Tag: Kanchi

  • Garuda vagananthil kanchi varadharaja perumal

    உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கேவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவத்தை யொட்டி தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜப்பெருமாள்

    உலகப் புகழ்பெற்றதும் அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 31-ஆம் தேதியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக  நடைபெற்று வருகிறது.கருட சேவை உற்சவத்தையொட்டி  அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு,தாயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆனது நடைபெற்று மலையிலிருந்து சாமி எழுந்தருளச்செய்யப்பட்டது.

    அதன் பின் தங்க கருட வாகனத்தில் பல்வேறு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு,பட்டு உடுத்தி,திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வரதராஜப்பெருமாள் எழுந்தருள சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு தங்க கருட வாகனத்தில் காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகளில் பொது மக்கள் பகதர்கள் வெள்ளத்திற்கு மத்தியிலே வீதி உலா வந்து வரதராஜப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    இந்த கருடசேவை உற்சவத்தினை காண  உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரகணக்கான மக்கள் வழிநெடுகிலும் காத்திருந்து கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜப்பெருமாளுக்கு கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து மனமுருகி வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கருட சேவை உற்சவத்தைக்காண வருகை தந்த பொதுமக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர்,மோர்,அன்னதானங்களும் பலதரப்பினர் சார்பில் வழங்கப்பட்டது.

    கருட சேவை உற்ச்சவத்தினையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில்  பல நூற்றுக்கணக்கான போலீசார் காஞ்சிபுரம் மாநகர் முழுவதிலும்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும், எவ்வித குற்ற செயல்களும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே சிசிடிவி  காண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும்,மக்கள் கூட்டம் கூடும் அதிக கூட்ட நெரிடல் பகுதிகளில் உயர் கூண்டுகள் அமைத்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  • Kanchi maha periyavar arpudham

    பெரியவாளுடைய அத்யந்த பரம பக்தர் சுப்ரமண்ய ஐயர். சதா சர்வ காலமும் பெரியவாளுடைய கருணையை எண்ணி எண்ணி உருகுவார்.  ஒருமுறை அவருடைய பெண்ணும் மாப்பிள்ளையும் காஞ்சிபுரம் சென்று பெரியவாளை தர்சிக்க கிளம்பினார்கள். ஐயருக்கோ தன் பகவானுக்காக ஏதாவது குடுத்தனுப்ப ஆசை! தினமும் வீட்டில் பிள்ளையாருக்கு நிவேதிக்க வைத்திருந்த அவல் பொரியை ஒரு பொட்டலமாக கட்டி அவர்களிடம் கொடுத்து பெரியவாளிடம் சமர்ப்பிக்குமாறு சொன்னார்.

    பக்தனின் "பாவம்" எல்லாருக்கும் புரியுமா? கிளம்பும் அவசரத்தில் அஸ்ரத்தையாக அந்த பொட்டலத்தை அவர்கள் தரையில் வைக்க,அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த பேரன் பேத்திகள் அதை தட்டிவிட,அத்தனை அவல் பொரியும் பூமியில் சிதறின. அவர்கள் அதையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள்! ஐயருக்கு இந்த விஷயம் அவர்கள் கிளம்பிப் போனதும்தான் தெரிய வந்தது. பாவம்!துடித்துப் போய்விட்டார்!

    தேனம்பாக்கத்தில் அன்று ஏகக்கூட்டம்! புதுமாதிரியாக அன்று பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்தது ……
    விநாயகர் சன்னதிக்கு முன்பாக!

    பாரிஷதர்களுக்கு ஒரே குழப்பம்!

     எதற்காக இன்று பிள்ளையார் சந்நிதியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்?  தரிசனத்துக்கு வந்தவர்கள் தினுசு தினுசாக பழங்கள், பூக்கள் என்று கூடை கூடையாக பெரியவா முன் சமர்ப்பித்தவண்ணம் இருந்தனர்.

    ஐயரின் பொண்ணுக்கோ, அப்பா குடுத்த இந்த அவல் பொரி பொட்டலத்தை எப்படி பெரியவாளிடம் குடுப்பது? என்று சங்கடமாக இருந்தது.  ஏதோ ஒரு கோடியில் வேறு போய் நின்று கொண்டிருந்தனர். கிட்டே போவது சாத்யமாகப் படவில்லை.அப்போது பெரியவா மிக மிக அழகாக ஒரு விளையாட்டை அரங்கேற்றினார்.

    " கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழை பற்றி பேச ஆரம்பித்துவிட்டு,
    "இன்னிக்கி பிள்ளையாருக்கு ஏகப்பட்ட பழங்கள் வந்துடுத்து!……ஆனா,..இந்த……அவல் பொரிதான் காணோம்! யாராவுது அவல் பொரி கொண்டு வந்திருக்கேளா?……."

    தெய்வத்தின் குரல் தேனாக பாய்ந்தது, ஏதோ ஒரு கோடியில் தர்மசங்கடத்தில் குழம்பிக் கொண்டிருந்த ஐயரின் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்!  அவ்வளவுதான்!கூட்டத்தை கிழித்துக் கொண்டு, சாதாரண பேப்பரில் சுற்றி இருந்த அவல் பொரியை எடுத்துக்கொண்டு போய் பெரியவா முன்னால் சமர்ப்பித்தனர். சுப்ரமண்ய ஐயர், தன் அன்பை மட்டுமே தோய்த்து, பேப்பரில் சுற்றிக் கொடுத்திருந்த அவல் பொரியை தன் திருக்கரங்களால் தொட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

    குசேலன்,அழுக்கு மேல் வஸ்த்ரத்தில் முடிந்து வைத்திருந்த அவலை க்ருஷ்ணன் கைகளால் அள்ளி அள்ளி உண்ட கருணையை பாகவதத்தில் பல முறை படித்து மகிழ்ந்திருப்போம்….. இங்கே பெரியவா நடத்திய அவல் பொரி நாடகம் மூலம் பகவானின் பக்த வாத்சல்யத்தையும் அனுபவிப்போம்!

    அம்மாவுக்கு தன் வத்ஸ் ( குழந்தை) அழுக்கான கைகளால், தன் வாய்க்குள் இருந்து ஒழுகும் எச்சிலில் பிரட்டி, ஏதாவது தின்பண்டத்தை அம்மாவின் வாயில் போடும்போது, அவளுக்கு குழந்தையின் கை அழுக்கோ,எச்சிலோ எதுவுமே தெரியாது! அதன் அன்பு ஒன்று மட்டுமே தெரியும்.  சாதாரண லோகாயத அம்மாக்களே இப்படி அன்பில் மயங்கினார்கள் என்றால்,லோகமாதாவான பெரியவாளுடைய வாத்சல்யத்தை அளவிட முடியுமா?
     

  • Kanchi Ulagalandha perumal

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ளது உலகளந்த பெருமாள் கோயில். உலகை அளந்தவர் என்னும் பெயர் பெற்ற பெருமாள்தான் உலகளந்த பெருமாளாக அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தை பற்றி அறியும் முன் திருவிக்ரமனாக பெருமாள் எடுத்த அவதாரத்தை சற்று பார்ப்போம். மகாபலிச் சக்ரவர்த்தியின் ஆட்சிக்காலம் பொன்னானது. தர்மத்தின் வழி நடந்து வந்தவன். மகாவிஷ்ணுவும் தர்ம நியாயம் தவறாதவர். அவர் எவ்வாறு தர்மத்தின் வழி நடந்து வந்த மகாபலியை வதைப்பது என்று தீவிரமாக யோசித்து, அவனது வாழ்க்கையில் தர்மநியதி வழுவி நடந்துகொண்ட நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

    நல்ல குணங்கள் பல நிறைந்திருந்தும், மகாபலிச் சக்கரவர்த்தி அவனுடன் கூட இருந்தவர்களின் தூண்டுதலால் தேவேந்திரனின் இந்திரலோகத்தை தன் வசம் எடுத்து கொண்டான்.நூறு அஸ்வமேத யாகங்களை செய்தவனே, இந்திர பதவியை அடையலாம் என்பது நியதி. மகாபலிச் சக்கரவர்த்தியோ அஸ்வமேதயாகங்களை செய்யாமல் இந்திர லோகத்தை தன் வலிமையால் கைப்பற்றியிருந்தான். எனவே அவன் நீதி தவறி இருக்கிறான் என்பது நினைவுக்கு வந்தது.

