Tag: Madurai

  • Shiva temples with the presence of the Lord!

    தமிழ்நாட்டில் சிவாலயங்களில் திருமால் சந்நிதி அமைந்திருப்பது சைவ-வைணவ ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகிறது. சிவனும் பெருமாளும் ஒருங்கிணைந்து அருள்பாலிக்கும் இத்தலங்கள் பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்தவை. இத்தகைய கோவில்கள் ஆன்மீகத்தில் தனித்துவம் பெற்று, பக்தர்களை ஈர்க்கின்றன.

    இதோ, அத்தகைய முக்கிய சிவாலயங்களின் பட்டியல்:

    1. சிதம்பரம்: கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி இங்கு அமைந்துள்ளது. நடராஜ வடிவத்தில் சிவனுடன் பெருமாள் அருள்பாலிப்பது பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது.

    2. கச்சி ஏகம்பரம்: நிலாத் துண்டப் பெருமாள் சந்நிதி, சிவபெருமானுடன் இணைந்து பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

    3. கொடி இடச் செங்குன்றார்: ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும் பலத்தையும் தருகிறது.

    4. சிக்கல்: கோல வாமனப் பெருமாள் சந்நிதி, சிவாலயத்துடன் புனிதத்தை பரப்பி, ஆன்மீக உணர்வை ஏற்படுத்துகிறது.

    5. திருநயா: ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி, பக்தர்களுக்கு மன அமைதியையும் ஆன்மீக உயர்வையும் அளிக்கிறது.

    6. திருச்செந்தூர்: கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி, முருகன் கோவிலுடன் சிவ-வைணவ ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

    7. மதுரை: கரியமாணிக்கப் பெருமாள் சந்நிதி, மீனாட்சி அம்மன் கோவிலுடன் இணைந்து பக்தர்களை கவர்கிறது.

    8. திருநாவலூர்: வரதராஜப் பெருமாள் சந்நிதி, சிவனுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

    9. திருநெல்வேலி: நெல்லை கோவிந்தர் சந்நிதி, ஆன்மீக பலத்தையும் அமைதியையும் வழங்குகிறது.

    10. திருப்புவனம்: கோவிந்தா சந்நிதி, சிவாலயத்துடன் இணைந்து புனிதத்தை பரப்புகிறது.

    11. பாண்டிக் கொடுமுடி: அரங்க நாதர் சந்நிதி, சிவ-வைணவ பக்தியை ஒருங்கிணைத்து பக்தர்களை ஈர்க்கிறது.

    12. திருவிடைமருதூர்: இங்கு பெருமாள் சந்நிதி, சிவனுடன் இணைந்து ஆன்மீக சிறப்பை வெளிப்படுத்துகிறது.

    13. திருக்கோளூர்: வைத்திய மாணிக்கப் பெருமாள் சந்நிதி, சிவாலயத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

    இத்தலங்கள் சைவ-வைணவ பக்தியின் அழகிய சங்கமத்தை வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில், இக்கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து, ஆன்மீக பயணங்கள் பிரபலமடைந்து வருகின்றன. பக்தர்கள் இங்கு சென்று, சிவனையும் திருமாலையும் ஒரே இடத்தில் வழிபட்டு, ஆன்மீக பலனை பெறுகின்றனர்.

  • Madurai meenatchi amman temple palalayam

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21-ஆம் தேதி பாலாலயம் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோவில் வளாகத்தில்  தீ விபத்து  ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  விமான பாலாலயம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கோவிலின் தங்க விமானங்கள், விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி  பாலாலயம் நடைபெறவுள்ளது.

    21ஆம் தேதி  காலை 09.30 மணி முதல் விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யாஹீதி, மஹாபூர்ணாஹீதி, தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும், 12.00 மணிக்கு மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடாகும்.

