Tag: Komadha

  • Komadha poojai

    வீட்டில் பசு இருப்பவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய வேண்டும் என்பதில்லை. பசு இல்லாதவர்களும் பசு வைத்திருப்பவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு வாங்கி, இந்த பூஜையை செய்து விட்டு பசுவைத் திருப்பித் தரலாம்.

    பூஜைக்காக பசுவைத் தந்து உதவுபவர்கள் பசுவையே தானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள்' என்று சாஸ்திரம் சொல்கிறது. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.

    பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.

    கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா பணக் கஷ்டம் நீங்கும் . ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும். ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.

    சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும். பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும். ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்கும்.
     

  • Komadha vazhipadu

    காமதேனு மந்திரத்தை அதன் ரகசியங்கள் அறிந்து பூஜிப்பவனுக்கு கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும். பசுவின் உடலில் சகல தெய்வங்களும் உறைவதால் ஆண்டுக்கு ஒருமுறையாவது கோ பூஜை செய்ய வேண்டும்.

    பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளியிருக்கிறார், பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர். தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும்.

     தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்.  பசுவின் பின் பக்கத்தைத் தரிசிக்க வேண்டும். அதனால் லட்சுமியைத் தரிசித்த புண்ணியம் ஏற்ப்படும். மேலும் அந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டால் கங்கையில் நீராடிய புண்ணியமும் ஏற்படும் . பசுவின் பாதத்துளி மேலே பட்டால் வாயவ்ய ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
     

  • Komadha Gods

    கோமாதாவின்  உடற் பகுதியில் உறையும் தெய்வங்களைப் பற்றியும், தேவகணங்களைப்  பற்றியும் நமக்கு தெரிந்த சில ,தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.

    கோமாதாவின்  முகம் மத்தியில்  -சிவன்

     வலக் கண் – சூரியன்

    இடக் கண் – சந்திரன்

    மூக்கு வலப்புறம் – ஆறுமுகக் கடவுள் முருகன்

    மூக்கு இடப்புறம் – முழு முதற்கடவுள் விநாயகர்

    காதுகள் – அஸ்வினி குமாரர்

    கழுத்து மேல்புறம்  – ராகு

    கழுத்து கீழ்புறம்  -கேது

    கொண்டைப்பகுதி –நான்முகன்  பிரம்மா                    

     முன்கால்கள் மேல்புறம் – கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்

     முன்வலக்கால் –  பைரவர்      

    முன் இடக்கால் –  சல்லின் செல்வர் ஹனுமார்

     பின்னங்கால்கள் –  பராசரர், விஷ்வாமித்திரர்

     பின்னகால் மேல்பகுதி – நாரதர், வசிஷ்டர்

    பிட்டம் கீழ்ப்புறம் –  கங்கை

    பிட்டம் மேல்புறம் – திருமகளான லக்ஷ்மி

    முதுகுப்புறம் – பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி  

    வயிற்றுப்பகுதி – ஜனககுமாரர்கள் பூமாதேவி

    வால் மேல் பகுதி – நாகராஜர்

    வால் கீழ்ப்பகுதி – ஸ்ரீமானார்

    வலக்கொம்பு – வீமன்

    இடக்கொம்பு – இந்திரன்

    முன்வலக்குளம்பு – விந்தியமலை

    முன்இடக்குளம்பு – இமயமலை

    பின் வலக்குளம்பு – மந்திரமலை

    பின் இடக்குளம்பு -த்ரோணமலை

    பால்மடி – அமுதக்கடல்

    முப்பத்துமுக்கோடிதேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பசுவை காலையில் எழுந்ததும் தொழுவத்தில் காண்பது சுபசகுனமாக கருதப்படுகிறது.