    அவனை வதைத்து இந்திரலோகத்தை இந்திரனுக்கு மீட்டுத் தர காஸ்யபர், அதிதி தம்பதியினரின் மகனாக விஷ்ணு பிறந்தார். அவர்கள் அவனுக்கு வாமனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மகாபலிச் சக்கரவர்த்தி யாகம் ஒன்றை செய்வதை கேள்விப்பட்டு. மகாவிஷ்ணு தான் தனிமையாக ஓர் இடத்தில் தவம் செய்ய விரும்புவதாகவும் அதனால் தனக்கு மூன்றடி இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.அதன்படி வாமனரின் கைகளில் தாரை வார்த்துக் கொடுத்த மகாபலிச் சக்கரவர்த்தி, மூன்றடி இடத்தை அவரது காலால் அளந்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து திரிவிக்ரமனாக மாறி பூமியை ஒரு அடியாகவும், வானுலகத்தை ஒரு அடியாகவும் அளந்து, இன்னொரு அடிக்காக மகாபலிச் சக்கரவர்த்தி சிரத்தில் தன் திருவடியை வைத்து அவனை பாதாளத்தில் கீழ் அழுத்தினார் என்பது புராண வரலாறு.

    அதன்படி இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள் உலகளந்த நிலையில் காட்சி தருகிறார். கருவறை மிகவும் இருட்டாக இருப்தால், அங்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் காட்டும் தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் திருவிக்ரமனாகத் திகழும் திருமாலை காண முடியும். மேலும் சர்ப்பதோஷம் உள்ளவர்களும் குழந்தை இல்லாதவர்களும் இந்த சன்னிதியில் உள்ள  ஆதிசேஷனை வணங்கி பூஜித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் அனைத்து வித தோஷங்களையும் நீக்கி மன வலிமைத் தருபவராக இத்தல பெருமாள் போற்றப்படுகிறார்.
     

  • Kanchi bramorchavam

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந் தேதி காலை சண்டி யாகத்துடன் விழா தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

     28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றம், காலை வெள்ளி ரிப‌ஷ வாகனம், மாலை தங்கமான் வாகனத்தில் அம்மன் நான்கு ராஜவீதிகளில் திருவீதிவுலா நடைபெறுகிறது.

    மார்ச் 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. பிரம்மோற்சவத்தின் 11-ம் நாளான மார்ச் 8-ந் தேதி திருக்கோவில் தெப்பகுளத்தில் அம்மன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நவராத்திரி 9 நாட்கள் மட்டும் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவத்தின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
     

  • Kanchi Kamatchi amman koil pal kudam

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை ஒட்டி பால்குட விழா.

    உலகப் பிரசித்தி பெற்ற சக்தி பீடத்தின் முக்கிய ஸ்தலமான காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் ஐப்பசி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்ததாக ஐதீகம் அதனை ஒட்டி இன்று காஞ்சிபுரம் சங்கரமடம் காமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 700-க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி சங்கர மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்றனர்

  • Kanchi Kamatchi Amman Koil

    காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். அவளது மேலிரு கரங்களில் பாசம், அங்குசம்; கீழிரு கரங் களில் கரும்புவில், புஷ்பபாணம் ஏந்தியருள்கிறாள். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஸ்ரீசக்ரத்தில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை தேவியின் வஸின்யாதி வாக்தேவதைகள் வீற்றருள்கின்றனர். மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சாந்தமான காமாக்ஷியாக ஆதிசங்கரர் சாந்தப்ப டுத்தினார். 

    இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன. அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். கோயிலின் உள்ளே பிராகாரங்களும், தெப்பக்குளமும், நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. வெளிப்பிராகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கருவறை கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம்.

    ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒட்டியாண பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில். 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான கள்வர் சந்நதியும் இங்கு இருப்பது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்த லஹரி பாடினார். அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. காமாட்சியை வழிபட வரும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று. மூல கருவறையில் காமாட்சி அமர்ந்த நிலையில் அருள, உற்சவ காமாட்சி நின்ற நிலையில் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதியோடு தரிசனம் அளிக்கிறாள். 

    இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி. ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பா நதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. ஆதிசங்கரருக்கு இக்கோயிலில் தனிச் சந்நதி உண்டு. 

    உற்சவ காமாட்சி ஆலயத்தை விட்டு வெளியே ஊர்வலம் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் ஆதிசங்கரர் சந்நதியில் நின்று அனுமதி கேட்டு விட்டே செல்வதும், வருவதும் இத்தல அற்புதம். இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி,  பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷம் ஏற்படுவதில்லை. 
     

