லக்னத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தேர்களில் எழுந்தருளினர். பிறகு 6.10-க்கு பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி, அம்மன் தேர்கள் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தன. 

    தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய… என்ற பக்தி கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி- அம்மன் தேர்கள் வலம் வந்ததை காண ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

    தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை மற்றும் காளை வலம் வந்தன. இதனை கண்டு சிறுவர்-சிறுமிகள் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் ஆர்வத்துடன் வடங்களை பிடித்து தேர் இழுத்தனர். இந்த சித்திரை திருவிழாவால் மதுரை இன்று களைகட்டி காணப்பட்டது.

    பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள நிலையை அடைந்ததும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சுவாமி-அம்மன் தேர்களுக்கு பின்னால் சண்டிகேஷ்வரர், பஞ்சமூர்த்திகள் சப்பரங்களில் வீதிஉலா வந்தனர்.
     

  • Madurai Meenatch thiru Kalyanam

    உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா ஏப்ரல் 8 ஆம் தேதி  காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.

    கொடி மரத்தில் தர்ப்பைபுல் வைத்து வெண்பட்டுவால் சுற்றி பிரமாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது, மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் – சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    இதனை  தொடர்ந்தது விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நிகழ்வும், திக்குவிஜயமும், சிறப்பாக நடைபெற்றது.  அதனை தொடர்ந்து இன்று காலை  புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

    மேற்கு ஆடி வீதி -வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைக்கப் பட்டுள்ள அலங்கார பந்தலில் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கல்யாண மேடை பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

    திருக்கல்யாண வைபவத்தை பல்லாயிரகணக்கான மக்கள் அமர்ந்து கண்டு களித்தனர்.  இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது.  இதற்காக  அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார். 19 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

  • Madurai Meenachi Pattabishegam

    சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சூடி பட்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    அதன்படி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடைபெற்றது.  அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

     அதைத்தொடர்ந்து இரவு 8.10 மணி அளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டது. அப்போது பச்சை நிற பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

    பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது.
     

  • Madurai Chitirai Festival

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேத மந்திரங்கள் முழங்க சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும், சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 

    முன்னதாக கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16ம் தேதி திக்விஜயமும், மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 17ம் தேதியும் , வரும் 18ம் தேதியன்று காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19 ம் தேதி நடை பெறுகிறது.