    12:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோயில் தங்கவிமானம் மற்றும் கோபுர பாலஸ்தாபன மஹாகும்பாபிஷேகம், மஹாதீபாராதனை நடைபெறும் என்றும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

  • Madurai Meenakshiyamman Temple Vaikasi Spring Festival

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா

  • Madurai meenatchi pattabishegam

    சிதம்பரத்தை ஆள்பவர் நடராஜர்; மதுரையை ஆள்பவள் மீனாட்சி… மதுரை நகரத்துக்கு அவள்தான் அதிகாரி. அங்கு அவளுடைய அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு எட்டு கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் அம்பிகை ஒவ்வொரு கோலத்தில் திருக்காட்சி தருகிறாள். திருவனந்தல் பூஜை தொடங்கி அர்த்த ஜாம பூஜை வரை எட்டு காலங்களில் முறையே மஹா ஷோடசி, பாலை, புவனை, கௌரி, சியாமளை, பஞ்சதசி, மாதங்கி, ஷோடசி ஆகிய எட்டு திருக்கோலங்களில் காட்சிதருகிறாள். எட்டு திருக்கோலங்களில் காட்சிதரும் அன்னை மீனாட்சி, மதுரையின் பேரரசி என்பதால், அன்னைக்கு நடக்கும் அபிஷேகத்தை யாரும் தரிசிக்க முடியாது. அபிஷேக அலங்காரங்கள் முடிந்து திரை விலகிய பிறகுதான் அன்னையை தரிசிக்க முடியும்.

    சியாமளாதேவியின் பக்தையாக இருந்த வித்யாவதி என்னும் கந்தர்வப் பெண்தான், அடுத்த பிறவியில் காஞ்சனமாலையாகப் பிறந்து மலையத்துவஜ பாண்டியரின் அரசியானார். அவர்களின் பூர்வ ஜன்ம புண்ணியத்தின் பலனாக, அன்னை சக்தியே அவர்களுக்கு மகளாகத் தோன்றி அருள் செய்தார். பாண்டியன் மகளாக அவதரித்த மீனாட்சி அம்மன், ஆண்மகனைப் போன்று போர்க்கலை உள்ளிட்ட சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.  

    மதுரையின் இளவரசியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மீனாட்சி, தன்னுடைய வீரத்தையும் போர்த்திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, அனைத்துப் பகுதிகளுக்கும் திக்விஜயம் செய்தார். எதிர்ப்பவர் யாருமில்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிக்கொடியும் நாட்டினார். இறுதியில் கயிலைக்கும் சென்றார். ஈசனைக் கண்டார். அவரைக் கண்ட மாத்திரத்தில் மீனாட்சிக்குள் இருந்த வீரம் மறைந்து, ஐயனிடம் அன்பு மேலிட்டது. பெண்மை மிளிர்ந்தது. அவரையே திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினார். திருமணமும் நடைபெற்றது. புராணக் காலத்தில் நிகழ்ந்த அந்த தெய்வத் திருமண வைபவத்தை நினைவுகூரும் வகையில், மதுரையில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

    மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். சித்திரைத் திருவிழாவின் 8-வது நாளான நாளை காலையில் விசேஷ அபிஷேகம், பூஜைகள் முடிந்த பிறகு, பட்டாபிஷேகம் நடைபெறும் பந்தலுக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக 'ராயர் கிரீடம்' எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும். உடன் செங்கோலும் கொண்டு வரப்படும். 

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்ற பிறகு, நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.
     

  • April 12 madurai meenatchi pattabishegam

    ஏப்ரல் 12 – மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    பிலவ வருடம் – பங்குனி 29
    மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    12-ஏப்-2022 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    ந.இ    3.29
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    கா    6.51
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • madurai chititrai thiruvizha kodiyetram

    மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோயிலும், அங்கு சித்திரைத் திருவிழாவும் மிகவும் விசேஷமானது.மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

    மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிவில் நிகழும் திருவள்ளுவர் ஆண்டு – 2053, 1431-ஆம் பசலி சித்திரைப் பெருவிழா சித்திரைத் திங்கள் 1-ஆம் நாள் முதல் சித்திரைத் திங்கள் 21ஆம் நாள் வரை (04.04.2022 முதல் 16.04.2022 வரை) மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இச்சித்திரைப் பெருவிழாவின் முக்கியத் திருநாட்களாக