  • Kanchi athi varadhar

    சின்ன காஞ்சிபுரத்தில் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஆனந்தபுஷ்கரினி என்ற குளத்தில் இருந்து வருகிற 1/07/2019 தேதியில் அத்திவரதர் வெளியே வந்து நாற்பத்து எட்டு 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் அருள்புரிகிறார். நின்ற கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்.  சயன கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்
     
    அடுத்த தரிசனம் 2059ல்  நாற்பது ஆண்டுகள் பின் கிடைக்கும். 40 ஆண்டு ஒரு முறை மட்டுமே அத்திவரதரை காண முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ,  நம்   கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

    இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி. மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.

    பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

    பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

    வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள்,  40 வருடங்களுக்கு  ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

    வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்…

    நின்ற கோலத்திலும்,சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

  • Kanchi varadharaja Perumal Garuda sevai

    101 பஜனை கோஷ்டிகள் பாடி வர பல லட்சக்கணக்கான பக்தர்கள் காண  காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்  தங்க கருட வாகனத்தில் வீதியுலா.

    வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவத்தின் 3-ஆம் நாள்  முக்கிய உற்சவமான கருட சேவை  உற்சவம்   நடைபெற்றது.

    கருட சேவை உற்சவத்தை யொட்டி விடியற்காலை முதலே  கோவில் வளாகத்தில்  குவிந்த பக்தர்கள்  காணும் வகையில் வரதராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி கோபுர வாசலில் வந்து நின்று   பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா,கோவிந்தா என கோஷமிட்டு பக்தியுடன் வணங்கினர்.

    இதனை தொடர்ந்து உள்ளூர்,வெளியூர்களிலிருந்து  வருகை தந்த  101 பஜனை கோஷ்டிகள் பாடிவர கருட வாகனத்தின் முன்னும் பின்னும் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க காஞ்சிபுரம் நகரின்  முக்கிய வீதிகளில் வலம் வந்து பல லட்ச கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கருடசேவையை காண வந்த மக்களுககு பக்தர்கள் வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கினார்கள்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் கருட சேவை உற்சவத்தை காண தமிழகம் மட்டும் இல்லாமல் பல வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கானோர்  வந்து  சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Kanchi Maha Periyavar Jayanthi Vizha

    சென்னையை அடுத்த பம்மலில் இருக்கும சிவா விஷ்ணு அலையத்தில் காஞ்சி மகாபெரியவர் ஸ்ரீ சந்த்திரசேகரேந்திர ஸ்ரஸ்வதி சுவாமிகள் 126வது ஜெயந்தி மாஹோத்ஸவம் நடைபெற்றது. 

    காலை 6 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கிய மகா பெரியவரின் ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், நவகிரஹ, ஆயுஷ்ய, கலஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ மகாபெரிவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டது, 

    அதனையடுத்து கோவிலில் உள்ள விநாயகர், வள்ளி தேவானையுடன் கூடிய சுப்பிரமணியர், ஐய்யப்பன், தட்ணாமூர்த்தி, விஷ்ணு துர்கை,கோதண்டராமர், அஞ்னேயர் உள்ளிட்ட நவகிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

    சுற்றுவட்டத்தில் இருந்து  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், மதியம் அன்னதாமனம் வழங்கப்பட்டது. 
     

  • Kanchi atthi varadahar

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 40  ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் ஆதி அத்தி வரதர் .

    வரதராஜ பெருமாள் கோவிலில் முன்பு மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர் சிலை. இப்பொழுது அனந்த சரஸ் குளத்தில் நீருக்கு அடியில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே இருந்து மொத்தம் 48 நாட்கள் தரிசனம் தருவார். 48 நாட்கள் வெளியில் இருக்கும் அத்தி வரதர் முதல், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த, 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். இதற்கு முன்

    அத்தி வரதர் 1979ம் ஆண்டு  ஜூலை, 2ல் எழுந்தருளினார். அப்பொழுதே பல லட்சம் மக்கள் தரிசனம் செய்துள்ளார். தகவல் தொடர்பு அதிகளவில் இல்லாத அக்காலத்திலேயே பல லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளதால். இப்பொழுது  அதைவிட பலமடங்கு பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.