    12.04.2082 சித்திரைத் திங்கள் 09-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும்,

    13.04.2022 புதன்கிழமை சித்திரைத் திங்கல் 10-ஆம் நான் அருள்மிகு மீனாட்சி அம்மன் திக்கு விஜயமும்,

    14.04.2022 வியாழக்கிழமை சித்திரைத் திங்கள் 11-ஆம் நாள் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் அருள்மிரு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும்,

    15.04.2022 வெள்ளிக்கிழமை சித்திரைத் திங்கள் 12-ஆம் நாள் காலை 6.30 மணிக்கு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும்

    16.04.2007 சனிக்கிழமை சித்திரைத் திங்கள் 13-ஆம் தாள் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    சித்திரைப் பெருவிழாவில் பக்தகோடி பெருமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மண்ணில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அவர் தம் நல்விழாப் பொலிவு கண்டார்த்தல் உண்மையாம் என உலகர் முன் வருகென உரைப்போம் எனும் சேக்கிழாரின் வாக்கிற்கு இணங்க அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரின் திருவருளைப் பெற்று எல்லா வளமும் பெற வேண்டி விழைகிறோம்.
     

  • Madurai meenatchi thirukalyanam

    மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண நிகழ்விற்கான கட்டண அனுமதி சீட்டினைப் பெற, நேரடியாகவும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்….
    மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வினை காண வரும் பக்தர்கள், 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500/- கட்டணச் சீட்டு, 2500 பேருக்கும் மற்றும் ரூ.200/- கட்டணச் சீட்டு 3200 பேருக்கும் வழங்கப்படவுள்ளது. பக்தர்கள் WWW.maduraimeenakshi.Org என்ற இணையதளத்திலும், மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியின் அலுவலகத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

    முன்பதிவு செய்பவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேசன்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மற்றும் செல்போன் எண், மெயில் ஐடிகளை சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகளவிற்கு முன்பதிவு செய்தால், கணினி முறை குலுக்கல் நடத்தி, பின்னர் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண உற்சவத்தன்று இலவச தரிசனத்திற்கு வருகை தரக்கூடியவர்களில் முதலில் வருகை தரக்கூடியவர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    முன்பதிவிற்கான விண்ணப்ப படிவம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், 500 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஒரு நபருக்கு இரு அனுமதி சீட்டும், 200 ரூபாய் கட்டணத்திற்கு ஒரு நபருக்கு 3 அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து, தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 13-ம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • April 22 Madurai meenatchi pattabishegam

    ஏப்ரல் 22 மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    பிலவ வருடம் – சித்திரை  9
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
    22-ஏப்-2021 வியாழன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    7.06
    நட்சத்திரம்    :    மகம்    ந.இ    3.40
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Madurai Meenatchi amman theppam

    உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரையில் தைப்பூச தெப்பத்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்பத் திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

    மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் கோவிலில் இருந்து புறப்பாடாகி சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மதுரை தெப்பக்குளம் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டனர்.

     இறைவன் இறைவி மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்மன் இன்று காலை எழுந்தருளினர். சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மைய மண்டபத்தை இரண்டு முறை வலம் வந்தது. பின், மீண்டும் முக்தீஸ்வரர் கோயிலில் சேர்த்தியானது. 

    மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியதும், அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வந்தனர். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடினர். 
     

  • Madurai Meenatchi Kodiyetram

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    கார்த்திகை உற்சவ கொடியேற்றம் இன்று நடந்தது. சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் வருகிற 10-ந்தேதி செவ்வாய்கிழமை திருக்கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது. அன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்படும். திருக்கார்த்திகை அன்று இரவு சுவாமி, அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி மாசிவீதியில் எழுந்தருளுகின்றனர்.